செங்கோட்டை தொடருந்து நிலையம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
செங்கோட்டை தொடருந்து நிலையம் (Sengottai railway station, நிலையக் குறியீடு:SCT) இந்தியாவின், தமிழ்நாடு-கேரளா எல்லையில் உள்ள, தென்காசி மாவட்டத்தின், செங்கோட்டை நகரின் விசுவநாதபுரம் பகுதியில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும். இதன் அருகிலுள்ள பேருந்து நிலையம் செங்கோட்டையிலும் மற்றும் அருகிலுள்ள வானூர்தி நிலையம் திருவனந்தபுரத்தில் 110 கி.மீ. (68 மைல்) தொலைவில் அமைந்துள்ளது.
செங்கோட்டை தொடருந்து நிலையம் நான்கு நடைமேடைகள் கொண்டது. இத்தொடருந்து நிலையத்திலிருந்து அன்றாடம் 11 தொடருந்துகள் புறப்பட்டுச் செல்கிறது. இரண்டு தொடருந்துகள் மட்டும் இந்நிலையத்தில் தங்கிச் செல்கிறது. சென்னை, மதுரை, திருநெல்வேலி, இராமேஸ்வரம், இராஜபாளையம், சிவகாசி போன்ற நகரங்களை செங்கோட்டை தொடருந்து நிலையம் இணைக்கிறது.[2][3]
செங்கோட்டையிலிருந்து கேரளாவிற்குச் செல்லும் குறுகிய இருப்புப்பாதையை அகலப் பாதையாக மாற்றும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது. இப்பணி முடிந்த பின், ஆரியங்காவு, குளத்துப்புழை, புனலூர், எர்ணாகுளம், கொல்லம், கொச்சி நகரங்களை செங்கோட்டை தொடருந்து நிலையம் இணைக்கும்.[4][5]
Remove ads
செங்கோட்டை வழியாகச் செல்லும் தொடருந்துகள்
விரைவுத் தொடருந்துகள்
- 16101/16102 - கொல்லம் சந்திப்பு - தென்காசி சந்திப்பு - சென்னை எழும்பூர் - தென்காசி சந்திப்பு - கொல்லம் சந்திப்பு கொல்லம் விரைவு தொடருந்து (தினசரி)
- 20681 - சென்னை எழும்பூர் - செங்கோட்டை சிலம்பு அதி விரைவு தொடருந்து (ஞாயிறு வியாழன் சனி நாட்கள் மட்டும் )
- 20682 - செங்கோட்டை - சென்னை எழும்பூர் சிலம்பு அதி விரைவு தொடருந்து (ஞாயிறு வியாழன் சனி நாட்கள் மட்டும் )
- 12661/12662 - செங்கோட்டை - சென்னை எழும்பூர் - செங்கோட்டை பொதிகை அதிவிரைவு தொடருந்து (தினசரி)
- 16791/16792 - திருநெல்வேலி சந்திப்பு - தென்காசி சந்திப்பு - பாலக்காடு சந்திப்பு - தென்காசி சந்திப்பு - திருநெல்வேலி சந்திப்பு செல்லும் பாலருவி விரைவு தொடருந்து
- 16848/16847 - செங்கோட்டை - மயிலாடுதுறை சந்திப்பு - செங்கோட்டை விரைவு தொடருந்து (தினசரி)
சிறப்பு விரைவு /அதிவிரைவு பயணிகள் தொடருந்து
- 06036 - வேளாங்கன்னி - தென்காசி சந்திப்பு - எர்ணாக்குளம் விரைவு வண்டி (திங்கள் மட்டும்)
- 06035 - எர்ணாக்குளம் சந்திப்பு - தென்காசி சந்திப்பு - வேளாங்கன்னி விரைவு வண்டி (சனி மட்டும்)
- 06662/06503/06504/06665 - செங்கோட்டை - மதுரை சந்திப்பு -செங்கோட்டை விரைவு வண்டி (தினசரி)
- 06685/06686/06657/06682 - திருநெல்வேலி சந்திப்பு - செங்கோட்டை- திருநெல்வேலி சந்திப்பு விரைவு வண்டி (தினசரி)
- 06659/06660 - செங்கோட்டை - கொல்லம் சந்திப்பு - செங்கோட்டை விரைவு வண்டி (தினசரி)
பயணிகள் தொடருந்து
திருநெல்வேலிக்கு செல்லும் பயணிகள் தொடருந்து
- 56796 - செங்கோட்டை - திருநெல்வேலி பயணிகள் தொடருந்து
- 56798 - செங்கோட்டை - திருநெல்வேலி பயணிகள் தொடருந்து
- 56800 - செங்கோட்டை - திருநெல்வேலி பயணிகள் தொடருந்து
- 56802 - செங்கோட்டை - திருநெல்வேலி பயணிகள் தொடருந்து
மதுரைக்கு செல்லும் பயணிகள் தொடருந்து
- 56732 - செங்கோட்டை - மதுரை பயணிகள் தொடருந்து
- 56734 - செங்கோட்டை - மதுரை பயணிகள் தொடருந்து
- 56736 - செங்கோட்டை - மதுரை பயணிகள் தொடருந்து
கொல்லத்திற்க்கு செல்லும் பயணிகள் தொடருந்து 56335 - செங்கோட்டை - கொல்லம் பயணிகள் தொடருந்து
Remove ads
வண்டிகளின் வரிசை
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads