1996 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்

From Wikipedia, the free encyclopedia

1996 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்
Remove ads

1996 ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் என்பது அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் 1996 சூலை 19 முதல் ஆகத்து 4 வரை நடந்த கோடைகால ஒலிம்பிக்கை குறிக்கும். அதிகாரபூர்வமாக இப்போட்டி XXVI ஒலிம்பிக் என அழைக்கப்படுகிறது, ஒலிம்பிக்கிற்கு இது நூறாவது ஆண்டு ஆகும். ஒலிம்பிக் ஆணையகத்தில் பதிவு செய்த அனைத்து நாடுகளும் இதில் பங்கேற்றன.197 நாடுகளைச்சேர்ந்த 10,318 வீரர்கள் இதில் பங்கேற்றனர். 1924ம் ஆண்டிலிருந்து கோடைகால ஒலிம்பிக்கும் குளிர்கால ஒலிம்பிக்கும் ஒரே ஆண்டில் நடைபெற்றன, 1986ம் ஆண்டு ஒலிம்பிக் ஆணையகம் இரண்டையையும் 1994ம் ஆண்டிலிருந்து இரு ஆண்டுகள் இடைவெளியில் வெவ்வேறு ஆண்டுகளில் (இரட்டை வருடங்கள்) நடத்த முடிவுசெய்தது. 1996 கோடைகால ஒலிம்பிக் அவ்வாண்டில் குளிர்கால ஒலிம்பிக் இல்லாமல் நடைபெற்ற முதல் கோடைகால ஒலிம்பிக்காகும். குளிர்கால ஒலிம்பிக் 1992 க்கு பிறகு நான்கு ஆண்டுகளுக்கு பதிலாக இரு ஆண்டுகள் இடைவெளியில் 1994ம் ஆண்டு நோர்வே நாட்டில் நடைபெற்றது. அதன் பின் மீண்டும் நான்கு ஆண்டுகள் இடைவெளியில் நடைபெற்றது. அட்லாண்டா நகரில் நடைபெறும் ஒலிம்பிக் அமெரிக்காவில் நடைபெறும் ஐந்தாவது ஒலிம்பிக்கும் மூன்றாவது கோடைகால ஒலிம்பிக்கும் ஆகும்.

Thumb
அரங்கத்தில் ஒலிம்பிக் கொடி
Remove ads

போட்டி நடத்தும் நாடு தெரிவு

செப்டம்பர் 18, 1990ம் ஆண்டு டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக் ஆணையகத்தின் 96வது அமர்வில் அட்லாண்டா 1996ம் ஆண்டு கோடைகால ஒலிம்பிக்கை நடத்த தேர்ந்தெடுக்கப்பட்டது. முதல் ஒலிம்பிக் 1896ம் ஆண்டு ஏதென்சில் நடைபெற்றது. ஒலிம்பிக்கிற்கு இது நூறாவது ஆண்டு ஆகும். எனவே இப்போட்டியை இவ்வாண்டு நடத்த பல நகரங்கள் விரும்பின.

மேலதிகத் தகவல்கள் நகரம், நாடு ...
Remove ads

பதக்கப் பட்டியல்

பங்குகொண்டவைகளில் 79 நாடுகள் பதக்கம் பெற்றன

மேலதிகத் தகவல்கள் நிலை, நாடு ...
Remove ads

கலந்து கொண்ட நாடுகள்

Thumb
1996ல் கோடைகால ஒலிம்பிக்கில் பங்கேற்ற நாடுகள்
Blue =முதல் முறையாக பங்கேற்பவை. Green = முந்தைய ஒலிம்பிக்கில் பங்கேற்றவை. மஞ்சள் சதுரம் இப்போட்டியை நடத்தும் அட்லாண்டா
Thumb
பல்வேறு நாடுகளிலிருந்து கலந்து கொண்ட வீரர்கள் எண்ணிக்கை

1996 ஒலிம்பிக்கில் 197 நாடுகளும் 10,318 வீரர்களும் பங்கேற்றனர் [2]. இருபத்தி நான்கு நாடுகள் முதல் முறையாக ஒலிம்பிக்கில் பங்கேற்றன, இவற்றில் பதினொன்று நாடுகள் 1992 ஒலிம்பிக்கில் ஐக்கிய அணி மூலம் போட்டியிட்ட முன்னால் சோவியத் ஒன்றித்தை சார்தவை. உருசியா உருசியப் பேரரசாக இருந்த பொழுது தனி நாடாக இதற்கு முன்னர் 1912ம் ஆண்டு ஒலிம்பிக்கில் போட்டியிட்டு உள்ளது. யுகோசுலேவியா யுகோசுலேவிய கூட்டமைப்பு என்ற பெயரில் தனி நாடாக போட்டியிட்டுள்ளது.

சோவியத் ஒன்றியத்தை சாராத முதல் முறையாக பங்கெடுத்த பதினான்கு நாடுகள்: அசர்பைஜான், புருண்டி, கேப் வர்டி, கொமொரோசு, டொமினிக்கா, கினி-பிசாவு, மாக்கடோனியக் குடியரசு, நவூரு, பாலஸ்தீனம், செயிண்ட் கிட்சும் நெவிசும், செயிண்ட் லூசியா, சாவோ டொமே மற்றும் பிரின்சிப்பி, தஜிகிஸ்தான், துருக்மெனிஸ்தான். 1994ம் ஆண்டு குளிர்கால ஒலிம்பிக்கில் பங்கெடுத்து கோடைகால ஒலிம்பிக்கில் முதல் முறை பங்கெடுத்தவை ஆர்மீனியா, பெலருஸ், செக் குடியரசு, சியார்சியா (நாடு), கசக்ஸ்தான், கிர்கிசுத்தான், மல்தோவா, சிலோவாக்கியா, உக்ரைன், உசுபெக்கிசுத்தான். செக் குடியரசும் சிலோவாக்கியாவும் செக்கோசிலோவாக்கியா உடைந்தபின் தனி நாடுகளாக பங்கேற்றன. எசுத்தோனியா, லாத்வியா , லித்துவேனியா ஆகியவை சோவியத் ஒன்றியம் உருவாவதற்கு முன் தனி நாடுகளாக போட்டியிட்டுள்ளன.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads