கராத்தே ராஜா
நடிகர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
கராத்தே ராஜா (Karate Raja) என்பவர் ஓர் இந்திய திரைப்பட நடிகர் ஆவார். இவர் முக்கியமாக தமிழ் படங்களில் பணியாற்றுகிறார்.[2] கமல்ஹாசனின் விருமாண்டி (2004) திரைப்படத்தில் துணை பாத்திரத்தில் நடித்து நடிகராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார். மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சந்தனக் காடு என்ற தொடரின் முக்கியக் கதாபாத்திரமான வீரப்பனாக நடித்தற்காக பாராட்டுக்களைப் பெற்றார்.[3][4]
Remove ads
தொழில்
கமல்ஹாசனின் விருமாண்டி (2004) திரைப்படத்தில் நடராஜன் நடித்தபிறகு ஒரு நடிகராக தனது தொழில் வாழ்கையில் ஏற்றம் கண்டார். இவருக்கு கமல்ஹாசனால் கராத்தே ராஜா என்ற பெயர் வழங்கப்பட்டது. மேலும் இவர் அந்த ஆண்டில் பிரபலமான இரண்டு தமிழ் படங்களான கில்லி (2004) மற்றும் வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் (2004) போன்றவற்றில் நடித்தார். பின்னர் ராஜா பிரபுதேவாவின் போக்கிரி (2007) மற்றும் திகில் நகைச்சுவை படமான அம்புலி (2012) உள்ளிட்ட படங்களில் தோன்றினார்.[5] இவர் வர்ணம் (2011) படத்தில் குறிப்பிடத்தக்க பாத்திரத்தில் நடித்தார். இவர் திருவம்பாடி தம்பனில் (2012) கிஷோரின் சகோதரராக நடித்தார்.[6] தெலுங்கு மொழி திரைப்படமான உத்யாம சிம்ஹாம் (2019) படத்தில் முக்கிய பாத்திரமான க. சந்திரசேகர் ராவ் கதாபாத்திரத்தில் நடித்தார்.[7][8]
2008 ஆம் ஆண்டில் மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சந்தனக் காடு என்ற தொடரில் முக்கியக் கதாபாத்திரமான வீரப்பனின் கதாபாத்திரத்தில் நடித்தார். படத்தின் இயக்குநர் வீரப்பனின் வாழ்க்கையைப் பற்றி ஆராய்ச்சி செய்வதற்காக மூன்று ஆண்டுகள் செலவிட்டனர். பின்னர் படப்பிடிப்பிற்காக 110 நாட்கள் காட்டில் கழித்தனர். இதன் படப்பிடிப்பு தமிழ்நாடு மற்றும் கர்நாடகத்ததில் நடத்தப்பட்டது.[9][10]
Remove ads
தனிப்பட்ட வாழ்க்கை
கராத்தே ராஜா 2009 சூலை மாதத்தில் திவ்யாவை மணந்தார். இந்த இணையருக்கு மூன்று மகள்கள் உள்ளனர்.[11][12][13] 2014 ஆகத்தில், கராத்தே ராஜா தனது மனைவியைக் காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.[14] பின்னர் அவர் இந்த இணையருக்கு திருமண வாழ்வில் பிரச்சினைகள் இருப்பதாகவும், பல மாதங்களில் சில நாட்கள் மட்டுமே இருவரும் ஒன்றாக வாழ்வதாக கூறினார்.[15]
திரைப்படவியல்
தொலைக்காட்சி
- செம்பருத்தி - மானிக்கம்
- மர்மதேசம்: ஐயந்திரா பரவாய் - வர்மா கலாய் மாணவி
குறிப்புகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads