சௌராஷ்டிர மாநிலம்
இந்திய மாநிலம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
சௌராஷ்டிர மாநிலம் அல்லது ஐக்கிய கத்தியவார் மாநிலம் என்பது ராஜ்கோட் நகரத்தை தலைநகராக கொண்டு 1948-ஆம் ஆண்டு முதல் 1956-ஆம் ஆண்டு முடிய இந்தியாவின் தற்கால குஜராத்தில் உள்ள சௌராட்டிர தீபகற்பத்தில் இருந்த மாநிலம் ஆகும்.[1] இதன் தலைநகரமாக ராஜ்கோட் நகரம் இருந்தது. 1 சூலை 1950 அன்று ஸ்டேட் பாங்க் ஆப் சௌராஷ்டிரா துவக்கப்பட்டது. 1948இல் சௌராஷ்டிர மாகாணத்தின் முதல் தலைமை அமைச்சராக யு. என். தேபர் தேர்ந்தெடுக்கப்பட்ட்டார்.
இது தற்கால குஜராத் மாநிலத்தின் சௌராட்டிரா தீபகற்பப் பகுதிகளை கொண்டிருந்தது. பின்னர் 1 நவம்பர் 1956 அன்று சௌராஷ்டிரா மாநிலம் பம்பாய் மாகாணத்துடன் இணக்கப்ப்பட்டது. சௌராஷ்டிரா மாநிலப் பகுதிகள் 1 மே 1960 அன்று புதிதாக நிறுவப்பட்ட குஜராத் மாநிலத்தில் இணைக்கப்பட்டது.
இந்திய விடுதலைக்குப் பின் சௌராஷ்ட்டிர மாகாணம் 15-02-1948-இல் சௌராட்டிர தீபகற்பம் எனும் கத்தியாவார் தீபகற்பத்தின் கத்தியவார் முகமையில் இருந்த பெரிய மற்றும் சிறிய சுதேசி சமஸ்தானங்களை ஒன்றிணைத்து 15 பிப்ரவரி 1948 அன்று சௌராஷ்டிரா உருவாக்கப்பட்டது. முதன்முதலாக 1948-இல் சௌராஷ்டிரா மாகாணத்தின் முதலமைச்சராக யு. என். தேபர் தேர்ந்தெடுக்க்ப்பட்டார்.
கத்தியவார் தீபகற்பம் அல்லது சௌராஷ்டிரம் என்பது புவியியல் அடிப்படையில் ஒரே நிலப்பகுதியை குறிக்கிறது. இப்பகுதியில் வாழும் மக்களை சௌராஷ்டிரர்கள் அல்லது கத்தியவாரிகள் என்றழைக்கப்படுகிறார்கள்.
Remove ads
வரலாறு
சர்தார் வல்லபாய் படேலின் ராஜதந்திரத்தாலும், மகாத்மா காந்தியின் முயற்சியாலும் இந்தியாவை ஆண்ட பிரித்தானிய இந்தியாவின் ஆங்கிலேயே அரசின் கத்தியவார் முகமைக்கு கப்பம் கட்டிக் கொண்டு, சௌராஷ்டிர பகுதியை ஆண்டு கொண்டிருந்த பெரிய மற்றும் சிறிய சுதேச சமஸ்தான மன்னர்கள் ஒன்று சேர்ந்து இந்திய அரசில் இணைந்து கொள்ள விருப்பம் தெரிவித்து, இந்தியாவுடன் இணையும் சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தத்தில் 24 சனவரி 1948 அன்று கையொப்பமிட்டனர். கத்தியவார் முகமையில் இருந்த சுதேச சமஸ்தானங்கள் ஒன்றிணைத்து 15 பிப்ரவரி 1948 அன்று சௌராஷ்டிர மாநிலம் நிறுவப்பட்டது. இப்புதிய மாநிலத்தை உருவாக்க சர்தார் வல்லபாய் படேல் தன் வாழ்நாளின் பெரும் பகுதியை செலவிட்டார். [2][3][4][5]
1 நவம்பர் 1956 அன்று சௌராஷ்டிரா மாநிலம் பம்பாய் மாகாணத்துடன் இணக்கப்ப்பட்டது. சௌராஷ்டிரா மாநிலப் பகுதிகள் 1 மே 1960 அன்று புதிதாக நிறுவப்பட்ட குஜராத் மாநிலத்தில் இணைக்கப்பட்டது.
Remove ads
சௌராஷ்டிர மாகாணத்தில் இணைந்த சுதேசி சமஸ்தானங்கள்


கத்தியவார் முகமையின் கீழிருந்து சௌராஷ்டிர மாகாணம் அல்லது ஐக்கிய கத்தியவார் மாகாணத்தில் இணைந்த பெரிய சுதேச சமஸ்தானங்கள்:
- பரோடா அரசு
- பவநகர் அரசு
- ஜுனாகத் அரசு
- மோர்வி இராச்சியம்
- நவநகர் இராச்சியம்
- போர்பந்தர் இராச்சியம்
- தாரங்கதாரா இராச்சியம்
- ரதன்பூர் சமஸ்தானம்
- கொண்டல் இராச்சியம்
- ஜாப்ராபாத் இராச்சியம்
- வான்கனேர் சமஸ்தானம்
- வாத்வான் இராச்சியம்
- தாரங்கதாரா இராச்சியம்
- இராஜ்கோட் இராச்சியம்
- பாலிதானா சமஸ்தானம்
- லிம்படி சமஸ்தானம்
- துரோல் சமஸ்தானம்
சௌராஷ்டிர தீபகற்பத்தில் இருந்த சுதேச சமஸ்தானங்களில் பரோடா சமஸ்தானம் மூன்றாவது பெரிய இந்திய சுதேச சமஸ்தானம் ஆகும். இதன் நிலப்பரப்பு மேற்கே துவாரகை முதல் தெற்கே பம்பாய் மாகாணம் வரை பரவியிருந்தது. பரோடா மன்னர் பிரதாப்சிங் கெய்க்வாட், 04-09-1948-இல் தான் சௌராஷ்டிர மாகாணம் அல்லது ஐக்கிய கத்தியவார் மாகாணத்துடன் தனது சமஸ்தானத்தை இணைக்கும் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டார். பின்னர் பரோடா சமஸ்தானம் 01-05-1949-இல் பம்பாய் மாநிலத்துடன் இணைக்கப்பட்டது.[6][7][8]நவம்பர் மாதம் 1948-ஆம் ஆண்டு ஐக்கிய கத்தியவார் மாகாணத்தை, சௌராஷ்டிர அல்லது சௌராஷ்டிர மாகாணம் என்று மறு பெயரிட்டனர். சர்தார் வல்லபாய் படேலின் பெருமுயற்சியால் ஜூனாகாத் சமஸ்தானம், சனவரி மாதம், 1949-ஆம் ஆண்டில் சௌராஷ்டிர மாகாணத்துடன் இணைக்கப்பட்டது.
Remove ads
சௌராஷ்டிர மாகாண முதலமைச்சர்கள்
- யு. என். தேபர், 1948 முதல் 1954 முடிய
- ரசிகலால் உமேச்சந்த், திசம்பர் 1954 முதல் 1956 முடிய.
பம்பாய் மாகாணத்துடன் இணைப்பு
சௌராஷ்டிர மாகாணம் 01-11-1956 அன்று கலைக்கப்பட்டு, பம்பாய் மாகாணத்துடன் இணைக்கப்பட்ட்து.
புதிய குஜராத் மாநிலத்தில் சௌராஷ்டிரா நிலப்பரப்புகள்
இந்தியாவை மொழிவாரி மாநிலங்களாக பிரிக்கும் போது, சௌராஷ்டிர பகுதியின் நிலப்பரப்புகள் பம்பாய் மாகாணத்திலிருந்து பிரித்து புதிதாக துவக்கப்பட்ட குஜராத் மாநிலத்துடன் 01-05-1960-ஆம் நாளில் இணைக்கப்பட்டது.
படக்காட்சியகம்
- மகாதேவர் கோயில், பவநாத், ஜூனாகாத்
- நாகேசுவரர் கோயில்
- பகாவூதீன் மக்பார மசூதி, ஜூனாகாத்
- மகாத்மா காந்தி பிறந்த வீடு, போர்பந்தர்
- ஹரிசித்தி மாதா மலைக்கோயில், போர்பந்தர்
மேற்கோள்கள்
இவற்றையும் காண்க
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads