ஆர். வி. உதயகுமார்
தமிழ்த் திரைப்பட இயக்குநர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஆர். வி. உதயகுமார் தமிழ்த் திரைப்படத்துறையில் உள்ள முன்னணி இயக்குநர்களில் ஒருவராவார். 1990களில் வெளியான எஜமான், சின்ன கவுண்டர் போன்ற பல வெற்றித் திரைப்படங்களை இயக்கியவர்.[2][3][4] இவர் கோயமுத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். கோவை அரசு கலைக் கல்லூரியில் பட்டம் பெற்ற பின்னர் திரைப்பட வாய்ப்புகளுக்காக சென்னைக்கு இடம்பெயர்ந்தார். தமிழ்த் திரைப்படத்துறையில் ரஜினிகாந்த், விஜயகாந்த், கார்த்திக் உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.
இயக்குநர்கள் ராதாமோகன், தரணி ஆகியோர் இவரது உதவியாளர்கள் ஆவர்.
Remove ads
வாழ்க்கைக் குறிப்பு
இவர் கோவை மேட்டுப்பாளையம் அருகிலுள்ள மோத்தே பாளையம் கிராமத்தில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். இவரது தந்தை வெங்கடசாமி, தாய் கண்ணம்மாள் ஆவர். இவர் கோவையில் பியுசி மற்றும் பி.எஸ்சி படித்த பின்னர் சென்னை திரைப்படக் கல்லூரியில் சேர்ந்து இயக்கத்தில் டிப்ளமோ பெற்றார். இவர் சென்னைத் திரைப்படக் கல்லூரியில் படிக்கும்போது பல குறும்படங்களை இயக்கியுள்ளார்.[5]
திரைப்பட விபரம்
இயக்கிய திரைப்படங்கள்
நடித்த திரைப்படங்கள்
- சின்ன கவுண்டர் (1992)
- எஜமான் (1993)
- சின்ன ராமசாமி பெரிய ராமசாமி (2000) – வெளியாகவில்லை
- இரு நதிகள் (2008)
- சூரிய நகரம் (2012)
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads