தமிழ்ச் சமயம்
தமிழர்களின் பண்டைய மெய்யியல் கோட்பாடு From Wikipedia, the free encyclopedia
Remove ads
தமிழ்ச் சமயம் (Tamil religion) அல்லது தமிழர் சமயம் என்பது பண்டைய தமிழர்களின் மெய்யியல் கோட்பாடுகளை உள்ளடக்கிய ஒரு பாரம்பரிய சமயம் மற்றும் வாழ்வியல் முறையாகும்.[1][2][3] தமிழர்களின் சமயம் பொதுவாக இந்து சமயம் மற்றும் பிற தர்ம சமயங்களுடன் ஒத்துப்போகின்றன.

தமிழர்கள் இறை நம்பிக்கை உடையவர்களாகவே பெரும்பாலும் இருந்து வந்திருக்கின்றார்கள். சைவம், வைணவம், பௌத்தம், சமணம், ஆசீவகம் ஆகிய பெரும் சமய மரபுகளைத் தமிழர்கள் பல்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு போக்குகளுடன் பின்பற்றி வந்துள்ளார்கள். ஐயனார், கண்ணகி, மதுரை வீரன் போன்ற "நாட்டார் தெய்வம்" வழிபாடும் தமிழர்களிடம் பரவி இருக்கின்றது. முருகன் கைலாய மலையை விட்டு வெளியேறி தென்னிந்தியாவின் பழனி மலையில் வசித்ததால் முத்தமிழ் இறைவன் என அழைக்கப்படுகிறார். நாயன்மார்கள், ஆழ்வார்களின் பக்தி இயக்கம், வள்ளலார் இராமலிங்க அடிகளை பின்பற்றிய மனிதநேய இயக்கம், அய்யாவழி ஆகியவை தமிழ்ச் சூழலில் தோன்றிச் சிறப்புற்றவையே.
தமிழர்களால் புனிதமாகக் கருதப்படும் ஒரே ஒரு மொழி, தமிழ் மொழி. தமிழ் மொழி தமிழர்களின் இறைவன் மொழி மற்றும் சிவன் தான் தமிழ் மொழியை உருவாக்கினார். தமிழ் பதிகங்கள் (மந்திரம்) மற்றும் தமிழ் சங்க இலக்கிய பாடல்கள் சடங்குகள், விழாக்கள், மற்றும் வழிபாடுகள் போது ஓத படுகிறது.[4]
இந்திய துணை கண்டத்தில் தமிழர் பாரம்பரிய பகுதி, இந்து மதத்தின் முக்கிய மையமாகும். தமிழர் பாரம்பரிய நிலப்பரப்பில் மிகப் பழமையான கோவில்கள் உள்ளன, மேலும் அவை "கோயில்களின் பூமி" என்று அழைக்கப்படுகின்றன. பக்தி இயக்கம், சித்தர் தத்துவங்கள் நீண்ட காலமாக தொடர்ச்சியக இந்து மதத்தில் தாக்கம் பெற்று வருகிறது. இது கிபி 6 ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய இலக்கியத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. பௌத்தமும், சமணமும் தமிழர்களிடையே பிற தத்துவங்கள் பரவலாக இருந்தன, மேலும் இந்த தத்துவங்கள் இலக்கியங்கள் தமிழ் பகுதியில் ஆரம்பகால பக்தி இலக்கியங்களுக்கு முந்தியவை.[5]

Remove ads
சங்க கால தமிழர் சமயம் மற்றும் மெய்யியல் கோட்பாடு
பண்டைய தமிழ் இலக்கண நூல்களான தொல்காப்பியம், சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை போன்ற நூல்கள் பண்டைய தமிழ் மக்களின் துவக்கக்கால சமய வாழ்வைக் காட்டுகின்றன. கந்த புராணம் தமிழர்களில் பெரும்பான்மையினர் விரும்பும் கடவுளாக மயில்மீது அமர்ந்தவனும் செந்நிறத்தவனான என்றும் இளமையும், அழகுமுடையவனான முருகன் என்கிறது.[6] சிவன் உயர்ந்த கடவுளாகவும் கருதப்படுகிறார். முருகன்[7] மற்றும் சிவன்[8] ஆகியோரின் ஆரம்பகால வடிவங்கள் உள்ளூர் தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் ஆகியவற்றுடன் இணைந்தவையாக சிந்து சமவெளி நாகரிக காலம்வரை செல்கிறது [9][10] . சங்ககால நிலம், பருவ காலம் ஆகியவை ஐந்து திணைகளாக அதாவது வகைளாக பிரிக்கப்பட்டிருந்தன. இந்த ஐந்திணைகளில் ஒவ்வொரு திணைகளுக்குமான கடவுள்களைத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது, அவை மலையும் மலைச்சார்ந்த பகுதியுமான குறிஞ்சிக்கு சேயோன், காடும் காட்டைச் சார்ந்த பகுதியான முல்லைப் பகுதிக்கு மாயோன், வறண்ட நிலப்பகுதியான பாலைக்கு கொற்றவை, வயலும் வயல்சார்ந்த பகுதியான மருதத்துக்கு வேந்தன், கடலும் கடல்சார்ந்த பகுதியுமான நெய்தலுக்கு வருணன் ஆகிய தெய்வங்களாகும். இந்தக் காலத்தில் மற்ற பிரபல தெய்வங்களாக காதல் கடவுளான காமனும், சூரியன், சந்திரன், மரண தேவனான யமன் ஆகியோர் இருந்தனர்.

சங்ககாலத்தில் இருந்த கோயில்களில் குறிப்பாக மதுரையில், பூசிக்கப்பட்ட தாய்த் தெய்வம் இருந்ததாகத் தோன்றுகிறது. சங்க இலக்கியத்தில், பழமுதிர்சோலை சன்னதியில் குறவப் பூசாரியால் நிகழ்த்தப்பட்ட சடங்கின் விரிவான விளக்கம் உள்ளது.
மகாபலிபுரம் சாளுவன் குப்பம் முருகன் கோயில், வேப்பாத்தூர் வீற்றிருந்த பெருமாள் கோயில் மற்றும் மதுரை கிண்ணிமங்கலம் ஏகநாதன் கோயில் ஆகியவை தொல்பொருள் சான்றுகளால் கண்டுபிடிக்கப்பட்ட மூன்று பழமையான சங்ககால கோவில்களாகும் [11][12] ஆரம்ப இடைக்கால பேரரசுகள் சங்ககால கோவில் கட்டிடங்களை பிற்காலங்களில் கட்டமைத்து விரிவைடைய செய்தனர். மீனாட்சி கோயிலில் இருந்து கலை, இயல்பு மற்றும் தெய்வங்களின் சிற்பங்கள், மற்றும் ரங்கநாதசுவாமி கோயில் ஆகியவை சங்கம் காலத்திலிருந்து வந்தவை. இந்த காலத்தின் பல கோயில்கள் செங்கற்கள் அல்லது கிரானைட் கற்களால் கட்டப்பட்டுள்ளன, ஆனால் அவை மாலிக் கபூரின் தலைமையில் டெல்லி சுல்தானேட் பேரரசின் படையெடுப்பால் ஏற்பட்ட அழிவு காரணமாக நவீன காலம் வரை உயிர்வாழவில்லை.
தமிழர்கள் தங்கள் முன்னோர்களை (நீத்தார் வழிபாடு)[13] வணங்கினர், இதை தமிழ் சங்க இலக்கியம் முழுவதும் காணலாம். சிவன், முருகன், மாயோன் போன்ற தமிழர்களின் பிரதான தெய்வங்கள் பலவும் அவர்களின் மூதாதையர்களாக கருதப்படுகின்றன, அவர்கள் அந்தக் கால மன்னர்களாகவும் இருந்தனர். அரசரானவர் தெய்வீகமானவராக கருதப்பட்டு, சமய முக்கியத்துவம் கொண்டவராக தமிழகத்தில் கொண்டாடப்பட்டார்.[14] அரசர் 'கடவுளின் புவிப் பிரதிநிதி' என்று கருதப்பட்டார். அவர் வாழுமிடம் கோயில் எனப்பட்டது அதன் பொருள் "மன்னரின் இல்லம்" என்பதாகும். தற்காலத்தில் தமிழில் கோயில் என்பது இறைவழிபாட்டு இடத்தை அழைக்கப் பயன்படுத்தப்படுகிறது, இதை ஒப்பு நோக்கும்போது இறைவனுக்கு அளிக்கும் மரியாதையைப் போன்றே மன்னரும் தமிழ் மக்களால் வழிபாட்டுக்கு உரியவராக இருந்ததை அறியலாம்.[15]
மன்னரைக் குறிக்கும் சொற்களான கோ, இறை, ஆண்டவன் போன்றவை தற்காலத்தில் கடவுளைக் குறிக்கும் சொற்களாக மாறிவிட்டன. புறநானூறில் மோசிகீரனார் கூறுவது:
நெல்லும் உயிர் அன்றே;
நீரும் உயிர் அன்றே;
மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்;
அதனால், யான்உயிர் என்பது அறிகைவேன்மிகு தானை வேந்தற்குக் கடனே.
அரசர் நீதி தவறினால் பஞ்சம் அல்லது அழிவு போன்றவற்றால் நாடு பாதிக்கப்படும் என்ற நம்பிக்கை இருந்தது.[16] தொல்காப்பியர் மூவேந்தரை வான்புகழ் மூவர் என்று குறிப்பிடுகிறார். தமிழ் மொழி பேசும் தென்னிந்தியாவில், தெய்வீக அரசதிகாரம் என்ற கருத்து மாநிலத்திலும், கோவில்களிலும் முக்கிய பாத்திரத்தை வகிக்க வழிவகுத்தது.[17]
Remove ads
கோவில்கள் மற்றும் திருவிழாக்கள்
சங்க காலக் கோவில்கள் அழியக்கூடிய பொருட்களான சுண்ணாம்புச் சாந்து, மரம், செங்கல் போன்ற பொருட்களால் கட்டப்பட்டன. அந்தக் கட்டுமானங்கள் இன்று இல்லாமல் போய்விட்டன.[18] இந்தக் காலத்துக்கு உட்பட்ட வரலாற்று முக்கியத்துவம் கொண்ட கட்டமைப்புகளாக இன்றுவரை எஞ்சியுள்ளவை இயற்கையான பாறைகளில் துறவிகளுக்காக வெட்டப்பட்ட கற்படுக்கைகள் ஆகும். சிலப்பதிகாரம் மற்றும் சங்க இலக்கியங்களான கலித்தொகை, முல்லைப்பாட்டு , புறநானூறு போன்றவற்றில் பல வகைப்பட்ட கோயில்கள் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றில் சில -
- புறநிலைக்கோட்டம் (நகரத்துக்கு வெளியே உள்ள கோயில்)
- நெடுநிலைக்கோட்டம் (உயர்ந்த கோயில்)
- பல்குன்றக்கோட்டம் (மலை உச்சியில் உள்ள கோயில்)
- இளவந்திக்கோட்டம் (நீராடுமிடமும், தோட்டமும் உள்ள கோயில்)
- எழுநிலைமாடம் (ஏழடுக்குக் கோயில்)
- கடவுட்கட்டிநகர் (கோயில் நகர்).[19]
இந்தக் காலத்தில் பிரபலமாக விளங்கிய திருவிழாக்களில் சில தைப்பூசம், கார்த்திகை தீபம், திருவோணம், காமன் விழா, இந்திர விழா போன்றவை ஆகும். கார்த்திகைதீபம், பெருவிழா என்றும் அழைக்கப்பட்டது, இது ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில் கொண்டாடப்படுகிறது. காமன் விழா வசந்த காலத்தில் கொண்டாடப்பட்டது, அப்போது ஆண்களும், பெண்களும் நல்ல ஆடைகளை அணிந்து நடனமாடினர். இந்திரவிழாவில் வேதப் பலிகள், பல்வேறு தெய்வங்களை பிராத்தித்தல், இசை நிகழ்ச்சிகள், நடனம் ஆகியவை இடம்பெற்றன.[20]
Remove ads
இந்து சமயம் மற்றும் தமிழர்கள்
சைவ சமயம், வைணவ சமயம், பௌத்தம், சமணம் போன்ற அனைத்து தெற்காசிய நாட்டுப்புற சமயங்களை இணைத்து, இந்து மதம் என்று ஆங்கிலேய அரசால் 19 ஆம் நூற்றான்டில் கொண்டு வருவதற்கு முன் தமிழ்நாடு (மதராசு மாகானம்) மற்றும் ஈழத்திலும் இருந்த தமிழ் மக்கள் தங்கள் மதத்தை தமிழ் என்றே குறித்து வந்தனர் என்பதை அவர்கள் புலம்பெயர்ந்து வெளிநாட்டில் குடிபெயர்ந்து போது அவர்கள் மதத்தை தமிழ் என்று குறிப்பிட்டதன் மூலம் அறியலாம்.[21] தமிழர்களின் மதம், கோவில் கட்டிடக்கலை, இலக்கியம், தத்துவம் வட இந்திய இந்து மதத்திலிருந்து கொஞ்சம் வேறுபட்டது. 19ஆம் நூற்றான்டில் இசுலாமியர், கிருத்தவர், யூதர்கள் அல்லாத தெற்கு ஆசியர்களை இந்துக்கள் என்று கொண்டுவந்ததால் தமிழ் மதத்தை பின்பற்றிய தமிழர்கள் இந்துக்கள் என அடையாளபட்டனர். ஆனாலும் பல தமிழர்கள் தங்கள் மதமாக இன்று தமிழ் மதத்தை பின்பற்றுகிறார்.[22] மேலும் பல புலம்பெயர்ந்த தமிழர்கள் தங்கள் மதமாக தமிழ் மதத்தை கடைபிடிக்கின்றனர்.[21][1][3][23]
தமிழ்ச் சமய மெய்யியல்
வெறியாட்டம்
"வெறியாட்டம்" என்பது வழிபாட்டின்போது பெண்களுக்கு ஏற்படும் மருளைக் குறிக்கிறது. வெறியாட்டத்தின்போது கடவுளின் செல்வாக்குக்கு ஆட்பட்டு, பெண்கள் பாடி, ஆடுவர் அப்போது ஓரளவு கடந்தக் காலத்தைப் பற்றியும், எதிர்காலத்தைக் குறித்து முன்னறிவிப்பர், நோய்களையும் கணிப்பர் [24] . சங்க இலக்கியங்களில் இருபது புலவர்கள் வெறியாடலைச் சித்தரித்துள்ளனர். வெறியாடும் வேலன் அட்டமாசித்திகளுடைய தீர்கதரிசியாக கருதப்பட்டுள்ளார். வெறியாடல் ஆண், பெண் என இருபாலராலும் நடத்தப்பட்டது.
நடுகல் மற்றும் நீத்தார் வழிபாடு
ஆரம்பகால தமிழர்களிடையே நடுகல் (வீரக்கல்) எழுப்பும் நடைமுறை தோன்றியது, மேலும் இது சங்க காலத்திற்குப் பிறகு, சுமார் 11 ஆம் நூற்றாண்டு வரை தொடர்ந்தது.[25] இது தமிழ் மூதாதையர் வழிபாட்டின் ஒரு பகுதியாகும், போரில் வெற்றியை நாடிய மக்கள் இந்த நடுகல்லை வணங்குவது அவர்களுக்கு வெற்றியை ஆசீர்வதிப்பது வழக்கம்.[26] நடுகற்களுக்கு நாள்தோறும் தீபதூபம் காட்டிப் பூசைசெய்யும் வழக்கமும் ஏற்பட்டது. இதனை புறநானூறு, சிலப்பதிகாரம், மலைபடுகடாம் முதலிய நூல்கள் குறிப்பிடுகின்றன. நடுகல்லைச் சுற்றிலும் கல் அடுக்கி அதனைப் பதுக்கை ஆக்குவர். இந்த நடுகற்களுக்கு 'வல்லாண் பதுக்கைக் கடவுள்' என்று பெயர். நடுகல்லோடு சேர்த்து மயிற்பீலிகளைக் கட்டுவர். உடுக்கு அடிப்பர். தோப்பி என்னும் கள் வைத்துப் படைப்பர். உயிரினங்களைப் பலியிடுவர். இந்தப் பதுக்கைக் கோயில்கள் வழிப்பாதைகள் கூடுமிடத்தில் அமைக்கப்பட்டிருக்கும். இந்த கோயில்கள் பெரும்பாலும் சிற்றூர் சந்திப்பில் அமைந்துள்ளன.[27][28] கிராமப்புற தமிழ்நாட்டில், ஐயனார்கள் என்று அழைக்கப்படும் பல உள்ளூர் தெய்வங்கள், கிராமத்தை தீங்கு விளைவிக்காமல் பாதுகாக்கும் உள்ளூர் வீராங்கனைகளின் ஆவிகள் என்று கருதப்படுகிறது. அவர்களின் வழிபாடு பெரும்பாலும் நாடுக்கலை மையமாகக் கொண்டது, போரில் இறந்த வீராங்கனைகளின் நினைவாக கற்கள் அமைக்கப்பட்டன. சங்க காலத்தில் இருந்த மதம் அல்லது மெய்யியல் கோட்பாடு
இந்த வழிபாட்டு முறை தமிழ் சங்க இலக்கியங்களில் பல இடங்களில் குறிப்பிடப்படுகிறது மற்றும் ஒரு பண்டைய தமிழ் பாரம்பரியத்தின் எச்சமாகவும் உள்ளது.

இல்லடுகள்ளின் சில்குடிச் சீறூர்ப்
புடைநடு கல்லின் நாட்பலியூட்டி
நன்னீராட்டி நெய்நறை கொளீஇய
மங்குல் மாப்புகை மறுகுடன் கமழும்[29]
ஊழ் மற்றும் வினை
ஊழ் என்பதன் பொருள் 'விதி' என்பதாகும் வினை என்பதன் பொருள் செயல் என்பதாகும். அக்காலத் தமிழர் மத்தியில் விதியை மீறி மனிதனால் என்ன செய்ய முடியும் என்பது போன்ற ஒரு நம்பிக்கையும் நிலவியது.[30]
கடவுள் மற்றும் இயவுள்
சங்க காலத் தமிழர் கடவுளின் இரு வேறுபட்ட குணாதிசயங்களைப் புரிந்தவர்களாக இருந்தனர். எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டவராதலால் கடவுள் என்றும் எல்லாவற்றையும் இயக்குபவராதலால் இயவுள் என்றனர்.[31]
Remove ads
ஆன்மீக உரைகள்
தமிழர்கள் தமிழ் மொழியை தெய்வ மொழியாக கருதுகின்றனர், மேலும் சடங்குகள், விழாக்கள், மற்றும் வழிபாட்டின் போது தமிழ் சங்க இலக்கியப் பாடல்கள், திருமந்திரம் போன்ற சித்தர்கள் இயற்றிய இலக்கியங்கள், திருவாசகம், தேவாரம், போன்றவற்றை ஓதுகின்றனர்[4]
புலம்பெயர்ந்த தமிழர்கள்
தமிழர்கள் தமிழ்நாடு மற்றும் ஈழம் மட்டுமின்றி தங்களின் தாய்நாட்டு எல்லையை தாண்டி மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா, தென்னாப்பிரிக்கா, ஆத்திரேலியா, கிரேட் பிரிட்டன், அமெரிக்கா, கனடா, ரியூனியன், மியான்மர், மொரிசியசு, மடகாசுகர் மற்றும் ஐரோப்பா போன்ற பல நாடுகளிலும் வாழ்ந்துவருகின்றனர். பல புலம்பெயர்ந்த தமிழர்கள் கிறித்தவ சகாப்தத்திற்கு முந்திய ஒரு கலாச்சார, மொழியியல் மற்றும் மத பாரம்பரியத்தின் கூறுகளைத் தக்க வைத்துக் கொண்டு, தமிழ் மதத்தை தங்கள் மதமாகக் கடைப்பிடிக்கின்றனர்.
Remove ads
மேலும் காண்க
நூலியல்
- சுப்ரமணியன், என் (1972). தமிழ்நாட்டின் வரலாறு. கூடல் பப்ளிஷர்ஸ், மதுரை.
- கோபாலகிருஷ்ணன், எஸ் (2005). ஆரம்பகால பாண்டியன் ஐகானோமெட்ரி. ஷரதா பப்ளிஷிங் ஹவுஸ், புது தில்லி.
- பாலம்பால், வி (1998). சங்க யுக வரலாற்றில் ஆய்வுகள். கலிங்கா பப்ளிகேஷன்ஸ், டெல்லி.
- தேவநேயப் பாவாணர். தமிழர் மதம்
- மறைமலை அடிகள். தமிழர் மதம்
- ஆ. வேலுப்பிள்ளை. (1985). தமிழர் சமய வரலாறு. சென்னை: பாரி புத்தகப்பண்ணை.
வெளி இணைப்புகள்
- http://jainsamaj.org/literature/jaina-181104.htm பரணிடப்பட்டது 2006-06-30 at the வந்தவழி இயந்திரம் - சமண சமய தமிழ் இலக்கியம் - (ஆங்கில மொழியில்)
- சாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் - 2. சமயம்
- Religious Traditions of the Tamils, Prof. A. Veluppillai
- தமிழர் சமயம் எது?
- பண்பாட்டை அணுகும் புதிய பார்வை - தொ.பரமசிவன் எழுதிய "தெய்வம் என்பதோர்....." (கட்டுரைத்தொகுதி அறிமுகம்)
- ஆன்மீகம் & தமிழ் தேசம்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads