ஆசியக் கிண்ணம் 2012

பதினோராவது ஆசிய துடுப்பாட்ட தொடர் From Wikipedia, the free encyclopedia

ஆசியக் கிண்ணம் 2012
Remove ads

ஆசியக் கிண்ணம் 2012, (2012 Asia Cup) துடுப்பாட்டப் போட்டிகள் 2012 ஆம் ஆண்டு மார்ச் 11 முதல் மார்ச் 22 வரை வங்காளதேசத்தில் இடம்பெற்றன. இது ஆசியக்கிண்ணத்தின் 11வது போட்டித் தொடர் ஆகும்.

விரைவான உண்மைகள் நிர்வாகி(கள்), துடுப்பாட்ட வடிவம் ...

ஆசியாவின் நான்கு தேர்வுப் போட்டிப் பங்காளர்களான இந்தியா, பாக்கித்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய அணிகள் இப்போட்டித்தொடரில் பங்குபற்றின. இறுதிப் போட்டியில் பாக்கித்தான் அணி வங்காளதேசத்தை 2 ஓட்டங்களால் வென்றது. 2010 ஆம் ஆண்டு போட்டித்தொடரில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தது[8].

Remove ads

பின்னணி

இப்போட்டித்தொடரை நடத்துவதற்கு சீனா குனாங்சூ மாகானத்தில் நடத்த விருப்பம் தெரிவித்திருந்தது[9], ஆனாலும் ஆசியத் துடுப்பாட்ட வாரியம் வங்காளதேசத்தில் இப்போட்டித் தொடரை நடத்தத் தீர்மானித்தது. 1988 இலும் 2000 ஆம் ஆண்டிலும் வங்காளதேசத்தில் இப்போட்டிகள் இடம்பெற்றிருந்தன[8].

அரங்கங்கள்

இப்போட்டித்தொடரின் அனைத்து 7 போட்டிகளும் மிர்ப்பூர் தாணா மாவட்டத்தில் உள்ள சேர்-இ-பங்களா துடுப்பாட்ட அரங்கத்தில் நடைபெறுகின்றன[10].

மேலதிகத் தகவல்கள் நகரம், அரங்கம் ...

அணிகள்

மேலதிகத் தகவல்கள் வங்காளதேசம், இந்தியா ...

புள்ளிகள் அட்டவணை

[15]

மேலதிகத் தகவல்கள் நிலை, அணி ...
Remove ads

ஆட்டங்கள்

பிரிவு ஆட்டங்கள்

அனைத்தும் உள்ளூர் நேரப்படி (ஒசநே+06:00)

ஆட்டம் 1

11 மார்ச்
14:00 (ப/இ)
ஆட்டவிபரம்
சக்கீப் அல் அசன் 64 (66)
உமர் குல் 3/58 (9.1)
பாக்கித்தான் 21 ஓட்டங்களால் வெற்றி.
சேர்-இ-பங்களா துடுப்பாட்ட அரங்கம், டாக்கா
நடுவர்கள்: இயன் கூல்ட் (இங்கி), பவுல் ரைபல் (ஆஸ்)
ஆட்ட நாயகன்: முகமது அபீசு (பாக்)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற வங்காளதேசம் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

ஆட்டம் 2

13 மார்ச்
14:00 (ப/இ)
Scorecard
 இலங்கை
254/10 (45.1)
இந்தியா 50 ஓட்டங்களால் வெற்றி
தானரி வீதி துடுப்பாட்ட அரங்கம், டாக்கா
நடுவர்கள்: ஸ்டீவ் டேவிஸ் (ஆஸ்), இயன் கூல்ட் (இங்கி)
ஆட்ட நாயகன்: விராட் கோலி (இந்)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

ஆட்டம் 3

15 மார்ச்
14:00 (ப/இ)
ஆட்டவிபரம்
இலங்கை 
188 (45.4)
குமார் சங்கக்கார 71 (92)
ஐசாஸ் சீமா 4/43 (9)
பாக்கித்தான் 6 இலக்குகளால் வெற்றி.
சேர்-இ-பங்களா துடுப்பாட்ட அரங்கம், டாக்கா
நடுவர்கள்: ஸ்டீவ் டேவிஸ் (ஆஸ்), பவுல் ரைபல் (ஆஸ்)
ஆட்ட நாயகன்: ஐசாஸ் சீமா (பாக்)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
  • பாக்கித்தான் ஒரு ஊக்கப் புள்ளியைப் பெற்றது.

ஆட்டம் 4

16 மார்ச்
14:00 (ப/இ)
ஆட்டவிபரம்
சச்சின் டெண்டுல்கர் 114 (147)
மஷ்ராஃப் மொர்ட்டாசா 2/44 (10)
வங்காளதேசம் 5 இலக்குகளால் வெற்றி.
சேர்-இ-பங்களா துடுப்பாட்ட அரங்கம், டாக்கா
நடுவர்கள்: இயன் கூல்ட் (இங்), பவுல் ரைபல் (ஆஸ்)
ஆட்ட நாயகன்: சக்கீப் அல் அசன் (வங்)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற வங்காளதேசம் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • சச்சின் டெண்டுல்கர் (இந்) பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் 100வது சதமடித்த முதலாவது வீரரானார்[16][17][18].

ஆட்டம் 5

18 மார்ச்
14:00 (ப/இ)
ஆட்டவிபரம்
 இந்தியா
330/4 (47.5)
இந்தியா 6 இலக்குகளால் வெற்றி
சேர்-இ-பங்களா துடுப்பாட்ட அரங்கம், டாக்கா
நடுவர்கள்: ஸ்டீவ் டேவிஸ் (ஆஸ்), இயன் கூல்ட் (இங்)
ஆட்ட நாயகன்: விராட் கோலி (இந்)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற பாக்கித்தான் அணி முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
  • விராட் கோலியின் ஓட்ட எண்ணிக்கை ஆசியக் கிண்ண விளையாட்டு ஒன்றில் எடுக்கப்பட்ட அதிகூடிய ஓட்டங்களாகும்[19].
  • நசீர் ஜம்சீட், முகம்மது ஹஃபீஸ் ஆகியோரின் தொடக்க ஆட்ட எண்ணிக்கை 224, பாக்கித்தான் எ. இந்தியா ஆட்டங்களில் அதிகூடியதாகும்[20].

ஆட்டம் 6

20 மார்ச்சு
14:00 (ப/இ)
ஆட்டவிபரம்
இலங்கை 
232 (49.5)
சமார கப்புகெதர 62 (92)
நசுமுல் உசைன் 3/32 (8)
வங்காளதேசம் 5 இலக்குகளால் வெற்றி (ட/லூ முறை)
சேர்-இ-பங்களா துடுப்பாட்ட அரங்கம், டாக்கா
நடுவர்கள்: ஸ்டீவ் டேவிஸ் (ஆஸ்), பவுல் ரைபல் (ஆஸ்)
ஆட்ட நாயகன்: சகீப் அல் அசன் (வங்)
  • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற வங்காளதேசம் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • மழை காரணமாக வங்காளதேசத்தின் ஆட்டப் பத்துவீச்சுகள் 40 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது, வெற்றி பெற 212 ஓட்டங்கள் தேவைப்பட்டது டக்வோர்த் லூயிஸ் முறை
  • வங்காளதேசம் இறுதிப் போட்டிக்கு விளையாடத் தகுதி பெற்றது.

இறுதி ஆட்டம்

22 மார்ச்சு
14:00 (ப/இ)
ஆட்டவிபரம்
சப்ராஸ் அகமது 46* (52)
அப்துர் ரசாக் 2/26 (10)
சகீப் அல் அசன் 68 (72)
ஐசாஸ் சீமா 3/46 (7)
பாக்கித்தான் 2 ஓட்டங்களால் வெற்றி
சேர்-இ-பங்களா துடுப்பாட்ட அரங்கம், டாக்கா
நடுவர்கள்: ஸ்டீவ் டேவிஸ் (ஆஸ்), இயன் கூல்ட் (இங்)
ஆட்ட நாயகன்: சாகித் அஃபிரிடி (பாக்)
  • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற வங்காளதேச அணி களத்தடுப்பாடத் தீர்மானித்தது.[21]
  • 2000 ஆசியக் கிண்ணத்துக்குப் பின்னர் பாக்கித்தான் அணி இரண்டாவது தடவையாக ஆசியக் கிண்ணத்தைக் கைப்பற்றியிருக்கிறது.[22]
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads