உருசியக் குடியரசுகள்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
உருசியாவின் அரசமைப்புச் சட்டத்தின்படி, உருசியக் கூட்டமைப்பு 85 கூட்டாட்சி அமைப்புகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் 22 குடியரசுகள் ஆகும். பெரும்பாலான குடியரசுகள் உருசியர்களல்லாத இனக்குழுக்களைக் கொண்டுள்ளன. ஆனாலும், பல குடியரசுகளில் உருசியர்கள் பெரும்பான்மையாக உள்ளனர். குடியரசு ஒன்றின் சுதேசிய இனத்தவரின் பெயரைக்கொண்ட ஒரு குடியரசு "பெயரளவிலான தேசியம்" ஆகக் கருதப்படுகிறது.
Remove ads
அரசமைப்பு நிலை
ஏனைய உருசிய நடுவண் அமைப்புகளைப் போலல்லாமல், உருசியக் குடியரசுகளுக்கு தமது ஆட்சி மொழியைத் தாமே தேர்ந்தெடுக்கவும், தமது அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கிக் கொள்ளவும் உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன.[1] ஏனைய நடுவண் அமைப்புகளான பிரதேசங்கள் (கிராய்கள்), மாகாணங்கள் (ஓப்லாஸ்துகள்) என்பவற்றுக்கு இந்த உரிமைகள் வழங்கப்படவில்லை. பல உருசியக் குடியரசுகளின் தலைவர் பொதுவாக அரசுத்தலைவர் (சனாதிபதி) என முன்னர் அழைக்கப்பட்டனர், ஆனால் 2010 இல் நடுவண் அரசமைப்பில் செய்யப்பட்ட மாற்றம் ஒன்றில், அரசுத்தலைவர் என்ற பதவிப் பெயர் உருசியத் தலைவருக்கு மட்டுமே உரியதாக்கப்பட்டது.[2]
உருசியாவின் குடியரசுகளுக்கும், பிரதேசங்களுக்கும் மேலாக அமைக்கப்பட்ட எட்டு பெரும் "நடுவண் மாவட்டங்கள்" உருசிய அரசுத்தலைவரினால் நியமிக்கப்பட்ட ஆளுநர்களால் நிருவகிக்கப்படுகின்றன. இவர்கள் குடியரசுகளின் செயற்பாடுகளை நேரடியாகக் கண்காணிப்பார்கள். அத்துடன், குடியரசுகளின் பிராந்திய நாடாளுமன்றங்களின் அதிகாரங்களும் குறைக்கப்பட்டு, அவற்றின் தலைவர்களை உருசிய அரசுத்தலைவரே நியமிக்கவும் அரசமைப்பில் மாற்றம் செய்யப்பட்டது.[3]
Remove ads
கிரிமியாவின் நிலை
2014 மார்ச் 18 இல், உடன்படிக்கை ஒன்றின் பேரில் கிரிமியா குடியரசும், செவஸ்தப்போலும் உருசியக் கூட்டமைப்பில் இணைந்தன.[4][5] பெரும்பாலான உலக நாடுகளும், உக்ரைன் அரசும் கிரிமியாவை உருசியா தன்னிடன் இணைத்துக் கொண்டதை ஏற்றுக்கொள்ளவில்லை. அவை கிரிமியாவை உக்ரைனின் ஒரு பகுதியாகவே பார்க்கின்றன.[6][7]
முன்னாள் தன்னாட்சிக் குடியரசுகளும் தன்னாட்சி மாகாணங்களும்
முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் உருசிய சோவியத் நடுவண் சோசலிசக் குடியரசு மூன்று வகையான "சுயாட்சி" நிருவாக அமைப்புகளைக் கொண்டிருந்தது. அவை: தன்னாட்சிக் குடியரசுகள், தன்னாட்சி மாகாணங்கள் (ஓப்லஸ்துகள்), தன்னாட்சி ஓக்குருகுகள் என்பனவையாகும்.
சோவியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர், ஒவ்வொரு தன்னாட்சிக் குடியரசும் அதே பெயரில் குடியரசானது. (செச்சினிய-இங்கூசு சோவியத் தன்னாட்சி சோசலிசக் குடியரசு செச்சினியா, இங்குசேத்தியா என இரண்டு குடியரசுகளாயின.) பல "தன்னாட்சி மாகாணங்கள்" (அடிகேயா, அல்த்தாய், காராசாய்-செர்கெஸ்ஸியா, அக்காசியா) ஆகியனவும் குடியரசுகள் ஆயின.
மக்கள்தொகையியல்
குறிப்புகள்:
|
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads