கெர்செக் பண்பாடு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கெர்செக் பண்பாடு அல்லது இரண்டாம் நக்காடா காலம் (Gerzeh culture or Naqada II), வரலாற்றுக்கு முந்தைய எகிப்தில் கிமு 3500 முதல் கிமு 3200 முடிய விளங்கிய புதிய கற்காலத்தியப் பண்பாடு ஆகும்.[2] இதனை இரண்டாம் நக்காடா காலம் என்றும் அழைப்பர். பண்டைய எகிப்தின் நைல் நதியின் கரையில் உள்ள பையூம் அருகில் உள்ள கெர்செக் தொல்லியல் களத்தில் இப்பண்பாட்டுக்குரிய தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டதால், இப்பண்பாட்டிற்கு கெர்செக் பண்பாடு எனப்பெயராயிற்று.[3][4]
கெர்செக் பண்பாடு ஒரு பொருள்சார் பண்பாடு என தொல்லியல் அறிஞர்கள் வகைப்படுத்தியுள்ளனர். அமராத்தியப் பண்பாட்டிற்குப் பின்னர் பண்டைய் எகிப்தில் நிலவிய கெர்செக் பண்பாட்டிற்குப் பின்னர், எகிப்தின் துவக்க கால வம்ச காலத்தில் மூன்றாம் நக்காடா பண்பாடு அல்லது செமைனியப் பண்பாடு நிலவியது.
- மனிதத் தலைக் கொண்ட மரச்சீப்பு
- பெண்ணின் சிற்பம்
- தந்தத்தாலான கலைப்பொருட்கள்
- மட்பாண்டத்தின் மீதான ஓவியங்காள், கிமு 3500-3200
Remove ads
பாபிரஸ் எனும் நாணல் புற்களால் செய்யப்பட்ட படகுகள், நைல் நதியில் சமயச் சடங்குகளின் பயன்பாட்டிற்கு இப்பண்பாட்டுக் கால மக்கள் பயன்படுத்தினர்.[5]
பண்டைய அண்மை கிழக்குடனான தொடர்புகள்
மெசொப்பொத்தேமியாவின் மன்னர் உருவம் பொறித்த கெபல் எல்-அராக் கத்தி
கெர்செக் பண்பாட்டுக் காலத்தில், கெபல் எல்-அராக் கத்தி போன்ற வெளிநாட்டு கலைப்பொருட்களுடன், அதிக அளவில் திராட்சை (ஒயின்) மது பானம் கொண்ட ஜாடிகளும், வெள்ளி நகைகளும், நவரத்தின மணிகளும், பண்டைய அண்மை கிழக்கிலிருந்து எகிப்தில் இறக்குமதி செய்யப்பட்டது. [8][9] and the silver which appears in this period can only have been obtained from Asia Minor.[10]நவரத்தின மணிகள் நடு ஆசியாவின் படாக்சானிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது. [11]
உருளை முத்திரைகள்
கெர்செக் பண்பாட்டு காலத்திய உருளை முத்திரைகள், பண்டைய அண்மை கிழக்கில் அமைந்த மெசொப்பொத்தேமியா மற்றும் ஈலாம் பகுதிகளிலிருந்து, எகிப்திற்கு அறிமுகமாகியது.[12] இவ்வகையான உருளை முத்திரைகாள் தெற்கு எகிப்தில் உள்ள நெக்கென் நகரததின் கல்லறைகளில் கண்டுபிடிக்கப்பட்டது.[13][14]மெசொப்பொத்தோமியாவின் கிமு 4,000 ஆண்டின் செம்தேத் நசிர் காலத்திய உருளை முத்திரைகள் போன்ற தொல்பொருட்கள் இரண்டாம் நக்காடா கால்த்திய எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்டது.[15][16]

Remove ads
கிமு 3200 ஆண்டுகளுக்கு முந்தைய இப்பண்பாட்டுக் காலத்திய அழகிய தட்டுக்கள், எலும்பினால் செய்யப்பட்டஎறியுளிகள், [[தந்தம்|தந்தத்தில்] செய்யப்பட்ட பானைகள், கல் பானைகள் மற்றும் பல விண் கற்களால் செய்யப்பட்ட அறுப்பதற்கான அரிவாள்கள் மற்றும் மணிகள் எகிப்தின் கல்லறைகளில் 1911-ஆம் ஆண்டில் கண்டெடுக்கப்பட்டது. [18] [19] [20][21]இக்காலத்திய ஒரு தலையில்லாத முண்டம் கண்டுபிடிக்கப்பட்டது. [22]
இக்காலத்திய கல்லறைகளில் சமயச் சடங்குகள் தொடர்பான பிண ஊர்வலம், படகுகள், விலங்குகள், கால்நடைகள், பணியாளர்கள், தேவதைகளின் ஓவியங்களின் தொகுதி கண்டுபிடிக்கப்பட்டது.[23][24][25][26]
சிங்கங்களுடன் மனிதனின் ஓவியம் போர் வீரர்களின் ஓவியம் விலங்குகளின் ஓவியம்
Remove ads

அபிதோஸ் தொல்லியல் களத்தில் கிமு 3400 - 3200 காலத்திய படவெழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டது.[8][27] அவற்றில் சில எழுத்துக்கள் சுமேரியாவின் ஆதி ஆப்பெழுத்துக்கள் போன்று இருந்தது.
பிற தொல்பொருட்கள்
இதனையும் காண்க
மேற்கோள்கள்
உசாத்துணை
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads