முதலாம் நரசராச உடையார்
மைசூர் மன்னர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
முதலாம் நரசராச உடையார் அல்லது கண்டீரவ நரசராச உடையார் என்பவர் மைசூரின் மன்னராக 1638 முதல் 1659 வரை இருந்தவர்.[1] இவர் விசயநகர பேரரசர்களான இரண்டாம் வேங்கடவன், ஆறாம் சீரங்கன், பீசப்பூரின் முகமது அதில் சா, இக்கேரியின் வீரபத்ர நாயக்கன், சிவப்ப நாயக்கன், மதுரையின் திருமலை நாயக்கன் ஆகியோரின் சம காலத்தவர்.
Remove ads
வெற்றிகள்
இவர் தன் ஆட்சி துவக்கத்திலேயே பீசப்பூர் இரனதுல்லா கான் தலைமையிலான படையெடுப்பை எதிர்கொள்ள நேர்ந்தது. அவர்களை விரட்டி அடித்தார். தாணாய்கன் கோட்டை, சத்தியமங்கலம், ஓசூர், முதலிய பகுதிகளை கைப்பற்றினார். 1641இல் கெட்டி முதலியாரின் பகுதிகள், 1652இல் பீசப்பூர் ஆட்சியிலிருந்த மேற்கு பாராமகால், வீரபத்ர துர்க்கம், பென்னாகரம், தர்மபுரி, தேன்கனிக்கோட்டை பகுதிகள், கோயமுத்தூர் பகுதி போன்ற பகுதிகளை வென்று மைசூருடன் இணைத்தார்.[2]
Remove ads
பணிகள்
வெற்றிகளால் வந்த வருவாயைக் கொண்டு சீரங்கப்பட்டண கோட்டையைப் பலப்படுத்தினார். ஒரு தங்க சாலை அமைத்து தன் பெயரால் கண்டீராயி ஹண என்னும் தங்க நாணயங்களையும், ஆனெகாசு என்ற பெயரில் செப்பு காசுகளையும் வெளியிட்டார்.[3]
குறிப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads