2016 கோடைக்கால ஒலிம்பிக் பதக்கப் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல் From Wikipedia, the free encyclopedia

2016 கோடைக்கால ஒலிம்பிக் பதக்கப் பட்டியல்
Remove ads

2016 கோடைக்கால ஒலிம்பிக் பதக்கப் பட்டியல் (Summer Olympics medal table) இரியோ டி செனீரோவில் ஆகத்து 5, 2016 முதல் ஆகத்து 21, 2016 வரை நடந்த 2016 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் தேசிய ஒலிம்பிக் குழுக்கள் (NOCs) மற்றும் ஒரு தேசியக்குழுவல்லாத அணியின் மெய்வல்லுநர்கள் வென்ற தங்கப்பதக்கங்களின் எண்ணிக்கையைக் கொண்டு வரிசைப்படுத்தப்பட்ட பட்டியலாகும்.[1][2][3][4]

Thumb
2016 கோடை ஒலிம்பிக்கில் ஒவ்வொரு நாடும் பெற்ற பதக்கங்களைக் காட்டும் உலக நிலப்படம்.
குறிவிளக்கம்:
      தங்கம் குறைந்தது ஒரு தங்கப் பதக்கமாவது பெற்ற நாடுகள்.
      வெள்ளி குறைந்தது ஒரு வெள்ளிப் பதக்கமாவது பெற்ற நாடுகள்.
      வெண்கலம் குறைந்தது ஒரு வெண்கலப் பதக்கமாவது பெற்ற நாடுகள்.
      நீலம் எந்தவொரு பதக்கமும் பெறாத நாடுகள்.
      சிவப்பு 2016 கோடை ஒலிம்பிக்சில் பங்கேற்காத நாடுகள்.

வியட்நாம், கொசோவோ, பிஜி, சிங்கப்பூர், புவேர்ட்டோ ரிக்கோ, பகுரைன், ஜோர்தான், தஜிகிஸ்தான், கோட் டிவார் ஆகிய நாடுகள் தங்கள் முதல் ஒலிம்பிக் தங்கப் பதக்கங்களை வென்றுள்ளன; தவிரவும் கொசோவோ, பிஜி, ஜோர்தான் நாடுகளுக்கு எந்தவகையிலும் முதல் ஒலிம்பிக் பதக்கங்களாகவும் அமைந்தன.[5][6][7][8][9][10][11][12][13][14]

குவைத்தின் சுடுதல்வல்லுநர் பெகையது அல்-தீகானி தங்கப் பதக்கமொன்றை வென்ற சார்பற்ற மெய்வல்லுநராக சாதனை படைத்தார்;[15][16] இதற்கு முன்னதாக ஒலிம்பிக் கொடியின் கீழ் 1992இல் ஐக்கிய அணி தங்கப் பதக்கங்களை வென்றிருந்த போதும் தனிநபர் ஒருவருக்கு வழங்கப்பட்டது இதுவே முதல் முறையாகும்.

Remove ads

பதக்கப் பட்டியல்

Thumb
2016 ஒலிம்பிக்கில் 4×100 மீ கட்டற்றவகை நீச்சற்போட்டியில் வென்ற அமெரிக்க அணி (அத்ரியன், எல்டு, பெல்ப்சு, டிரெசல்).
Thumb
ஆண்கள் 85 கிலோ வகுப்பில் பளுதூக்கும் போட்டியில் பதக்கம் வென்றோர். ஈரானியர் கியனூசு ரோசுத்தமி தங்கப் பதக்கம் வென்றார்.
Thumb
பெண்கள் 57 கிலோ வகுப்பு டைக்குவாண்டோ போட்டியில் வென்றவர்கள். சென்ற ஒலிம்பிக்கில் வென்றிருந்த பெரிய பிரித்தானியாவின் ஜேடு ஜோன்சு (இடதிலிருந்து இரண்டாவது) தனது பதக்கத்தைத் தக்க வைத்துக் கொண்டார்.

2016 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் பெற்ற பதக்கங்களின் எண்ணிக்கையை காட்டும் இந்தப் பட்டியல் பன்னாட்டு ஒலிம்பிக் குழு வழங்கிய பதக்கங்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டது. இந்த வரிசை தேசிய ஒலிம்பிக் குழு பெற்ற தங்கப் பதக்கங்களின்படி அமைக்கப்பட்டுள்ளது. அடுத்து வெள்ளிப்பதக்கங்களின் எண்ணிக்கையும் இறுதியாக வெண்கலப் பதக்கங்களின் எண்ணிக்கையைக் கொண்டும் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. இவற்றிற்குப் பிறகும் சமனாக இருக்கும் நாடுகள் பன்னாட்டு ஒலிம்பிக் குழுவின் நாட்டுக் குறிகளின் ஆங்கில எழுத்துவரிசைப்படி அமைந்துள்ளன. இந்தப் பட்டியலை ப.ஒ.கு தந்துள்ளபோதும் ப.ஒ.கு எந்தவொரு தரவரிசைப் படுத்தலையும் ஆதரிக்கவோ ஏற்றுக் கொள்ளவோ இல்லை.[17][18]

குத்துச்சண்டை (13 போட்டிகள்), யுடோ (14), டைக்குவாண்டோ (8), மற்போர் (18) விளையாட்டுக்களில் ஒவ்வொரு போட்டிக்கும் இரண்டு வெண்கலப் பதக்கங்கள் வழங்கப்பட்டன. (மொத்தம் 53 கூடுதல் வெண்கலப் பதக்கங்கள்).

பெண்கள் 100 மீட்டர் கட்டற்றவகை நீச்சற்போட்டியில் முதலிடத்தைச் சமனாகப் பிடித்த இருவருக்கும் தங்கப் பதக்கங்கள் வழங்கப்பட்டன. இதனால் வெள்ளிப் பதக்கம் வழங்கப்படவில்லை.

ஆண்கள் 100 மீட்டர் வண்ணாத்தி நீச்சற்போட்டியில் இரண்டாமிடத்தில் சமனாக வந்த மூவருக்கு வெள்ளிப் பதக்கங்கள் வழங்கப்பட்டன. இதனால் வெண்கலப் பதக்கமேதும் வழங்கப்படவில்லை.

பெண்கள் 100மீ பின்னோக்கிய வீச்சு நீச்சற்போட்டியிலும் ஆண்கள் கே-1 200 மீட்டர் சிறுபடகோட்டத்திலும் மூன்றாமிடத்தில் சமநேரத்தில் வந்த இருவருக்கு வெண்கலப் பதக்கங்கள் வழங்கப்பட்டன.

குறிவிளக்கம்

      நடத்துநர் நாடு (பிரேசில்)

மேலதிகத் தகவல்கள் நிலை, தேஒகு ...
Remove ads

பதக்க நிலைகளில் மாறுதல்கள்

ஆகத்து 18, 2016 அன்று கிர்கிசுத்தான் பாரம்தூக்கும் போட்டியாளர் இச்சத் ஆர்டிகோவ் ஆண்கள் 69 கிலோ வகுப்பில் பெற்ற வெண்கலப் பதக்கம் ஊக்கமருந்து சோதனையில் தவறியதால் பறிக்கப்பட்டது; அந்நிகழ்வில் நான்காவதாக வந்த கொலொம்பியாவின் லூயி யேவியர் மோசுகுயேராவிற்கு அது தரப்பட்டது.[19][20]

மாற்றப் பட்டியல்

மேலதிகத் தகவல்கள் தீர்வு நாள், விளையாட்டு ...
Remove ads

மேற்சான்றுகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads