குல்சன் மாவட்டம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
குல்சன் மாவட்டம் (Gulshan District) (முன்னர்:கராச்சி கிழக்கு மாவட்டம்),, பாக்கித்தான் நாட்டின் தெற்கில் உள்ள சிந்து மாகாணத்தின் 30 மாவட்டங்களில் ஒன்றாகும். சிந்து மாகாணத்தின் கராச்சி கோட்டத்தில் அமைந்த இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் குல்ஷன்-இ-இக்பால் நகரம் ஆகும். குல்ஷன்-இ-இக்பால் நகரமானது, மாகாணத் தலைநகரான கராச்சிக்கு 15 கிலோமீட்டர் தொலைவிலும்; நாட்டின் தலைநகரான இசுலாமாபாத்துக்கு தென்மேற்கே 1,400 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.
2023ஆம் ஆண்டில் சிந்து மாகாண அரசு, கராச்சி கிழக்கு மாவட்டத்தின் பெயரை குல்ஷன் மாவட்டம் என மாற்றியது.[7]
Remove ads
மக்கள் தொகை பரம்பல்
2023 பாக்கித்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 659,389 குடியிருப்புகள் கொண்ட இம்மாவட்ட மக்கள் தொகை 3,921,742 ஆகும்[8]. பாலின விகிதம் 100 பெண்களுக்கு 113.51 ஆண்கள் வீதம் உள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 80.07%[5][9] ஆகும். இதன் மக்கள் தொகையில் 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 933,514 (23.85%) ஆக உள்ளனர்.[10]இதன் மக்கள் அனைவரும் நகர்புறங்களில் வாழ்கின்றனர்.[5]
சமயம்
இம்மாவட்டத்தில் இசுலாம் சமயத்தை 95.05% மக்களும், இந்து சமயத்தை 1.57% மக்களும், கிறித்துவ சமயத்தை 3.10% மக்களும் மற்றும் பிற சமயங்களை 0.28% மக்களும் பின்பற்றுகின்றனர்.[11]
மொழி
இம்மாவட்டத்தின் மக்கள் தொகையான 3,913,656 பேரில் உருது மொழியை 1,916,767மக்களும், சிந்தி மொழியை 501,156 மக்களும், பஷ்தூ மொழியை 453,464 மக்களும், பஞ்சாபி மொழியை 231,523 மக்களும், சராய்கி மொழியை 231,523 மக்களும், இந்த்கோ மொழியை 91,034 மக்களும், பலூச்சி மொழியை 71,312 மக்களும் மற்றும் பிற மொழிகளை 240,975 மக்களும் பேசுகின்றனர்.[12]
Remove ads
மாவட்ட நிர்வாகம்
துணை ஆணையாளரால் நிர்வகிக்கப்படும் இம்மாவட்டம் ஜின்னா நகரம், சனேசர் நகரம், ஜாம்செட் நகரம் மற்றும் குல்ஷன்-இ-இக்பால் நகரங்களையும், 43 ஒன்றியக் குழுக்களையும் கொண்டுள்ளது.[13]
நாடாளுமன்றத் தொகுதிகள்

இம்மாவட்டம் பாகிஸ்தான் நாடாளுமன்றத்திற்கு 4 தொகுதிகளைக் கொண்டுள்ளது.
- NA-235 கராச்சி கிழக்கு-I
- NA-236 கராச்சி கிழக்கு-II
- NA-237 கராச்சி கிழக்கு-III
- NA-238 கராச்சி கிழக்கு -IV
இதனையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads