லிம் கோக் விங் படைப்பாற்றல் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்
சைபர்ஜெயா நகரில் உள்ள ஒரு தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
லிம் கோக் விங் படைப்பாற்றல் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் (மலாய்: Universiti Teknologi Kreatif Limkokwing; ஆங்கிலம்: Limkokwing University of Creative Technology அல்லது Limkokwing; (LUCT) என்பது மலேசியா, சிலாங்கூர், சிப்பாங் மாவட்டம், சைபர்ஜெயா நகரில் உள்ள ஒரு தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் ஆகும். 1991-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்தப் பல்கலைக்கழகம், ஆப்பிரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசியா கண்டங்களில் வளாகங்களைக் கொண்டுள்ளது. மலேசியாவில் அதன் முதன்மை வளாகத்தைக் கொண்ட இந்தப் பல்கலைக்கழகத்தில் 150-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 30,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.[1]
வடிவமைப்பு, பல்லூடகம், தகவல் தொடர்பு, வணிகம் மற்றும் தொழினுட்பம் உள்ளிட்ட பல்வேறு படிப்புத் துறைகளில் இளங்கலை மற்றும் முதுகலை நிலைகளில் பரந்த அளவிலான கல்வித் திட்டங்களை இந்தப் பல்கலைக்கழகம் வழங்குகிறது.[2]
கல்வித் திட்டங்களுக்கும் மேலதிகமாக; விளையாட்டு நிகழ்வுகள், நிகழ்த்துக் கலைகள், பண்பாட்டு நடவடிக்கைகள் மற்றும் சமூகச் சேவை உள்ளிட்ட பாடநெறிகளுக்கு அப்பாற்பட்ட பல்வேறு செயல்பாடுகள், மன்றங்கள், மாணவர்கள் பங்கேற்பதற்கான அமைப்பு வசதிகளையும் இந்தப் பல்கலைக்கழகம் வழங்கி வருகிறது.[1]
Remove ads
வரலாறு
லிம் கோக் விங் பல்கலைக்கழகம் (LUCT), 1991-ஆம் ஆண்டு லிம் கோக் விங் (Lim Kok Wing) என்பவரால் நிறுவப்பட்டது. 2002-ஆம் ஆண்டு, பல்கலைக்கழகக் கல்லூரியாக நிறுவப்பட்ட முதல் தனியார் கல்லூரி என்ற பெருமையைப் பெற்றது.
வளாகங்கள்
திசம்பர் 2018 நிலவரப்படி, லிம் கோக் விங் பல்கலைக்கழகம் பின்வரும் வளாகங்களைக் கொண்டிருந்தது:
- லிம் கோக் விங் போர்னியோ வளாகம்: கூச்சிங், சரவாக்.
- லிம் கோக் விங் போட்ஸ்வானா வளாகம்: காபரோனி.[3]
- லிம் கோக் விங் கம்போடியா வளாகம்: நோம் பென்.[4]
- லிம் கோக் விங் லெசோதோ வளாகம்: மசேரு, லெசோத்தோ, லெசோதோவில் முதல் மலேசிய பல்கலைக்கழக வளாகம்.[5]
- லிம் கோக் விங் மலேசியாவின் முதன்மை வளாகம்: சைபர்ஜெயா, சிலாங்கூர்.[6]
- லிம் கோக் விங் ஐக்கிய இராச்சிய வளாகம்: இலண்டன்.
- லிம் கோக் விங் சுவாசிலாந்து வளாகம்: இம்பபான், எசுவாத்தினி.[7]
- லிம் கோக் விங் சியரா லியோன் வளாகம்: பிரீடவுன்.[8]
- லிம் கோக் விங் உகாண்டா வளாகம்: நமதாபா (Namataba).[9][10]
Remove ads
கல்வித் திட்டங்கள்
2022-ஆம் ஆண்டு நிலவரப்படி, லிம் கோக் விங் பல்கலைக்கழகம் இரண்டு சான்றிதழ் படிப்புகளையும்; இருபத்தி இரண்டு இளங்கலை பட்டப் படிப்புகளையும் வழங்குகிறது.[11]
தரவரிசை பட்டியல்
மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads


