தட்டான்குளம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தட்டான்குளம் (ஆங்கிலம்:Thattankulam)[3][4][5], இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் ஒரு ஊர் ஆகும்.
Remove ads
புவியியல்
இவ்வூரின் அமைவிடம் 8.47°N 77.68°E ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 141 மீட்டர் (462 அடி) உயரத்தில் இருக்கின்றது.
நிர்வாகம்
தட்டான்குளத்தின் நிர்வாகம் தெற்கு நாங்குநேரி ஊராட்சியின் பொறுப்பில் உள்ளது. தட்டான்குளம் தமிழக சட்டமன்றத் தொகுதியான நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிக்கும் இந்திய பாராளுமன்றத் தொகுதியான திருநெல்வேலி பாராளுமன்றத் தொகுதிக்கும் உட்பட்டது. தமிழகக் காவல் துறையின் நாங்குநேரி காவல் நிலையம் தட்டான்குளத்தில் சட்டம் ஒழுங்கை பராமரிக்கிறது.
போக்குவரத்து
நாங்குநேரி – திசையன்விளை செல்லும் மாநில நெடுஞ்சாலை 89 ல் (SH 89) நாங்குநேரியில்ருந்து 4 கி.மீ. தொலைவில் தட்டான்குளம் அமைந்துள்ளது. தட்டான்குளத்திலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ள தேசிய நெடுஞ்சாலை 7 ஐ (NH 7) மாநில நெடுஞ்சாலை 89 மூலம் அடையலாம்.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் திருநெல்வேலி - திசையன்விளை தினசரி பேருந்துகளை இயக்குகிறது. தனியார் பேருந்துகளும் திருநெல்வேலி – திசையன்விளை மற்றும் திசையன்விளை - களக்காடு தினசரி பேருந்துகளை இயக்குகிறது. அனைத்து தனியார் பேருந்துகளும் தட்டான்குளத்தில் நின்று செல்லும். திருநெல்வேலி – திசையன்விளை இடைநில்லா பேருந்து தவிர அனைத்து அரசு பேருந்துகளும் தட்டான்குளத்தில் நின்று செல்லும்.
அருகாமையிலுள்ள நாங்குநேரி ரயில் நிலையம் 4 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. தட்டான்குளத்திலிருந்து திருநெல்வேலி சந்திப்புகள் 35 கி.மீ. (21 மைல்) மற்றும் நாகர்கோவில் சந்திப்பு 50 கி.மீ. (31 மைல்) தொலைவிலும் அமைந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள தூத்துக்குடி விமான நிலையமே, தட்டான்குளத்திற்கு அருகாமையிலுள்ள விமான நிலையம் ஆகும். இது தட்டான்குளத்திலிருந்து 60 கி.மீ. (37 மைல்) தொலைவில் அமைந்துள்ளது. சர்வதேச விமான நிலையங்களான திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையம் 190 கி.மீ. (118 மைல்) மற்றும் மதுரை விமான நிலையம் 125 கி.மீ. (77 மைல்) தொலைவில் அமைந்துள்ளன.
முக்கிய இடங்கள்
சி. எஸ். ஐ கிறிஸ்துவ ஆலயம், தட்டான்குளம்.[4]
ஆதாரங்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads