2015 இந்தியன் பிரீமியர் லீக்

From Wikipedia, the free encyclopedia

2015 இந்தியன் பிரீமியர் லீக்
Remove ads

2015 இந்தியன் பிரீமியர் லீக் (சுருக்கமாக ஐபிஎல் 8 அல்லது 2015 ஐபிஎல்), என்பது இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெறும் இருபது20 துடுப்பாட்டப் போட்டித் தொடரான இந்தியன் பிரீமியர் லீக்கின், எட்டாவது பருவ நிகழ்வாகும். இதனை இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியம் (பிசிசிஐ) நடத்தி வருகிறது. 2007இல் தொடங்கிய இந்தியன் பிரீமியர் லீக்கில் ஏழு பருவங்கள் ஏற்கனவே முடிந்துள்ளன. எட்டாவது பருவமான இப்பருவத்தில் எட்டு அணிகள் பங்கேற்கின்றன. ஏப்ரல் 08, 2015 முதல் மே 24, 2015 வரை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளன. இப்பருவத்தில் மொத்தமாக 60 போட்டிகள் நடக்கவுள்ளன. ஏப்ரல் 12 முதல் ஏப்ரல் 25 வரையிலான நாட்களில் கொல்கத்தாவில் நகராட்சித் தேர்தல் நடக்க உள்ளதால் அந்நாட்களில் கொல்கத்தாவில் எந்த ஆட்டமும் நடைபெறாது.[1]

விரைவான உண்மைகள் நாட்கள், நிர்வாகி(கள்) ...
Remove ads

வீரர்களின் ஏலம்

இந்தியன் பிரீமியர் லீக்கைப் பொறுத்தவரை ஒவ்வொரு அணியும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான வீரர்களை ஏலத்திற்கு விடாமல் தங்களது அணியிலேயே தக்க வைத்துக் கொள்ள முடியும். இதன்படி 123 வீரர்கள் அந்தந்த அணிகளால் தக்கவைத்துக் கொள்ளப் பட்டனர். இவ்வாறாக தக்க வைக்கப்படாமல் அணியைவிட்டு வெளியேற்றப்படும் வீரர்கள் தங்களது பெயரை அடுத்து நடைபெறும் ஏலத்தில் தங்களது பெயரை பதிவு செய்துகொள்ள வேண்டும். பெங்களூருவில், பிப்ரவரி 16 அன்று நடைபெற்ற பெப்சி ஐபிஎல் 2015 ஏலத்தில், அதிகபட்சமாக யுவராஜ் சிங் 16 கோடிக்கு ஏலம் போனார். 2014 ஐபிஎல்-இல் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த இவரை இந்த ஆண்டு நடந்த ஏலத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. மொத்தமாக 67 வீரர்கள் விற்கப்பட்ட இந்த ஏலத்தில் மொத்தமாக 87,60 கோடிகள் செலவாயின.


Remove ads

மைதானங்கள்

12 மைதாங்களில் தொடர் சுழல்முறை ஆட்டங்கள் நடைபெறும்.[2] மும்பை, பூனே மற்றும் ராஞ்சியில் முறையே தகுதியாளர்-1 விலகுபவர்-1 மற்றும் தகுதியாளர்-2 நடைபெறும். கொல்கத்தாவில் இறுதிப் போட்டி நடைபெறும்.[3]


மேலதிகத் தகவல்கள் அகமதாபாத், பெங்களூரு ...
Remove ads

போட்டி அட்டவணை

புள்ளிகள் பட்டியல்

மேலதிகத் தகவல்கள் அணிகள், ஆட்டங்கள் ...


Remove ads

புள்ளிவிவரங்கள்

அதிக ஓட்டங்கள்


அதிக விக்கெட்டுகள்

மேலதிகத் தகவல்கள் Player, Team ...
  • கடைசி புதுப்பிப்பு: 16th May 2015.
  •      பந்தயத்தின் முடிவில் ஆதிக விக்கெட்டுகள் எடுக்கும் வீர்ருக்கு பர்பிள் வண்ண தொப்பி அளிக்கப்படும்.
  • மூலம்: கிரிக்இன்போ[9]
Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads