அசோகரின் கல்சி பாறைக் கல்வெட்டு
From Wikipedia, the free encyclopedia
Remove ads


அசோகரின் கல்சி பாறைக் கல்வெட்டு (Rock edicts of Khalsi),இந்தியாவின் வடக்கில் இமயமலையில் உள்ள உத்தராகண்டம் மாநிலத்தின் டேராடூன் மாவட்டத்தில் உள்ள கல்சி எனும் கிராமத்தில் உள்ளது. இப்பாறைக் கல்வெட்டு பேரரசர் அசோகர் கிமு 250-இல் நிறுவினார். இக்கல்வெட்டு பிராமி எழுத்துக்களைக் கொண்டு பிராகிருத மொழியில் செதுக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு கடிமான பளிங்குக் கல் பாறையில் நிறுவப்பட்டது. [1] இக்கல்வெட்டை இந்தியத்தொல்லியல் ஆய்வகத்தின் தொல்லியல் ஆய்வாளர் அலெக்சாண்டர் கன்னிங்காம் 1850-ஆம் ஆண்டில் கண்டுபிடித்தார். அசோகரின் பெரும் பாறைக் கல்வெட்டுக்களில் இதுவும் ஒன்றாகும்.
Remove ads
கல்வெட்டின் குறிப்புகள்
கல்வெட்டின் கிழக்கு முகத்தில் 1 முதல் 12 வரிகள் கொண்டது. வலது பக்கத்தில் (வடக்கு முகம்) ஒரு யானை உருவம் மற்றும் பிராமி எழுத்தில் கஜதாமா என ஒரு சொல்லும் செதுக்கப்பட்டுள்ளது.[1][2]
கல்வெட்டின் 13-வரியில் எலனியக் கால கிரேக்க மன்னர்களான இரண்டாம் அந்தியோசூஸ், இரண்டாம் தாலமி, இரண்டாம் அந்தியோசூஸ் கோன்டாஸ், சிரேனின் மகஸ், இரண்டாம் அலெக்சாண்டர் எபிரஸ் ஆகியவர்கள் பெயர் மற்றும் ஆண்ட நாடுகள் குறிக்கப்பட்டுள்ளது.[3] மேலும் அசோகரின் ஆட்சியில் கிமு 260 மற்றும் கிமு 230-ஆம் ஆண்டு காலத்திய நிகழ்வுகள் குறித்துள்ளது.[3][4] and very damaged in the Mansehra inscription.[5]
- தற்போது கல்வெட்டின் அமைவிடம்
- அசோகரின் கட்டளைகள்
- யானை உருவம்
- கல்வெட்டின் 13-வது வரி
- Stamping of the inscription: Edicts from 1 to 12, and beginning of 13.
- Stamping of the south portion of the inscription. Continuation of Edict 13, and Edict 14.
- The Elephant.
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
உசாத்துணை
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads