2018 உலகக்கோப்பை காற்பந்து ஆட்டமிழக்கும் நிலை

From Wikipedia, the free encyclopedia

Remove ads

2018 உலகக்கோப்பை காற்பந்து ஆட்டமிழக்கும் நிலை என்பது குழு நிலையைத் தொடர்ந்து இடம்பெறும் போட்டியின் இரண்டாவதும் இறுதியுமான நிலையாகும். 30 சூன் இல் சுற்று 16 ஆக ஆரம்பித்து 15 சூலையில் இறுதிப்போட்டியுடன் மாஸ்கோவின் லூசினிக்கி அரங்கில் இது நிறைவடையும்.[1]

நேரங்கள் உருசிய உள்ளூர் நேரத்தின்படி தரப்பட்டுள்ளன.[1]

தகுதிபெற்ற அணிகள்

இணைப்பு

 
சுற்று 16கால் இறுதிகள்அரை இறுதிகள்இறுதி
 
              
 
30 சூன் – சோச்சி
 
 
 உருகுவை2
 
6 சூலை – நீசுனி நோவ்கோரத்
 
 போர்த்துகல்1
 
 உருகுவை0
 
30 சூன் – கசான்
 
 பிரான்சு2
 
 பிரான்சு4
 
10 சூலை – சென் பீட்டர்ஸ்பேர்க்
 
 அர்கெந்தீனா3
 
 பிரான்சு1
 
2 சூலை – சமாரா
 
 பெல்ஜியம்0
 
 பிரேசில்2
 
6 சூலை – கசான்
 
 மெக்சிக்கோ0
 
 பிரேசில்1
 
2 சூலை – ரசுத்தோவ்
 
 பெல்ஜியம்2
 
 பெல்ஜியம்3
 
15 சூலை – மாஸ்கோ (லூசினிக்கி)
 
 சப்பான்2
 
 பிரான்சு4
 
1 சூலை – மாஸ்கோ (லூசினிக்கி)
 
 குரோவாசியா2
 
 எசுப்பானியா1 (3)
 
7 சூலை – சோச்சி
 
 உருசியா (சநீ)1 (4)
 
 உருசியா2 (3)
 
1 சூலை – நீசுனி நோவ்கோரத்
 
 குரோவாசியா (சநீ)2 (4)
 
 குரோவாசியா (சநீ)1 (3)
 
11 சூலை – மாஸ்கோ (லூசினிக்கி)
 
 டென்மார்க்1 (2)
 
 குரோவாசியா (கூ.நே.)2
 
3 சூலை – சென் பீட்டர்சுபர்கு
 
 இங்கிலாந்து1 மூன்றாமிடப் போட்டி
 
 சுவீடன்1
 
7 சூலை – சமாரா14 சூலை – சென் பீட்டர்ஸ்பேர்க்
 
 சுவிட்சர்லாந்து0
 
 சுவீடன்0 பெல்ஜியம்2
 
3 சூலை – மாஸ்கோ (அத்கிறீத்தியே)
 
 இங்கிலாந்து2  இங்கிலாந்து0
 
 கொலம்பியா1 (3)
 
 
 இங்கிலாந்து (சநீ)1 (4)
 
Remove ads

சுற்று 16

பிரான்சு எ. அர்கெந்தீனா

இரண்டு அணிகளும் இதற்கு முன்னர் 11 ஆட்டங்கள் ஒன்றுடன் ஒன்று விளையாடியுள்ளன. இவற்றில் இரண்டு உலகக்கோப்பைக்கான குழு நிலை ஆட்டங்கள் ஆகும். இரண்டிலும் அர்கெந்தீனா வென்றது (1930 இல் 1–0, 1978 இல் 2–1).[2]

2018 இல் இடம்பெற்ற இப்போட்டி "உலகக்கோப்பை வரலாற்றிலேயே இடம்பெற்ற மிகப் பெரும் போட்டி" என தி இன்டிபென்டெண்ட் இதழ் எழுதியுள்ளது.[3]

மேலதிகத் தகவல்கள் பிரான்சு, 4–3 ...
பார்வையாளர்கள்: 42,873[4]
நடுவர்: அலிரேசா பகானி (ஈரான்)

உருகுவை எ. போர்த்துகல்

Thumb
உருகுவையின் 2-வது கோலை எடின்சன் கவானி 62-வது நிமிடத்தில் போட்ட போது

இரு அணிகளும் இதற்கு முன்னதாக இரண்டு தடவைகள் தமக்கிடையே மோதியுள்ளன. 1972 இல் பிரேசில் விடுதலைக் கோப்பை தொடரில் 1-1 என்ற கணக்கில் சமமாக முடிந்தது.[2]

உலகக்கோப்பையில் போர்த்துகலின் வயதில் கூடிய விளையாட்டு வீரராக பெப்பே விளையாடி சாதனை படைத்தார்.[5] 1930 இற்குப் பின்னர் முதல்தடவையாக உருகுவே அணி உலகக்கோப்பை போட்டிகளில் நான்கு ஆரம்பப் போட்டிகளிலும் வெற்றியடைந்துள்ளது. 1930 தொடரில் இறுதிப் போட்டியில் அர்கெந்தீனாவை 4–2 என்ற கணக்கில் கோப்பையை வென்றது.[6]

மேலதிகத் தகவல்கள் உருகுவை, 2–1 ...
பார்வையாளர்கள்: 44,287[7]
நடுவர்: சேசர் அர்த்தூரோ ரமோசு (மெக்சிக்கோ)

எசுப்பானியா எ. உருசியா

Thumb
உருசிய வீரர்கள் வெற்றியைக் கொண்டாடுகிறார்கள்

இரு அணிகளும் இதற்கு முன்னதாக ஆறு முறை தமக்கிடையே விளையாடியுள்ளன. கடைசியாக 2017 ஆம் ஆண்டில் நட்புப் போட்டி ஒன்றில் விளையாடி 3–3 என்ற கணக்கில் சமத்தில் முடித்தன. உருசிய அணி 1991 இற்கு முன்னர் சோவியத் அணிக்காக விளையாடிய போது இரு அணிகளும் ஐந்து முறை சந்தித்துள்ளன.[2] உருசியா ஒரு போட்டியில் மட்டுமே எசுப்பானியாவை வென்றுள்ளது.

ஆட்டத்தின் 12-வது நிமிடத்தில், உருசியாவின் சிர்கேய் இக்னசேவிச்சின் சுய கோலினால் எசுப்பானியா 1-0 என்ற கணக்கில் முன்னிலைக்கு வந்தது. இதற்குப் பதிலாக 42-வது நிமிடத்தில் உருசியாவின் அர்த்தியோம் திசியூபா கோல் போட்டு சமப்படுத்தினார். கூடுதலாக வழங்கப்பட்ட இரண்டு 15 நிமிட நேரத்தில் எந்த அணியும் கோல் போடாததால், சமன்நீக்கி மோதல் மூலம் முடிவு நிர்ணயிக்கப்பட்டது. உருசியா 4-3 என்ற கணக்கில் வென்றது.[8]

எசுப்பானியா இப்போது உலகக்கோப்பைகளில் சமன்நீக்கி மோதல் மூலம் நான்கு முறை விளையாடி மூன்றில் தோற்றது. 1986 இல் பெல்ஜியத்துடனும், 2002 இல் தென் கொரியாவுடனும் விளையாடித் தோற்றது. 2002 இல் அயர்லாந்துடன் விளையாடி வென்றது. உலகக்கோப்பையை நடத்தும் நாட்டை எப்போதும் வென்றிருக்கவில்லை. (முன்னதாக 1934 இல் இத்தாலியுடன் 0–1, 1950 பிரேசிலுடன் 1–6, 2002 தென் கொரியாவுடன் சமன்நீக்கி மோதல் மூலமும் தோற்றது.[9] சோவியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர், உருசியா முதற்தடவையாக காலிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. சிர்கேய் இக்னசேவிச் உலகக்கோப்பையில் சுய கோல் போட்ட வயது கூடிய (36 ஆண்டுகள் 352 நாட்கள்) ஆட்டக்காரர் ஆவார்.[10] உலகக்கோப்பை வரலாற்றில் முதல் தடவையாக நான்காவது பதில்-விளையாட்டு வீரர் விளையாடினார். உருசியாவின் அலெக்சாந்தர் யெரோக்கின் 97-வது நிமிடத்தில் விளையாட ஆரம்பித்தார்.[11]

மேலதிகத் தகவல்கள் எசுப்பானியா, 1–1 (கூ.நே) ...
பார்வையாளர்கள்: 78,011[12]
நடுவர்: ஜோன் குயிப்பர்சு (நெதர்லாந்து)

குரோவாசியா எ. டென்மார்க்

மேலதிகத் தகவல்கள் குரோவாசியா, 1–1 (கூ.நே) ...
பார்வையாளர்கள்: 40,851[13]
நடுவர்: நேஸ்தர் பித்தானா (அர்கெந்தீனா)

பிரேசில் எ. மெக்சிக்கோ

மேலதிகத் தகவல்கள் பிரேசில், 2–0 ...
பார்வையாளர்கள்: 41,970[14]
நடுவர்: கியான்லூக்கா ரொச்சி (இத்தாலி)

பெல்ஜியம் எ. சப்பான்

மேலதிகத் தகவல்கள் பெல்ஜியம், 3–2 ...
பார்வையாளர்கள்: 41,466[15]
நடுவர்: மாலாங் டீடியூ (செனிகல்)

சுவீடன் எ. சுவிட்சர்லாந்து

இரு அணிகளும் முன்னதாக 28 தடவைகள் தமக்கிடையே மோதிக் கொண்டன. 1962 உலலக்கோப்பை தகுதி-காண் போட்டிகளில் இரு தடவைகள் சுவிட்சர்லாந்தும் (3–2, 2–1), ஒரு தடவை சுவீடனும் (4–0) வென்றன. 1978 உலகக்கோப்பை தகுதி-காண் போட்டிகள் இரண்டில் சுவீடம் 2–1 என்ற கணக்கில் வென்றது.[2]

இப்போட்டியில் வென்றதன் மூலம், சுவீடன் அணி 1994 இற்குப் பின்னர் முதல் தடவையாக உலகக்கோப்பை காலிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.[16]

மேலதிகத் தகவல்கள் சுவீடன், 1–0 ...
பார்வையாளர்கள்: 64,042[17]
நடுவர்: தாமிர் இசுக்கோமினா (சுலோவீனியா)

கொலம்பியா எ. இங்கிலாந்து

இரு அணிகளும் இதற்கு முன்னர் 5 தடவைகள் தமக்கிடயே விளையாடியுள்ளன. இவற்றில் 1998 உலகக்கோப்பை குழு நிலை ஆட்டமும் அடங்கும். இப்போட்டியில் இங்கிலாந்து அணி 2–0 என்ற கணக்கில் வென்றது.[2]

இங்கிலாந்து அணி உலகக்கோப்பை போட்டி ஒன்றில் சமன்நீக்கி மோதல் முறை மூலம் போட்டியில் வென்றது இதுவே முதல் முறையாகும். முக்கிய போட்டித் தொடர் ஒன்றில் இங்கிலாந்து அணி சமன்நீக்கி மோதல் மூலம் வென்றது இது இரண்டாவது தடவையாகும் (முன்னதாக யூரோ 1996 போட்டி ஒன்றில் எசுப்பானியாவை வென்றது). இங்கிலாந்து அணிக்காக அடுத்தடுத்த ஆறு போட்டிகளில் கோல் அடித்தவர்கள் பட்டியலில் 1939 ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஹாரி கேன் சேர்ந்து கொள்கிறார்.[18]

மேலதிகத் தகவல்கள் கொலம்பியா, 1–1 (கூ.நே) ...
பார்வையாளர்கள்: 44,190[19]
நடுவர்: மார்க் கெய்கர் (ஐக்கிய அமெரிக்கா)
Remove ads

கால் இறுதிகள்

உருகுவை எ. பிரான்சு

இரு அணிகளும் இதற்கு முன்னதாக எட்டு முறை தமக்கிடையே மோதியுள்ளன. இவற்றில் மூன்று உலகக்கோப்பைக்கான குழு நிலை ஆட்டங்களாகும். உருகுவை ஒரு ஆட்டத்தில் (1966 இல் 2–1 என்ற கணக்கில் வென்றது. 2002 இலும் 2010 இலும் 0–0 என்ற கணக்கில் சமமாக நிறைவு செய்தன.[2]

1974 இல் நெதர்லாந்துக்குப் பின்னர், பிரான்சு அணியே ஒரே உலகக்கோப்பைத் தொடரில் மூன்று வெவ்வேறான தென்னமெரிக்க அணிகளை வென்ற ஒரே நாடாகும். 1978 இல் அர்கெந்தீன அணியிடன் 2-1 என்ற கணக்கில் தோற்ற பின்னர், பிரான்சு தென்னமெரிக்க நாடுகளுக்கு எதிராக விளையாடிய 10 உலகக்கோப்பை ஆட்டங்களில் எந்த ஒரு ஆட்டத்திலும் தோற்கடிக்கப்படவில்லை. 6 தடவைகள் வென்றும், 4 தடவைகள் சமத்திலும் நிறைவு செய்தது.[20]

மேலதிகத் தகவல்கள் உருகுவை, 0–2 ...
பார்வையாளர்கள்: 43,319[21]
நடுவர்: நேஸ்தர் பித்தானா (அர்கெந்தீனா)

பிரேசில் எ. பெல்ஜியம்

இரு அணிகளும் இதற்கு முன்னதாக நான்கு முறை தமக்கிடையே மோதியுள்ளன. உலகக்கோபையில் ஒரு தடவை மட்டுமே மோதியுள்ளன. 2002 ஆம் ஆண்டு உலகக்கோப்பை ஆட்டமிழக்கும் போட்டி ஒன்றில் பிரேசில் 2–0 என்ற கணக்கில் வென்று காலிறுதிக்குத் தகுதி பெற்றது.[2]

பெல்ஜியம் ஆட்டவீர டெ புரூயின் உருசியா 2018 இல் கோல் அடித்த 100வது ஆட்டக்காரர் ஆனார் (சுய கோல் கணக்கில் எடுக்கப்படவில்லை)[22] பெல்ஜியம் உலகக்கோப்பை அரையிறுதிக்கு இரண்டாம் தடவையாகத் தெரிவாகிறது. முன்னர் 1986 இல் அர்கெந்தீனாவுடன் அரையிறுதியில் விளையாடித் தோற்றது. பெல்ஜியத்தின் இவ்வெற்றி பிரேசிலுக்கு எதிரான இரண்டாவது வெற்றியாகும். 1963 இல் நட்புப் போட்டியில் வென்றது. பெல்ஜியம் முன்னதாக 1963 இல் நட்புப் போட்டி ஒன்றில் பிரேசிலை வென்றது.[23]

மேலதிகத் தகவல்கள் பிரேசில், 1–2 ...
பார்வையாளர்கள்: 42,873[24]
நடுவர்: மிலொராத் மாசிச் (செர்பியா)

சுவீடன் எ. இங்கிலாந்து

இரு அணிகளும் இதற்கு முன்னதாக 23 தடவைகள் சந்தித்திருக்கின்றன. உலகக்கோப்பைகளில் இரண்டு தடவைகள் குழுநிலை ஆட்டங்களில் மோதியுள்ளன. 2002 போட்டியில் 1–1 என்ற கணக்கிலும், 2006 இல் 2–2 என்ற கணக்கிலும் வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்தன. அண்மையில் 2012 இல் நடந்த நட்புப் போட்டி ஒன்றில் சுவீடன் 4–2 என்ற கோல் கணக்கில் வென்றது.[2]

30-வது நிமிடத்தில் இங்கிலாந்து அணியின் ஹாரி மெகுவையர் கோல் அடித்தார். 59-வது நிமிடத்தில் டெலி அலி இங்கிலாந்து அணிக்காக இரண்டாவது போட்டார்.[25]

அலியின் கோல் உருசியா 2018 இல் இங்கிலாந்து பெற்ற 11வது கோலாகும். கடைசியாக 1966 உலகக்கோப்பை போட்டிகளில் இங்கிலாந்து அணி 11 கோல்களைப் போட்டிருந்தது.[26] இங்கிலாந்து அணி 1990 இற்குப் பின்னர் முதற்தடவையாக அரையிறுதியில் விளையாடத் தகுதி பெற்றுள்ளது.[27]

மேலதிகத் தகவல்கள் சுவீடன், 0–2 ...
பார்வையாளர்கள்: 39,991[28]
நடுவர்: யோன் குயிப்பர்சு (நெதர்லாந்து)

உருசியா எ. குரோவாசியா

இரு அணிகளும் இதற்கு முன்பதாக மூன்று போட்டிகளில் தமக்கிடையே மோதிக்கொண்டன. கடைசியாக் 2015 இல் நடைபெற்ற நட்புப் போட்டி ஒன்றில் குரோவாசியா 3–1 என்ற கணக்கில் வென்றது.[2]

31-வது நிமிடத்தில், தெனீசு சேரிசெவ் உருசியாவுக்காக கோல் அடித்தார். முதல் பாதி முடிவடைய ஆறு நிமிடங்களுக்கு முன்னர் அந்திரே கிரமாரிச் ஒரு கோல் அடித்து சமப்படுத்தினார். முதலாவது கூடுதல் நேரத்தில் குரொவாசியாவின் தொமகோச் வீதா கோல் போட்டார். இரண்டாவது கூடுதல் நெரத்தில் மரீயோ பெர்னாண்டசு போட்ட கோல் ஆட்டத்தை சமநிலைக்குக் கொண்டு வந்தது. முடிவை நிர்ணயிக்கல் சமன்நீக்கி மோதல் தேவைப்பட்டது. குரோவாசியா இதில் 4-3 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்குத் தகுதி பெற்றது.[29]

உலகக்கோப்பை வரலாற்றில் போட்டி நடத்தும் நாடு ஒன்று ஒரே சுற்றில் இரண்டு தடவைகள் சமன்நீக்கி மோதலில் ஈடுபட்டது இதுவே முதல் தடவையாகும்.[30] குரோவாசியா 1998 இன் பின்னர் முதல் தடவையாக அரசியிறுதிப் போட்டியில் விளையாடுகிறது. (அது தனது முதலாவது உலகக்கோப்பைப் போட்டியை 1998 இல் விளையாடியது).[31]

மேலதிகத் தகவல்கள் உருசியா, 2–2 (கூ.நே) ...
பார்வையாளர்கள்: 44,287[32]
நடுவர்: சாந்திரோ ரிச்சி (பிரேசில்)
Remove ads

அரை இறுதிகள்

1966 இற்குப் பின்னர் முதற்தடவையாக, ஒன்றுக்கு மேற்பட்ட உலகக்கோபைகளை வென்ற அணிகள் அரையிறுதிக்கு முன்னரேயே வெளியேறி விட்டன. அத்தோடு முதல் தடவையாக பிரேசொல்லோ, செருமனியோ அல்லது அர்கெந்தீனாவோ அரையிறுதிக்கு முன்னேறவில்லை.[33] உருகுவையும் பிரேசிலும் காலிறுதியின் முடிவில் வெளியேறியதை அடுத்து, அனைத்து-ஐரோப்பிய அரையிறுதி ஆட்டங்கள் ஐந்தாவது தடவையாக (1934, 1966, 1982, 2006 இற்குப் பின்னர்) இடம்பெறுகிறது.

பிரான்சு எ. பெல்ஜியம்

இரு அணிகளும் இதற்கு முன்பாக 73 ஆட்டங்களில் தமக்கிடையே மோதியுள்ளன. இவற்றில் இரண்டு உலகக்கோப்பை விளையாட்டுகள் ஆகும். 1938 இல் 16 அணிச் சுற்றில் 3–1 என்ற கணக்கிலும், 1986 இல் மூன்றாம் இடத்துக்கான போட்டியில் 4–2 என்ற கணக்கிலும் பிரான்சு வெற்றி பெற்றது. அண்மையில் 2015 இல் நடந்த நட்புப் போட்டி ஒன்றில் 4–3 என்ற கணக்கில் பெல்ஜியம் வெற்றி பெற்றது.[2]

2016 செப்டம்பரின் பின்னர் பெல்ஜியம் தோல்வியடைந்த முதலாவது ஆட்டம் இதுவாகும். பிரான்சு மூன்றவது தடவையாக உலகக்கோப்பை இறுதிப் போட்டி ஒன்றில் விளையாடத் தகுதி பெற்றுள்ளது. முன்னதாக 1998, 2006 இல் தகுதி பெற்றிருந்தது.[34]

மேலதிகத் தகவல்கள் பிரான்சு, 1–0 ...
பார்வையாளர்கள்: 64,286[35]
நடுவர்: ந்திரேசு குனியா (உருகுவை)

குரோவாசியா எ. இங்கிலாந்து

Thumb
68வது நிமிடத்தில் இவான் பெரிசிச் போட்ட சமப்படுத்துக் கோலை குரோவாசிய விசிறிகள் கொண்டாடுகின்றனர்.

இரு அணிகளும் இதற்கு முன்னதாக ஏழு முறை தமக்கிடையே விளையாடியுள்ளன. 2010 உலகக்கோப்பை காற்பந்து போட்டிக்கான தகுதிகாண் போட்டிகள் இரண்டிலும் இங்கிலாந்து முறையே 4–1, 5–1 என்ற கணக்கில் வென்றது.[2]

மேலதிகத் தகவல்கள் குரோவாசியா, 2–1 (கூ.நே) ...
பார்வையாளர்கள்: 78,011[36]
நடுவர்: கூநெய்த் சாக்கிர் (துருக்கி)
Remove ads

மூன்றாமிடப் போட்டி

இரண்டு அணிகளும் இதற்கு முன்னதாக 22 முறை தமக்கிடையே மோதியுள்ளன. இவற்றில் மூன்று உலகக்கோப்பைப் போட்டிகளாகும். 1990 உலகக்கோப்பை 16-அணிகளின் சுற்றில் இங்கிலாந்து 1–0 என்ற கணக்கில் வென்றது. 1954 உலகக்கோப்பை குழு நிலைப் போட்டியில் 4–4 என்ற கணக்கில் சமப்படுத்தின. இறுதியாக 2018 உலகக்கோப்பை குழுநிலை ஆட்டத்தில் பெல்ஜியம் வெற்றி பெற்றது (1–0).[2]

ஆட்டம் ஆரம்பித்த 4வது நிமிடத்தில் நாசர் சாட்லி தோமசு மெயூனியருக்குப் பந்தைக் கொடுக்க, அவர் முதலாவது கோலைப் போட்டு பெல்ஜியத்தை முன்னிலைப்படுத்தினார். 82-வது நிமிடத்தில் கெவின் டி புரூயின் ஏடன் அசார்டுக்குப் பந்தைக் கொடுக்க, அசார்டு பெல்ஜியத்துக்கான இரண்டாவது கோலைப் போட்டு வெற்றியை உறுதிப்படுத்திக் கொண்டார். கடைசி வரை போராடிய இங்கிலாந்து அணியால் கோல் எதனையும் போட முடியவில்லை.[37]

மெயூனியரின் கோல் உருசியா 2018 இல் பெல்ஜியம் போட்ட 10-வது கோல் ஆகும். 1982 (பிரான்சு), 2006 (இத்தாலி) இற்குப் பின்னர் உலகக்கோப்பை ஒன்றில் இவ்வளவு அதிகம் ஒரு அணி போட்டதில்லை.[38] உலகக்கோப்பை விளையாட்டில் பெல்ஜியம் அணியின் அதி கூடிய வெற்றி இதுவாகும். 1986 இல் நான்காவதாக வந்திருந்தது. இவ்வாட்டம் இங்கிலாந்து அணி விளையாடிய 100-வது முக்கிய போட்டி ஆகும், உலகக்கோப்பையில் 69-வது ஆகும்.[39]

மேலதிகத் தகவல்கள் பெல்ஜியம், 2–0 ...
பார்வையாளர்கள்: 64,406[40]
நடுவர்: அலிரேசா பகானி (ஈரான்)
Remove ads

இறுதி

மேலதிகத் தகவல்கள் பிரான்சு, 4–2 ...
பார்வையாளர்கள்: 78,011[41]
நடுவர்: நேஸ்தர் பித்தானா (அர்கெந்தீனா)
Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads