ஆப்பிரிக்க ஒன்றியம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஆபிரிக்க ஒன்றியம் (African Union) 54 ஆபிரிக்க நாடுகளால் உருவாக்கப்பட்ட ஒரு சர்வதேச அமைப்பு ஆகும். இவ்வமைப்பில் உள்ளடங்காத ஒரேயொரு ஆபிரிக்கக் கண்டத்தைச் சேர்ந்த நாடு மொரோக்கோ ஆகும். இவ்வமைப்பு 26 மே 2001 இல் அடிஸ் அபாபாவில் உருவாக்கப்பட்டு 9 யூலை 2002 இல் தென்னாபிரிக்காவில்[7] ஆபிரிக்க ஒன்றியத்திற்கான அமைப்பிற்குப் (OAU) பதிலாக நிறுவப்பட்டது. ஒரே அரசியல், பொருளாதார, பாதுகாப்பு குடையின் கீழ் ஆபிரிக்க நாடுகளை கொண்டுவருவதே ஆபிக்க ஒன்றியத்தின் தொலை நோக்கு திட்டமாகும். ஆபிரிக்காக் கண்டத்தில் மக்களாட்சியை நிறுவுவது, மனித உரிமைகளை பாதுகாப்பது, தாங்குதிற பொருளாதாரத்தை கட்டியெழுப்புவது, உள்ளூர் சண்டைகளுக்கு இணக்கம் காண்பது, ஆபிரிக்க பொது சந்தையை உருவாக்குவது ஆகியவை இவ் ஒன்றியத்தின் நோக்கங்கள் ஆகும்.
Remove ads
அங்கத்துவம்
ஆபிரிக்காவிலும் ஆபிரிக்காவை அண்டிய கடற்பரப்பிலும் மேற்கு சகாராப் பிரதேசத்திலும் உள்ள நாடுகள் ஆபிரிக்க ஒன்றியத்தில் அங்க்த்துவம் வகிக்கின்றன. மொரோக்கோ ஒருதலைப்பட்சமாகச் சேர்த்துக்கொள்ளாமல் விடப்பட்டதுடன் தற்போது நான்கு நாடுகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளன. பின்வரும் நாடுகள் ஆபிரிக்க ஒன்றியத்தின் உறுப்பினர்களாக உள்ளனர்.[8]
இடைநீக்கம் செய்யப்பட்ட அங்கத்தவர்கள்
எகிப்து – 2013 எகிப்திய ஆட்சி கவிழ்ப்பின் பின்னர் இடைநீக்கம் செய்யப்பட்டது.[9]
மடகாசுகர் – 2009 மலகாஸி அரசியல் நெருக்கடியின் பின்னர் இடைநீக்கம் செய்யப்பட்டது.[10]
கினி-பிசாவு – 2012 கினி பிசாவு ஆட்சி கவிழ்ப்பின் பின்னர் இடைநீக்கம் செய்யப்பட்டது.[11]
மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு – 2012-13 மத்திய ஆபிரிக்கக் குடியரசு மோதலின் பின்னர் இடைநீக்கம் செய்யப்பட்டது.[12]
பார்வையாளர் அங்கத்தவர்கள்
எயிட்டி – அடிஸ் அபாவில் 2 பெப்ரவரி 2012 இல் நடைபெற்ற 18 ஆவது ஆப்பிரிக்க ஒன்றிய உச்சிமாநாட்டில் எய்ட்டி பார்வையாளர் அங்கத்தவர் அந்தஸ்தைப் பெற்றுக்கொண்டது. அதன் பின்னர் ஒன்றியத்தின் உறூப்பினராக முறையான கோரிக்கை விடுத்தது.[13]
கசக்கஸ்தான் – பொருத்தமான உடன்படிக்கைகள் மே 2013 இல் நிறைவேற்றப்பட்ட பின்னர் 14 நவம்பர் 2013 இல் கசகஸ்தான் பார்வையாளர் அங்கத்தவர் அந்தஸ்தைப் பெற்றுக்கொண்டது. வெளியுறவுத்துறை அமைச்சரான எர்லன் இட்ரிசோவ் ஆபிரிக்க ஒன்றியத்தில் கசகஸ்தான் குடியரசின் நிரந்தரப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார்.[14]
முன்ன்னர் உறுப்பினர்கள்
Remove ads
உச்சி மாநாடுகள்
2013 விசேட ஆப்பிரிக்க ஒன்றிய உச்சி மாநாடானது ஐ.சி.சி உடனான ஆபிரிக்காவின் தொடர்பு குறித்தது எனக் கூறப்பட்டது. இவ்வுச்சி மாநாடானது ஐ.சி.சி அமைப்பானது ஆப்பிரிக்க ஒன்றியத்தின் பதவியில் அமர்ந்திருக்கும் தலைவர்களுக்கு எதிரான சில தண்டனைகளைக் கைவிடவும், அவை தொடர்பான சர்ச்சைகள் ஆபிரிக்கர்களை இலக்குவைத்து உருவாக்கப்பட்டன என்ற அழைப்பிற்குச் செவிசாய்க்காமல் பற்றற்று இருந்தமையாலும் இது குறித்து முடிவு எடுக்கக் கூட்டப்பட்டது.[18]
Remove ads
மொழிகள்
ஆப்பிரிக்க ஒன்றியத்தின் அரசியலைப்புச் சட்டத்திற்கு அமைவாக இதனுடைய வேலை மொழிகளாக அரபிக், ஆங்கிலம், பிரெஞ்சு மற்றும் போர்த்துக்கீசம் ஆகியவற்றுடன் முடிந்தவரையில் ஆபிரிக்க மொழிகளும் காணப்படுகின்றன.[19]
2011 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஆப்பிரிக்க ஒன்றியத்தின் மொழிகளுக்கான ஆபிரிக்க அக்கடமி ஆபிரிக்க மக்களிடையே ஆபிரிக்க மொழிகளின் பயன்பாடு மற்றும் நிலைப்பேறுடைமையைப் பேணுகின்றது. ஆப்பிரிக்க ஒன்றியம் 2006 ஆம் ஆண்டை ஆபிரிக்க மொழிகளுக்கான வருடம் எனப் பிரகடனப்படுத்தியது.[20][21]
தலைவர்களின் பட்டியல்
ஆபிரிக்க ஒன்றியத்தின் தலைவர்கள் | |||
பெயர் | பதவிக் காலத்தின் தொடக்கம் | பதவிக் காலத்தின் முடிவு | நாடு |
தாபோ உம்பெக்கி | 9 ஜூலை 2002 | 10 ஜூலை 2003 | ![]() |
ஜோவாகுவிம் கிஸ்ஸானோ | 10 ஜூலை 2003 | 6 ஜூலை 2004 | ![]() |
ஒலுசேகன் ஒபசஞ்சோ | 6 ஜூலை 2004 | 24 சனவரி 2006 | ![]() |
டெனிஸ் சஸ்ஸவ்-குவெஸ்ஸோ | 24 சனவரி 2006 | 24 சனவரி 2007 | ![]() |
ஜோன் குபுவர் | 30 சனவரி 2007 | 31 சனவரி 2008 | ![]() |
ஜகயா கிக்வெட்டே | 31 சனவரி 2008 | 2 பெப்ரவரி 2009 | ![]() |
முஅம்மர் அல் கதாஃபி | 2 பெப்ரவரி 2009 | 31 சனவரி 2010 | ![]() |
பிங்கு வா முதரிக்கா[22][23] | 31 சனவரி 2010 | 31 சனவரி 2011 | ![]() |
டெவோடொரோ ஒபியாங் குவெமா பசங்கோ[24] | 31 சனவரி 2011 | 29 சனவரி 2012 | ![]() |
யாயி போனி | 29 சனவரி 2012 | 27 சனவரி 2013 | ![]() |
ஹைலெமரியம் டெசலெகின் | 27 சனவரி 2013 | இப்பொழுது வரை | ![]() |
Remove ads
குறிகாட்டிகள்
a புள்ளிவிவரங்கள் 2009 ஆம் அண்டுக்குரியவை.
b புள்ளிவிவரங்கள் 2006 ஆம் அண்டுக்குரியவை.
c புள்ளிவிவரங்கள் 2010 ஆம் அண்டுக்குரியவை.
d தென் சூடான் உள்ளடங்கலாக.
e புள்ளிவிவரங்கள் 2007 ஆம் அண்டுக்குரியவை.
f AU total used for indicators 1 through 3; AU weighted average used for indicator 4; AU unweighted average used for indicators 5 through 12.
g ஜிபூட்டி, லிபியா, சோமாலியா மற்றும் மேற்கு சகாரா ஆகிய நாடுகளின் தரவுகள் சேர்க்கப்படவில்லை.
h தென் சூடானின் தரவுகள் சேர்க்கப்படவில்லை.
Note: The colors indicate the country's global position in the respective indicator. For example, a green cell indicates that the country is ranked in the upper 25% of the list (including all countries with available data).
Highest fourth | |
Upper-mid (2nd to 3rd quartile) | |
Lower-mid (1st to 2nd quartile) | |
Lowest fourth |
Remove ads
மேற்கோள்கள்
நூற்பட்டியல்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads