அனுமக்கொண்டா மாவட்டம்

தெலுங்கானாவில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia

அனுமக்கொண்டா மாவட்டம்map
Remove ads

அனுமக்கொண்டா மாவட்டம் (Hamumakonda District), இதன் பழைய பெயர் வாரங்கல் நகர்புற மாவட்டம் என்பதாகும். இது இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தின் 33 மாவட்டங்களில் ஒன்றாகும். அக்டோபர், 2016-இல் வாரங்கல் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து, அதன் நகர்புறங்களை உள்ளடக்கிய பகுதிகளைக் கொண்டு அனுமக்கொண்டா மாவட்டம் என்றும், வாரங்கல் மாவட்டத்தின் கிராமப்புறங்களைக் கொண்டு, வாரங்கல் மாவட்டம் என இரண்டாகப் பிரிக்கப்பட்டது.[5] அனுமக்கொண்டா மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் அனுமக்கொண்டா நகரம் ஆகும்.

விரைவான உண்மைகள் அனுமக்கொண்டா மாவட்டம் హనుమకొండ జిల్లా (தெலுங்கு)பழைய பெயர்:வாரங்கல் நகர்புற மாவட்டம், நாடு ...
Thumb
அனுமக்கொண்டா மாவட்டத்தின் வாரங்கல் வருவாய் கோட்டங்கள்
Thumb
தெலங்கானாவின் 33 மாவட்டங்களின் வரைபடம்
Remove ads

வரலாறு

வாரங்கல் பகுதியை காக்கத்தியர்கள் கி.பி 1083ஆம் ஆண்டு முதல் 1323 வரை ஆண்டனர். இவ்வம்சத்தின் முக்கிய இராணி ருத்திரமாதேவி ஆவார். பின்னர் 1326 முதல் முசுனூரி நாயக்கர்கள் வாரங்கல் பகுதியை ஆண்டனர். பின்னர் பாமினி சுல்தான்கள் 1347 ஆண்டு முதல் 1527 முடிய ஆண்டனர். பாமினி சுல்தான்களுக்குப் பின்னர் வாரங்கல் பகுதியை கோல்கொண்டா சுல்தான்கள் ஆண்டனர்.

1687-இல் முகலாயப் பேரரசன் அவுரங்கசீப் வாரங்கல்லை கைப்பற்றினார். முகலாயப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர் வாரங்கல் பகுதி 1724-இல் ஐதராபாத் நிசாம் ஆட்சிப் பகுதியில் சென்றது.

இந்திய விடுதலைக்குப் பின்னர்

1947-இல் இந்திய விடுதலைக்குப் பின்னர், வாரங்கல் ஒன்றுப்பட்ட ஆந்திரப் பிரதேசத்தின் ஒரு மாவட்டமாக விளங்கியது. சூன் 2, 2014 அன்று ஒன்றுபட்ட ஆந்திரப் பிரதேசத்தைப் பிரித்து, தெலங்கானா மாநிலம் நிறுவப்பட்டப் போது வாரங்கல் மாவட்டம் தெலங்கானா மாநிலத்தின் பகுதியாக விளங்கியது.

அக்டோபர் 2016-இல் தெலங்கானா மாவட்டங்களை மறுசீரமைத்து புதிதாக 21 மாவட்டங்கள் துவக்கப்பட்ட போது வாரங்கல் (நகர்புறம்) மாவட்டம் உருவானது.

Remove ads

மக்கள் தொகையியல்

அனுமக்கொண்டா மாவட்டம் 1309 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. அனுமக்கொண்டா மாவட்டத்தின் 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, வாரங்கல் நகர்புற மாவட்டத்தின் மக்கள் தொகை 10,93,841 ஆகும்.

மாவட்ட நிர்வாகம்

அனுமக்கொண்டா மாவட்டம் 2 வருவாய்க் கோட்டத்தைக் கொண்டுள்ளது. இம்மாவட்டம் 14 மண்டல்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

மண்டல்கள்

மேலதிகத் தகவல்கள் அனுமக்கொண்டா கோட்டம், பார்க்கல் கோட்டம் ...

பொருளாதாரம்

2006-ஆம் ஆண்டின் இந்திய அரசின் அறிவிப்பின் படி, பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய 250 இந்திய மாவட்டங்களில் வாரங்கல் நகர்புற மாவட்டமும் ஒன்றாகும்.[6] இம்மாவட்டம் பின் தங்கிய பிரதேசங்களுக்கான வளர்ச்சி நிதி இந்திய அரசிமிடமிருந்து பெறுகிறது.[6]

பண்பாடு

Thumb
ஆயிரங்கால் கோயிலின் குளம்
Thumb
வாரங்கல் கோட்டையின் சிதிலங்கள்

உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாக, 2013-ஆம் ஆண்டில் யுனேஸ்கோ நிறுவனம் அறிவித்துள்ளது.[7] முக்கிய சுற்றுலாத் தலங்கள்:

Thumb
வாரங்கல்லின் மூன்று நகரங்களின் சுற்றுலாத் தலங்கள்
  • ஆயிரங்கால் கோயில்
  • பத்மாட்சி கோயில்

புகழ் பெற்றவர்கள்

போக்குவரத்து

சாலைப் போக்குவரத்து

ஐதராபாத் நகரத்தையும் – சத்தீஸ்கரின் பூபாளபட்டினத்தினையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை எண் 163 மற்றும் ஜஜித்தியால் – கம்மம் நகரை இணைக்கும் நேசிய நெடுஞ்சாலை எண் 563 வாரங்கல் நகரத்தின் வழியாக செல்கிறது.

இருப்புப் பாதை

வாரங்கல் மற்றும் காசிப்பேட்டை என இரண்டு தொடருந்து நிலையங்களைக் கொண்டுள்ளது. இந்தியாவின் தெற்கிலிருந்து வடக்கே செல்லும் அனைத்து தொடருந்துகளும் வாரங்கல் தொடந்து நிலையம் வழியாகச் பயணிக்கிறது.

Remove ads

வானூர்தி நிலையம்

இம்மாவட்டத்தில் உள்ள மம்மூர் எனுமிடத்தில் வாரங்கல் வானுர்தி நிலையம் உள்ளது. சிறிய விமானங்களை இயக்க வல்ல இவ்வானூர்தி நிலையத்தினைப் பொதுமக்கள் பயன்படுத்த இயலாது. பெரிய விமானங்கள் இயங்கும் வகையில், இவ்விமான நிலையத்தின் விரிவாக்கப்பணி 2030ஆம் ஆண்டில் நிறைவடையும் வகையில் நடந்து கொண்டு வருகிறது.[8]

கல்வி

வாரங்கல் நகரப்புற மாவட்டத்தின் முக்கிய கல்வி நிறுவனங்கள்;

  • வாரங்கல் தொழிநுட்ப நிறுவனம்
  • காகாத்தீய மருத்துவக் கல்லூரி
  • கலோஜி நாராயண ராவ் சுகாதரம் மற்றும் அறிவியல் பல்கலைக்கழகம்
  • வாரங்கல் பல்கலைக்கழக கலை மற்றும் அறிவியல் கல்லூரி
  • காக்காதீய தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் நிறுவனம்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads