அரசு அருங்காட்சியகம், மதுரா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
அரசு அருங்காட்சியகம், மதுரா அல்லது மதுரா அருங்காட்சியகம் (Government Museum, Mathura),இந்தியாவின் முதல் தொல்பொருள் அருங்காட்சியகம் ஆகும். இவ்வருங்காட்சியகம், இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் மதுரா நகரத்தில் 1874ல் நிறுவப்பட்டது.[1]
மதுரா அருங்காட்சியகத்தில் கலைநயத்துடன் கூடிய சுடுமட்பாணைகள், சிற்பங்கள், ஓவியங்கள் மற்றும் பண்டைய நாணயங்கள் மற்றும் பிரித்தானிய தொல்லியல் அறிஞர் அலெக்சாண்டர் கன்னிங்காம் கண்டுபிடித்த தொல்பொருட்கள் இவ்வருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.[1] கிமு 3ம் நூற்றாண்டு முதல் கிபி 12ம் நூற்றாண்டு முடிய இந்தியத் துணைக் கண்டத்தை ஆண்ட இந்தோ கிரேக்கர்கள், குசானர்கள் மற்றும் குப்தர்களின் காலத்திய புத்தர் மற்றும் பிற பௌத்த சிற்பங்கள், நாணயங்கள் இவ்வருங்காட்சியகத்தை பெருமை கொள்ளச் செய்கிறது.[2].[3]
Remove ads
புகழ் பெற்ற கலைப் படைப்புகள்
- கிரேக்கர்களின் தாய்க் கடவுள், கிமு 4ம் நூற்றாண்டு
- 3000-year-old anthropomorphic copper figure (ACCN 93-51) found at Shahabad, UP
- சமண தீர்த்தங்கரர் தலைச் சிற்பம், கிபி 2ம் நூற்றாண்டு
- சுங்கர் காலத்திய குழந்தைகள் பிறப்புபிற்கு காரணமான நய்கமேசம் எனும் சமணர் தேவன், ஆண்டு கிமு 2ம் நூற்றாண்டு
- சுபர்சுவநாதர் மற்றும் மூன்று தீர்த்தங்கரர்களின் சிற்பம், கிபி 1ம் நூற்றாண்டு
- காம்போஜ இராணியின் சிலை, கிபி 1ம் நூற்றாண்டு
- சமண கலைப் பொருள், கிபி 1ம் நூற்றாண்டு
- குசானர் காலத்திய தீர்த்தங்கரர் பார்சுவநாதர் சிற்பம்
- குசான் பேரரசர் கனிஷ்கரின் சிலை (127 – ca. 140)
- கிபி 5ம் நூற்றாண்டின் புத்தர் தலை சிற்பம்
- சமணச் சிற்பம், 6ம் நூற்றாண்டு
- ரிசபதேவர் சிலை, 6ம் நூற்றாண்டு
- குப்தர்கள் காலத்திய பார்சுவநாதர் சிற்பம், கிபி 6-8ம் நூற்றாண்டு
- சமண சமய இயக்கியான அம்பிகையின் சிற்பம்
- தியான நிலையில் நான்கு கைகளுடன் கூடிய விஷ்ணுவின் சிற்பம்
- சமணத் தீர்த்தாங்கரர் நமிநாதரின் சிற்பம், 12ம் நூற்றாண்டு
- சமண அம்பிகையின் சிற்பம், ஒடிசா, 12ம் நூற்றாண்டு
- 15-16நூற்றாண்டின் போதிசத்துவர் மஞ்சுசிறீ சிற்பம்
- வஜ்ராயுதத்துடன் கூடிய புத்தரின் வெங்கலச் சிற்பம், 18ம் நூற்றாண்டு
- பலராமன் சிற்பம், 18ம் நூற்றாண்டு
- பந்துடன் கூடிய குழந்தை பாலகிருஷ்ணன்
- வரலாற்று காலத்திற்கு முந்தைய சுடுமண் சிற்பங்கள்
- விக்டோரியா ராணியின் சிலை
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
மேலும் படிக்க
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads