ஆரப்பாளையம் (மதுரை)

தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்திலுள்ள‌‌ ஒரு புறநகர்ப் பகுதி From Wikipedia, the free encyclopedia

ஆரப்பாளையம் (மதுரை)map
Remove ads

ஆரப்பாளையம் (Arappalayam அல்லது Arapalayam)[1] என்பது தமிழ் நாட்டின் மதுரை நகரத்தின் ஒரு பகுதியாகும். இப்பகுதி வைகை ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ளது. இது மதுரை மத்தி (சட்டமன்றத் தொகுதி) சார்ந்தது.[2] இதன் அஞ்சல் குறியீடு 625016.

விரைவான உண்மைகள் ஆரப்பாளையம் (மதுரை)Arappalayam, நாடு ...

ஆற்றின் கரையில் அமைந்துள்ள பகுதி என்பதால் இப்பகுதிக்கு ஆறு, பாளையம் ஆகிய இரண்டு சொற்களையும் சேர்த்து ஆற்றுப்பாளையம் எனப் பெயரிடப்பட்டுப் பின் ஆரப்பாளையம் என மருவி இருக்கலாம் என்பது செவிவழிச் செய்தி.

மதுரை இரயில்நிலையத்திலிருந்து ஒரு கி.மீ. தொலைவிலும், மதுரை வானூர்தி நிலையத்திலிருந்து 11 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. பருத்தி ஆலை மதுரா கோட்ஸ் இப்பகுதியில் அமைந்துள்ளது.[3]

Remove ads

தெருக்களும் பகுதிகளும்

ஆரப்பாளையம் மெயின் ரோடு, மேலப் பொன்னகரம் (10 தெருக்கள்), பொன்னகரம் பிராட்வே, ஆரப்பாளையம் கிராஸ் ரோடு, கிருஷ்ணாபாளையம் தெருக்கள், மோதிலால் தெருக்கள், அழகரடி தெருக்கள், மெய்யப்பன் தெரு, ஹார்வி நகர், சகாயமாதா தெரு, ஏஏ ரோடு, டிடி ரோடு, ஜேஜே ரோடு , புட்டுத்தோப்பு, கரிமேடு, மஞ்சள் மேடு, கோமாஸ் பாளையம், ஞானஒளிபுரம், ஹார்வி நகர், ஆரப்பாளையம் பேருந்து நிலையம் ஆகியவை ஆரப்பாளையத்தைச் சேர்ந்த தெருக்களும் பகுதிகளுமாகும்.

Remove ads

வழிபாட்டுத் தலங்கள்

இந்துக் கோவில்கள்

- (சிவனின் 64 திருவிளையாடல்களில் ஒன்றான பிட்டுக்கு மண் சுமந்தது என்னும் திருவிளையாடல் நடந்த வரலாற்றுச் சிறப்புடையது இக்கோவில்).

  • இரயில்வே காலனி செல்வ விநாயகர் கோவில்
  • வைகை பெருமாள் கோவில்

- இக்கோவிலின் முதன்மைக் கடவுளான பெருமாளின் சிலை வைகை ஆற்றில் கண்டெடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அரசால் போக்குவரத்துக்கும் பொதுமக்களின் நடமாட்டத்துக்கும் இடைஞ்சலாக இருப்பதாக முடிவெடுக்கப்பட்டதால், தற்பொழுது இச்சிலை மேலப் பொன்னகரம் மெயின் ரோட்டிலுள்ள கிருஷ்ணன் கோவிலில் (ஆனந்த் மெமோரியல் பள்ளிக்கு எதிரேயுள்ள) வைக்கப்பட்டுள்ளது.

  • வைகை ஆஞ்சநேயர் கோவில்

கிறித்துவ தேவாலயங்கள்

  • புனித வளனார் ஆலயம், ஞானஒளிபுரம்
  • சிஎஸ்ஐ சர்ச், கரிமேடு, புட்டுத் தோப்பு, மேலப்பொன்னகரம் 5 ஆவது தெரு.

மசூதிகள்

டிடி ரோடு, கரிமேடு-இங்கு இசுலாமியர்களின் வழிபாட்டுத் தலங்கள் உள்ளன.

Remove ads

கல்வி நிறுவனங்கள்

  • விகாசா பள்ளி, அழகரடி அருகில்
  • புனித பிரிட்டோ மேல்நிலைப் பள்ளி, ஞானஒளிபுரம்
  • ஆர்சி பிரைமரி பள்ளி, ஞானஒளிபுரம்
  • ஹோலி ஃபேமிலி மேல்நிலைப் பள்ளி, மேலப் பொன்னகரம் 5 ஆவது தெரு
  • ஆனந்த் மெமோரியல் மெட்ரிக்குலேஷன் பள்ளி, ஆரப்பாளையம் பேருந்து நிலையம்.
  • கேப்ரன் ஹால் மேல்நிலைப்பள்ளி, புட்டுத் தோப்பு
  • மீனாட்சி பள்ளி, மோதிலால் 4 ஆவது தெரு
  • குமார் இங்கிலீஷ் பள்ளி, மோதிலால் 4 ஆவது தெரு
  • ஏஞ்சல் நர்சரி பள்ளி, மோதிலால் 3 ஆவது தெரு
  • ராஜம் வித்தியாலயம், காளவாசல்
  • மதுரை முத்து நடுநிலைப் பள்ளி, அழகரடி
  • லயோலா தொழில்நுட்ப நிறுவனம், ஞானஒளிபுரம்

பேருந்து நிலையம்

இங்கு அமைந்துள்ள பேருந்து நிலையம் மதுரை நகரில் அமைந்துள்ள முக்கியப் பேருந்து நிலையங்களுள் ஒன்றாகும். இந்தப் பேருந்து நிலையத்திலிருந்து தேனி, திண்டுக்கல், கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம் போன்ற முக்கிய ஊர்களுக்கும், இந்நகரங்களைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படும் மாவட்டங்களிலுள்ள பிற ஊர்களுக்கும் செல்லும் புறநகர்ப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. திருமங்கலம் பேருந்து நிலையம், மதுரை மாநகராட்சி ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் மற்றும் வேறு சில பகுதிகளுக்கும் இங்கிருந்து 24 மணி நேரமும் நகரப் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

Remove ads

திரையரங்குகள்

இங்கு அமைந்துள்ள திரையரங்குகள்:

  • மதி திரையரங்கு
  • குரு திரையரங்கு
  • மிட்லேண்ட் திரையரங்கு
  • வெள்ளைக்கண்ணு திரையரங்கு
  • சோலமலை திரையரங்கு
  • ராம்-விக்டோரியா திரையரங்கு
  • மாப்பிளை விநாயகர், மாணிக்க விநாயகர் திரையரங்குகள்
  • Thangam Parameshwari theatre

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads