கோலங்கள் (தொலைக்காட்சித் தொடர்)

தொலைக்காட்சித் தொடர் From Wikipedia, the free encyclopedia

Remove ads

கோலங்கள் என்பது சன் தொலைக்காட்சியில் நவம்பர் 24, 2003 முதல் டிசம்பர் 4, 2009 வரை திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி, 1533 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்ற குடும்ப சூழ்நிலை பற்றிய தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும். இந்த தொடரை விகடன் ஒளித்திரை தயாரிக்க இயக்குநர் திருச்செல்வம் என்பவர் எழுதி, நடித்து மற்றும் இயக்கியுள்ளார்.[1]

விரைவான உண்மைகள் கோலங்கள், வகை ...

பிரபல நடிகை தேவயானி[2] அபிநயா என்ற காதாபாத்திரத்தின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமாகிறார். இவருடன் தீபா வெங்கட், மஞ்சரி, அபிசேக் சங்கர், அஜய் கபூர்[3], நளினி, சந்திரா லட்சுமண், திருச்செல்வம், விஜி சந்திரசேகர், சத்தியப்பிரியா மற்றும் குயிலி போன்ற பலர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

இந்த தொடர் தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் மிகவும் பிரபலமான மற்றும் அதிக அத்தியாயங்களில் ஒளிபரப்பான தொடர் ஆகும்.[4] மற்றும் மக்களால் அதிகளவு பார்க்கப்பட்ட தொடரில் இதுவும் ஒன்றாகும். இந்த தொடரில் நடித்ததற்காக நடிகை தேவயானி (2003ஆம் ஆண்டு மற்றும் 2004ஆம் ஆண்டு) சிறந்த நடிகைக்கான விருதையும், தீபா வெங்கட் (2005ஆம் ஆண்டு) சிறந்த தோழிக்கான விருதையும் மற்றும் அஜய் கபூர் (2010ஆம் ஆண்டு) சிறந்த வில்லனுக்கான விருதையும் வென்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தொடர் 10 வருடம் கழித்து நவம்பர் 26, 2018ஆம் ஆண்டு முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை விகடன் தொலைக்காட்சி யூடியூப் என்ற இணைய அலைவரிசையில் மறு ஒளிபரப்பு செய்தது.[5]

Remove ads

கதை சுருக்கம்

கணவனால் கைவிடப்பட்ட நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த கர்பகம் (சத்தியப்பிரியா). கணவன் துணை இன்றி தனது 4 பிள்ளைகளையும் கஷ்டப்பட்டு வளர்க்குகின்றார். இவரின் மூத்த மகள் அபிநயா (தேவயானி) தைரியமும் விடாமுயரிசியும் கொண்டவள். பாஸ்கரை (அபிசேக் சங்கர்) திருமணம் செய்யும் அபி ஆனால் இவர்களின் திருமணத்தில் பல மனக்கசப்புகள் இதனால் இவர்கள் பிரிக்கின்றனர்.

கற்பகத்தின் கணவன் ஈஸ்வரமூர்த்தி (மோகன் சர்மா) காஞ்சனா (பாரதி) என்ற பெண்ணை மறுதிருமணம் செய்கின்றார். இவரின் மகனான ஆதித்தியா (அஜய் கபூர்) கோவமும் திமிரும் கொண்டவன். தொழில் ரீதியாக போட்டியிடும் அபி மற்றும் ஆதித்யா. அபியை வெல்வதற்காக அவளை கொலை செய்ய முயற்சசி செய்ய்கின்றான். அபிக்கு ஆதரவாக தொல்காப்பியன் (திருச்செல்வம்) மற்றும் உஷா (தீபா வெங்கட்) ஆதியின் முன்னாள் மனைவி இவர்களின் துணையுடன் ஆதியை எப்படி வென்றால் என்பது தான் கதை.

Remove ads

நடிகர்கள்

முதன்மை கதாபாத்திரம்

  • தேவயானி - (அபி) அபிநயா ஈஸ்வரமூர்த்தி (அத்தியாயம்: 1-1533)
    • பாஸ்கரின் முன்னாள் மனைவி, கற்பகத்தின் மூத்த மகள், ஆனந்தி, ஆர்த்தி மற்றும் மனோகரின் சகோதரி. மிகவும் தைரியம் மற்றும் மன உறுதியும் கொண்டவள், குடும்பத்திற்கும் நட்புக்கும் முக்கியத்துவம் கொடுப்பவள் மற்றும் போராடும் குணம் கொண்டவள்.
  • தீபா வெங்கட் - உஷா (அத்தியாயம்: 1-1533)
    • அபியின் நெருங்கிய தோழி தேவராஜ் மற்றும் அம்பிகாவின் மகள், ஆதியின் மனைவி. மனதில் பட்டதை தைரியமாக சொல்லும் குணம் கொண்டவள். நட்புக்காக எதையும் செய்வாள்.
  • அஜய் கபூர்[6] - ஆதித்யா ஈஸ்வர் (அத்தியாயம்: 206-1527)
    • முதன்மை வில்லன், அபியின் மாற்றான் சகோதரர் மற்றும் உஷாவின் கணவன். குறுக்கு வழியில் சென்றாவது ஜெயிக்க வேண்டும் என்று நினைப்பவன்.
  • அபிசேக் சங்கர் - பாஸ்கர் (அத்தியாயம்: 2-1530)
    • அபியின் கணவன், பண ஆசை கொண்டவன்.
  • திருச்செல்வம் - தொல்காப்பியன் (அத்தியாயம்: 1-1533)
    • அபி, உஷா, கிருஷ்ணன், விஸ்வநாதன் மற்றும் கங்காவின் நண்பர். மேனகாவின் அண்ணன்.
  • மஞ்சரி[7] → சுப்ரியா → மஞ்சரி - ஆனந்தி கார்த்திக் (அத்தியாயம்: 1-1533)
    • தைரியமான பத்திரிகையாளர். கார்த்திக்கின் மனைவி மற்றும் அபியின் சகோதரி.
  • சந்திரா லட்சுமண் - கங்கா
    • வீட்டு பொருப்புகளை ஏற்று நடத்துபவர். ஆரம்பத்தில் அபிக்கு எதிரியாக இருந்து கடைசியில் நண்பியாகின்றார். தொல்காப்பியத்தின் நண்பி.
  • விஷ்வா - கார்த்திக்

அபிநயா குடும்பத்தினர்

  • சத்தியப்பிரியா - கர்பகம் ஈஸ்வரமூர்த்தி (அத்தியாயம்: 1-1533)
    • ஈஸ்வரமூர்த்தியின் மூத்த மனைவி, அபி, ஆனந்தி, ஆர்த்தி மற்றும் மனோகரின் தாய். சாரதாவின் சகோதரி.
  • தேவயானி - அபிநயா (மூத்த மகள்)
  • மஞ்சரி → சுப்ரியா → மஞ்சரி - ஆனந்தி (இரண்டாவது மகள்)
  • ஸ்ரீவித்யா[8] - ஆர்த்தி ராஜேஷ் (அத்தியாயம்: 1-1532)
    • கர்ப்பத்தின் மூன்றாவது மகள். ராஜேஷின் முதல் மனைவி. சர்தர்ப்ப சூழ்நிலையால் வீட்டுக்கு தெரியாமல் ராஜேஷை திருமணம் செய்கின்றார்.
  • ஷியாம் - ராஜேஷ் (அத்தியாயம்: 50-1532)
  • ஸ்ரீதர் - மனோகர் (மகன்)
  • நிஷா அஜய் (அத்தியாயம்: 270-510) → தீபா நரேந்திரன் (அத்தியாயம்: 511-1533) - அனு மனோகர்
    • ஆதியின் வளர்ப்பு சகோதரி மற்றும் மனோகரின் மனைவி.
  • விஜய ராஜ்[9] - ராஜேந்திரப்பெருமாள்

ஆதித்யா குடும்பத்தினர்

  • மோகன் சர்மா - ஈஸ்வரமூர்த்தி/ஈஸ்வர் (அத்தியாயம்: 213-1533)
  • பாரதி - காஞ்சனா ஈஸ்வர் (அத்தியாயம்: 213-1530)
  • அஜய் கபூர் - ஆதித்யா ஈஸ்வர்
  • பம்பாய் ஞானம் - (காஞ்சனாவின் தாய்)
  • ஐஸ்வர்யா கணேஷ் (அத்தியாயம்: 270-434) → திவ்யதர்சினி (அத்தியாயம்: 435-800) → அகிலா (அத்தியாயம்: 801-1437) - அஞ்சலி
  • டிங்கு → பிராங்க்ளின் - அர்ஜுன்
  • நீலிமா ராணி - ரேகா அர்ஜுன்

பாஸ்கர் குடும்பத்தினர்

கார்த்திக் குடும்பத்தினர்

கங்கா குடும்பத்தினர்

முக்கியக் கதாபாத்திரம்

  • கல்பனா ஸ்ரீ - சாந்தி
  • வனிதா கிருஷ்ணசந்திரன் (அத்தியாயம்: 1-679) → குயிலி (அத்தியாயம்: 680-1533) - சாரதா
  • பூர்ணிமா இந்திரஜித் - மேனகா/செல்லம்மா (தொல்காப்பியத்தின் தாய் மற்றும் சகோதரி
    • பிரபல தொழில் அதிபர். தொல்காப்பியன் தனது அண்ணன் என்று தெரியாமல் அவரை எதிர்க்கிறார். ஆதியின் துணை தொழிலதிபர்.
  • விசு
  • யுகேந்திரன் - சிவதாஸ்
    • பிரபல ரவுடி அபியை திருமணம் செய்ய முயற்சிப்பவன்.
  • ஊர்வம்பு லட்சுமி - ராணி சிவதாஸ்
  • மௌலி

துணை கதாபாத்திரம்

  • வனஜா - சித்ரா
  • ஸ்ரீலேகா ராஜேந்திரன் - மங்களம்
  • குட்டி பூஜா - சந்திரா
  • பாலாஜி → தேவ் ஆனந்த் - சதிஷ்
  • சண்முகசுந்தரி
  • விஜயசாரதி - பாரதி
  • ஷீலா → கீதா - அம்பிகை
  • தேவராஜ் - தேவராஜன்
  • பி. லெனின்
  • ப்ரேமி
  • கவிதா - சங்கீதா
  • ஆர்த்திகா ஸ்ரீ - வாசுகி
  • சுஹாசினி - கீதா
  • கே. நட்ராஜ் - அந்தோணி
  • ஸ்ரீதர் - விஸ்வநாதன்
  • நரேந்திரன் - உபேந்திரா
  • ஸ்நேக் நம்பியார் - ரஞ்சனி
  • நாகலட்சுமி - லட்சுமி/கலா
  • கர்ணா - கருணாகரன்
  • தீபா சங்கர் - (ராஜேஷ் 2வது மனைவி)
  • சுமதி ஸ்ரீ - வேலம்மாள்
  • பிர்லா போஸ் - ரவி
  • உஷா எலிசபெத் - வைத்தியர். விமலா
  • தில்லை மணி
  • பாரதி மோகன்
  • பூவணன்
  • ஆரமுதன்
Remove ads

நடிகர்களின் தேர்வு

இந்த தொடரை புதுமுக இயக்குநர் திருச்செல்வம் என்பவர் இயக்கி மற்றும் நடித்துள்ளார். இவர் இதற்க்கு முன் மெட்டி ஒலி என்ற தொடரில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பிரபல தமிழ் திரைப்பட நடிகை தேவயானி நடிக்கும் முதல் தொடர் இதுவாகும். அதே தரும் சந்திரா லட்சுமண் மற்றும் பூர்ணிமா இந்திரஜித் நடிக்கும் முதல் தமிழ் தொடர் இதுவாகும். சீதா என்ற கதாபாத்திரத்தில் பிரபல நடிகை விஜி சந்திரசேகர் நடிக்க இவருக்கு ஜோடியாக வரத்தான் என்ற கதாபாத்திரத்தில் பொன்வண்ணன் நடித்துள்ளார். நளினி, சத்யப்பிரியா, சபிதா ஆனந்த், குயிலி மௌலி போன்ற பல திரைப்பட நடிகர்களும் இந்த தொடரில் நடித்து உள்ளார்கள்.

ஒலிப்பதிவு

தலைப்பு பாடல்

இந்த தொடருக்கு தலைப்பு பாடலை பிரபல பாடலாசிரியர் பழனி பாரதி என்பவர் பாடல் எழுத, பாடகி ஹரிணி இப் பாடலை பாடியுள்ளார். இசையைப்பாளர் டி. இமான் என்பவர் இசை அமைத்துள்ளார்.

ஒலிப்பதிவு

மேலதிகத் தகவல்கள் Track listing, # ...
Remove ads

மறு ஆக்கம்

  • கன்னடம் மொழியில் ரங்கோலி என்ற பெயரில் மறுதயாரிப்பு செய்யப்பட்டு உதயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.
  • ஹிந்தி மொழியில் மாய்கே சே பாந்தி டோர் என்ற பெயரில் மறுதயாரிப்பு செய்யப்பட்டு பிப்ரவரி 14, 2011 முதல் அக்டோபர் 2, 2011ஆம் ஆண்டு வரை ஸ்டார் பிளஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.[10]
மேலதிகத் தகவல்கள் மொழி, அலைவரிசை ...
Remove ads

மொழி மாற்றம்

இந்த தொடர் மலையாளம் மொழியில் கோலங்கள் என்ற அதே பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டு சூர்யா தொலைக்காட்சியிலும் தெலுங்கு மொழியில் முத்தியால முழுக்க என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு ஜெமினி தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பானது.

மேலதிகத் தகவல்கள் நாடு, மொழி ...

விருதுகள் மற்றும் பரிந்துரைகள்

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, விருதுகள் ...
Remove ads

சர்வதேச ஒளிபரப்பு

மேலதிகத் தகவல்கள் நாடு, அலைவரிசை ...
Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads