நவரசா (வலைத் தொடர்)

2021 இந்திய வலைத் தொடர் From Wikipedia, the free encyclopedia

Remove ads

நவரசா (Navarasa) என்பது மணிரத்னம் தயாரிப்பில் வெளியாக உள்ள இந்திய தமிழ் கதைக்கோவை வலைத் தொடராகும், ஜெயேந்திர பஞ்சபகேசனுடன் இணைந்து மணிரத்தினம் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் கியூப் சினிமா டெக்னாலஜிஸ் பதாகைகள் மூலமாக இத் தொடரைத் தயாரித்துள்ளார்.[1] இத் தொடரானது நவரசம் என்ற பெயருக்கேற்றபடி ஒன்பது தனித்ததனி அத்தியாயங்களைக் கொண்டுள்ளது. இவற்றை பிரியதர்சன், கார்த்திக் சுப்புராஜ், வசந்த், அரவிந்த்சாமி, பிஜாய் நம்பியார், கார்த்திக் நரேன், கௌதம் மேனன், சர்ஜூன் கே.எம், அறிமுக இயக்குநர் ரதிந்திரன் ஆர். பிரசாத் ஆகியோர் இயக்கியுள்ளனர்.. இந்தத் தொடர் 2021 ஆகத்து 6 ஆம் நாள் நெற்ஃபிளிக்சு மூலம் வெளியிடப்படுகிறது.[2]

விரைவான உண்மைகள் நவரசா, வகை ...
Remove ads

அத்தியாயங்கள்

மேலதிகத் தகவல்கள் இன்மை, ரௌத்ரம் ...
Remove ads

கதை

இத் தொடரில் உள்ள ஒன்பது அத்தியாயங்களின் கதைகளானது சினம், இரக்கம், தைரியம், வெறுப்பு, பயம், சிரிப்பு, அன்பு, அமைதி, அதிசயம் போன்ற வித்தியாசமான உணர்ச்சி அல்லது ராசங்களைக் குறிக்கின்றது.[3]

நடிகர்கள்

தயாரிப்பு

வளர்ச்சி

நவரசா மணிரத்னம் மற்றும் அவரது தயாரிப்பு நிறுவனமான மெட்ராஸ் டாக்கீசின் எண்ணியல் தள அறிமுகத்தை குறிக்கிறது. மணிரத்னம், ஜெயேந்திரா ஆகிய இருவரும் சமூக காரணங்களுக்காகவும், நிதி திரட்டும் நடவடிக்கைகளுக்காகவும் கூட்டாக சேர்ந்து தயாரித்தனர். மேலும் கோவியட்-19 பெருந்தொற்றின் போது, மணி,, ஜெயேந்திரா ஆகியோர் இந்திய அழகியல் மற்றும் மனித உணர்ச்சிகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு படத்தில் பணியாற்ற முடிவு செய்தனர். அவை தினசரி கூலி தொழிலாளர்களுக்கு உதவும் விதமாக நிதி திரட்டுவதற்கான வாய்ப்பாகக் கருதப்பட்டது.[4] பெருந்தொற்று காரணமாக திரையரங்குகள் திறப்பு இல்லாததாலும், இது ஒன்பது பகுதிகள் கொண்ட கதைக்கோவை என்பதாலும், கதை மற்றும் உணர்ச்சிக்கு போதுமானதாக கதைக்கோவை கதைகள் 30-40 நிமிடங்கள் கொண்டதாக இருப்பதால், திரையரங்கில் வெளியீட்டிற்கான அம்சங்கள் கொண்ட திரைப்பட வடிவத்தில் இதை உருவாக்க முடியாது. என்பதால் இது ஆரம்பத்திலேயே திரைப்படமாக அல்லாமல் ஒரு வலைத் தொடராகவே உருவாக்க முடிவு செய்யப்பட்டது,[5]

2020 சூலையில், பகத் பாசில், சூரியா, விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி ஆகியோர் இந்தத் தொடரில் நடிப்பார்கள் என்று கூறப்பட்டது. 2020 செப்டம்பரில் இந்த வலை தொடர் குறித்து உறுதிப்படுத்தும்முன், மெட்ராஸ் டாக்கீஸ் இந்த திட்டம் குறித்து அமேசான் பிரைம் மற்றும் நெற்ஃபிளிக்சு ஆகிய இரண்டிடமும் விவாதித்தனர். 2020 அக்டோபர் 28 அன்று, நெட்ஃபிக்ஸ் இந்த திட்டத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது, இதில் பணிபுரியும் நடிகர்கள் மற்றும் படக் குழுவினரையும் அறிவித்தது, இது ஜெயேந்திர பஞ்சபகேசன் மற்றும் மணிரத்னத்தின் நிதிக் கட்டுப்பாட்டில் தயாரிக்கப்படும்.[6] மணியும், ஜெயேந்திராவும் இளம் வயது இயக்குநர்களிலிருந்து, அனுபவம் வாய்ந்த இயக்குநர்கள் வரையான, அந்தந்த இயக்குநர்களுடன் தொலைபேசி வழியாக பேசினர், அவர்கள் இந்த திட்டத்தில் பணியாற்றத் தயாராக இருந்தனர். இந்த இருவரும் கதைக்கோவைக்காக எந்த பகுதியையும் இயக்கவில்லை. இப்படத்திற்கான நடிகர்களை குறும்படங்களின் இயக்குநர்கள் தெரவு செய்தனர். அதேசமயம் மணி மற்றும் ஜெயேந்திராவிடமிருந்து அறிவுறுத்தலையும் பெற்றனர்.[5][7]

இந்தத் தொடரின் நடிகர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், இயக்குநர்கள் ஊதியம் இன்றி பணியாற்றுகின்றனர். இதில் செலவு என்பது தயாரிப்பு செலவு மட்டுமே ஆகும். இந்த தொடரின் மூலம் கிடைக்கும் இலாபம் கோவியட்-19 பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் (பெப்சி) உறுப்பினர்களுக்கு நன்கொடையாக வழங்கப்படும்.[8] இந்த செயல்பாட்டின் தொடர்ச்சியாக, குழு 2021 மார்ச் மாத இறுதியில் இருந்து தொழிலாளர்களுக்கு முன்செலுத்து அட்டைகளை விநியோகிக்கத் தொடங்கியது, ஒவ்வொரு பயனாளியும், ₹1,500 க்கு அட்டையை பயன்படுத்தி மாதாமாதம் என ஐந்து மாத காலத்திற்கு, மளிகை கடைகளில் பொருட்களை வாங்கிக்கொள்ளலாம். இந்த திட்டத்தின் பயனாளிகளை அடையாளம் காண பெப்சி அமைப்பானது பூமிகா அறக்கட்டளையுடன் ஆறு மாதங்கள் பணியாற்றியது, இந்த அட்டைகளை 10,500 பெப்சி தொழிலாளர்களும், 1,000 திரையரங்க ப்ரொஜெக்டிஸ்டுகளுக்கும் கிடைக்கும் என்று ஜெயேந்திர தி நியூஸ் மினிட் நேர்காணலில் தெரிவித்தார்.[9][10]

படப்பிடிப்பு

கோவிட் -19 ஊரடங்குக்குப் பின்னர் இந்திய அரசாங்கம் தளர்வுகளை அறிவித்ததைத் தொடர்ந்து, 2020 அக்டோபர் முதல் இந்தத் தொடரின் படப்பிடிப்பைத் தொடங்கியது. சித்தார்த், பார்வதி மேனன் ஆகியோரைக் கொண்ட முதல் பகுதிக்கான படப்பிடிப்பு அதே மாதத்தில் தொடங்கப்பட்டது. இரதிந்திரன் பிரசாத் இயக்கியுள்ள இந்த அத்தியாயம் புதுச்சேரியில் ஆறு நாட்களுக்குள் நிறைவடைந்தது.[11][12] 2020 நவம்பரில், ஒளிப்பதிவாளர் பி. சி. ஸ்ரீராம் சூரியாவைக்கொண்ட இரண்டாவது கதை பற்றி டிவீட் செய்தார். அதை கௌதம் மேனன் இயக்கினார்.[13] சென்னையில் தொடங்கப்பட்ட இதன் படப்பிடிப்பில், சூரியா நீண்ட தலைமுடியுடன் தோன்றினார்.[14][15] இதன் வாயிலாக ஒரு தசாப்த கால இடைவெளிக்குப் பிறகு சூரியா மேனனுடன் மீண்டும் இணைந்தது பணியாற்றினார்,[16] இதற்கு முன் இருவரும் சேர்ந்துபணியாற்றியது வாரணம் ஆயிரம் (2008) ஆகும்.[17] இவர்கள் இணைந்த இக்குறும்படத்தின் படப்பிடிப்பு ஐந்து நாட்களுக்குள் மூடிந்தது.[18] இதில் சூரியா இசைக்கலைஞராக நடிப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன,[19] இதன் தலைப்பு இளையராஜாவின் பிரபல பாடலை அடிப்படையாகக் கொண்டது, இதற்காக மேனன் இசையமைப்பாளரிடம் தலைப்பைப் பயன்படுத்த அனுமதி கோரியுள்ளார்.[20] இருப்பினும், இந்த பகுதியின் தலைப்பு பின்னர் கிடார் கம்பி மெலே நின்று என தெரியவந்தது.[21][22]

கார்த்திக் நரேன் தனது பகுதிக்கான படப்பிடிப்பை அரவிந்த்சாமி, பிரசன்னா, ஷம்னா காசிம் ஆகியோர் 2020 திசம்பரில் டிசம்பரில் படதாக்கந் தொடங்கினார்.[23] பரபரப்பான பணி அட்டவணை காரணமாக படத்திலிருந்து ஹலிதா ஷமீம் வெளியேறியதால் அவருக்கு பதிலாக ஹலிதா ஷமீமை இயக்குநர் திட்டத்தில் சேர்த்தார். அஞ்சலி, கிஷோர் ஆகியோர் துணை வேடங்களில் நடிக்க அர்களுடன் அதர்வா முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தார்.[24] 2021 சனவரியில், மூத்த திரைப்படத் தயாரிப்பாளர் பிரியதர்சன் பொன்ராமுக்குப் பதிலாக படத்தில் தனது பங்கை அறிவித்தார், அந்த பகுதியில் யோகி பாபு முன்னணி பாத்திரத்தில் நடிக்கிறார்.[25] மேலும், கே. வி. ஆனந்திற்குப் பதிலாக வசந்த் மற்றொரு பகுதியை இயக்கினார். இதில் அதிதி பாலன் முன்னி பாத்திரத்தில் நடித்தார்.[26] இதன் வழியாக வசந்த் மணிரத்னத்துடன் 24 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்தது பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.[27] 2021மார்ச்சில் காரைக்குடியில் தொடங்கிய படப்பிடிப்பு ஒரு வாரத்திற்குள் மூடிக்கப்பட்டது.[26] தொடரின் பணிகள் முடிந்ததும், மணிரத்னம், ஜெயேந்திரா ஆகியோர் 2021 மார்ச் 28 அன்று பெப்சி தொழிலாளர்களை கௌரவிக்கும் ஒரு நிகழ்வில் பாராட்டினர்.[28]

துவக்கத்தில் அறிவிக்கப்பட்ட இயக்குநர்களின் மூன்று பிரிவுகள் தயாரிப்பு நிலையில் கைவிடப்பட்டன. கௌதம் கார்த்திக், ரோபோ சங்கர், சரவணன் ஆகியோர் இடம்பெற்ற பொன்ராமின் டவுன் பஸ் 2020 அக்டோபரில் கொடைக்கானலில் படமாக்கப்பட்டு நிறைவு செய்யப்பட்டது.[29][30] இருப்பினும், அந்த அத்தியாயம் பின்னர் கதைக்கோவையில் சேர்க்கப்படவில்லை.[31] 2020 திசம்பரில் இந்தத் தொடரின் பணியிலிருந்து ஹலிதா ஷமீம் விலகினார்.[32] 2021 மார்ச்சில், விக்ராந்த், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க கே. வி. ஆனந்தால் முன்மொழியப்பட்ட அத்தியாயமும் பின்னர் ரத்து செய்யப்பட்டது.[33]

Remove ads

இசை

இத்தொடரில் ஏ. ஆர். ரகுமான், டி. இமான், ஜிப்ரான், கார்த்திக், ஜஸ்டின் பிரபாகரன், கோவிந்த் வசந்தா, அருள்தேவ், ரான் ஈதன் யோஹான் இசையமைத்த பாடல்கள் இடம்பெற்றுள்ளன.[34][35]

பாடல்கள்

மேலதிகத் தகவல்கள் பாடல் பட்டியல், # ...
Remove ads

சந்தைப்படுத்தலும், வெளியீடும்

நவராசா ஓடிடி சேவையின் மூலம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் படைப்புகளில் ஒன்றாகும் [36] மேலும் நெட்ஃபிக்ஸ் நிறுவனத்திலிருந்து ஜாகமே தந்திராமிற்குப் பிறகு பெரும் செலவில் தயாரிக்கப்பட்டு வெளியாகும் இரண்டாவது பெரிய படைப்பு ஆகும்.[37][38] நெட்ஃபிக்ஸ் இந்தியா 2021 மார்ச் 3 ஆம் நாள் சூரியா, விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி, பார்வதி, சித்தார்த் ஆகியோர் இடம்பெற்ற சில துணுக்குகளை வெளியிட்டது.[39] இந்தத் தொடர் 2021 மே மாதத்தில் வெளியிட திட்டமிடப்பட்டது,[40] ஆனால் தயாரிப்பாளர்கள் வெளியீட்டை 2021 ஆகத்துக்கு ஒத்திவைத்தனர். ஏனெனில் கோவிட்-19 பெருந்தொற்றுநோயின் இரண்டாவது அலை காரணமாக தமிழ்நாடு முழுவதும் கோவியட் பெருந்தொற்றுகள் அதிகரித்தன,[41] மற்றும் நெட்ஃபிக்ஸ் தளமானது ஜகமே தந்திரம் படத்தை 2021 சூன் 18 அன்று வெளியட முன்னுரிமை அளித்தது போன்றவை, இத் தொடரின் தாமதத்திற்கான காரணிகள் ஆகும்.[42] 2021 சூனில், ஒளிப்பதிவாளர் பி. சி. ஸ்ரீராம் தொடரின் வெளியீடு குறித்து டிவீட் செய்தார், ஆனால் பின்னர் அவர் அந்த டிவீட்டை நீக்கிவிட்டார்.[43]

இந்தியன் எக்சுபிரசு மற்றும் பல செய்திகள் நவரசா 2021 ஆகத்து 6 அன்று வெளியிடப்படும் என்றன.[42][44] இருப்பினும், தயாரிப்பாளர்கள் பின்னர் வெளியீட்டை 2021 ஆகத்து 9 என திட்டமிட்டனர்,[45] மணிரத்னம் மற்றும் ஜெயேந்திராவின் யோசனை காரணமாக வெளியீட்டுத் தேதி "ஒன்பது" என்ற எண் கொண்டதாக இருக்கவேண்டுமென்றது, இதன் காரணியாக இருந்தது.[5][46] முன்னதாக நெட்ஃபிக்ஸ் வெளியீட்டு தேதியை 2021 ஆகத்து 6 என உறுதிப்படுத்தியிருந்தது,[47][48] சந்தைப்படுத்தல் விளம்பதர்ரின் ஒரு பகுதியாக, 2021 சூலை 7 அன்றைய,[49] ஆனந்த விகடன் பத்திரிகையானது ஒன்பது குறும்படங்களிலிருந்து பிரத்யேக ஒளிப்படங்களை வெளியிட்டது.[50][51] மேலும், இந்தத் தொடர் குறித்து ஒரு சிறப்புக் கட்டுரையையும், 2021 சூலை 21 [52] அன்று கதைக் கோவை படம் பற்றிய விவரங்களையும் வெளியிட்டது. இது 2021 சூலை 8 அன்று இணையத்தில் வெளியிடப்பட்டது.[50][53] நவராசாவின் அதிகாரப்பூர்வ முன்னோட்டத்தை பாரத் பாலா இயக்கி படத் தொகுப்பு செய்தார். இதில் ஏ. ஆர். ரகுமானின் இசை இடம்பெற்றிருந்தது, இது 2021 சூலை 9 அன்று வெளியிடப்பட்டது.[47][54]

Remove ads

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads