சுங்கை பூலோ தொடருந்து நிலையம்
மலேசிய தொடருத்து நிலையம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
சுங்கை பூலோ தொடருந்து நிலையம் (ஆங்கிலம்: Sungai Buloh Railway Station மலாய்: Stesen Keretapi Sungai Buloh); சீனம்: 万挠火车站) என்பது மலேசியா, சிலாங்கூர், கோம்பாக் மாவட்டம், சுங்கை பூலோ நகரில் அமைந்துள்ள தொடருந்து நிலையம்; மலேசியாவில் மிகவும் பழைமையான நிலையங்களில் ஒன்றாகும்.
1892-ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்ட இந்த நிலையம் பல வரலாற்றுத் தடங்களை விட்டுச் செல்கிறது. பொதுவாக இந்த நிலையம் பயணிகள் பரிமாற்ற நிலையமாக செயல் படுகிறது. இந்த நிலையத்தின் ஒரு பிரிவான கிள்ளான் துறைமுக வழித்தடம் வழியாக கேடிஎம் கொமுட்டர் மற்றும் கேடிஎம் இடிஎஸ் தொடருந்துகள் சேவைகளை வழங்குகின்றன.
இன்னொரு பிரிவு புத்ராஜெயா வழித்தடம்; இந்த வழித்தடத்தின் வழியாக (MRT Putrajaya Line) PYL எம்ஆர்டி (Mass Rapid Transit) எனும் பறக்கும் இரயில் அல்லது பெருந்திரள் விரைவு சேவைகளை வழங்குகிறது. இதற்கு முன்னர் இந்த வழித்தடம் (MRT Kajang line) KGL என்று அழைக்கப்பட்டது.
Remove ads
பொது
இருப்பினும், இரண்டு பிரிவுகளும் வெவ்வேறு பயணச்சீட்டு அமைப்புகளைப் பயன்படுத்துகின்றன. புதிதாக கட்டப்பட்ட இந்த நிலையம் 2016 டிசம்பர் 16-ஆம் தேதி திறக்கப்பட்டது; அதே நாளில் காஜாங் வழித்தடத்தின் (Kajang Line) முதல் கட்டத் திறப்பு நிகழ்வும் நடைபெற்றது. இந்த நிலையம் அக்டோபர் 2021 வரை காஜாங் வழித்தடத்தின் 9 வடக்கு முனையாக இருந்தது.
2016 டிசம்பர் 16-ஆம் தேதி, புத்ராஜெயா வழித்தடம் 12 திறக்கப்படும் வரையில், சுங்கை பூலோ நிலையத்தின் எம்ஆர்டி (MRT) பிரிவு; கம்போங் செலாமட் (Kampung Selamat) எம்ஆர்டி நிலையம் PY03 ; மற்றும் குவாசா டாமன்சாரா (Kwasa Damansara) எம்ஆர்டி நிலையம் PY01 ; ஆகிய நிலையங்களுடன் மூடப்பட்டு இருந்தது.[1]
புத்ராஜெயா வழித்தடத்தின் கட்டுமானம் சூன் 16, 2022-இல் நிறைவடைந்தது; மற்றும் அன்றைய தினம் பகுதி செயல்பாடுகளும் தொடங்கின.[2]
Remove ads
அமைவிடம்
இந்த நிலையம் கோலா சிலாங்கூர் சாலைக்கு (Jalan Kuala Selangor) வடக்கே; சுங்கை பூலோ சாலை (Jalan Sungai Buloh) மற்றும் மருத்துவமனை சாலை (Jalan Hospital) சந்திப்புக்கு அருகில் அமைந்துள்ளது. இந்த நிலையம், முன்னாள் சுங்கை பூலோ தொடருந்து நிலையம் இருந்த அதே இடத்தில் அமைந்துள்ளது. நிலையத்தின் ஒரு பகுதி இன்னும் பயன்படுத்தப்படுகிறது; அத்துடன் புதிய நிலையத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டும் உள்ளது.[3]
வரலாறு
முதல் நிலையம்
முதல் சுங்கை பூலோ தொடருந்து நிலையம் 1892-ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது. முன்பு காலத்தில், மலாயா மேற்கு கடற்கரை தொடருந்து வழித்தடத்தில் உள்ள பத்து ரோட் சந்திப்பு (Batu Junction) ரவாங் நிலையங்களை இணைக்கும் முக்கிய தொடருந்து நிலையமாக சுங்கை பூலோ நிலையம் விளங்கியது.
பழைய கேடிஎம் கொமுட்டர் நிலையம்
2008-ஆம் ஆண்டில் கிள்ளான் பள்ளத்தாக்கு மின்மயமாக்கல் மற்றும் இரட்டை தண்டவாளத் திட்டத்தின் (Klang Valley Electrification and Double Tracking Project) ஒரு பகுதியாக இந்த நிலையம் புதுப்பிக்கப்பட்டது. இந்த நிலையம் 1995-ஆம் ஆண்டில் கேடிஎம் கொமுட்டர் சேவையின் நிலையங்களில் ஒன்றாக மாறியது.
இந்த நிலையம் முதலில் 2016-ஆம் ஆண்டு வரை ரவாங் - சிரம்பான் வழித்தடத்தில் (Rawang-Seremban Line) இருந்தது. கேடிஎம் கொமுட்டர் சேவையின் மறுசீரமைப்பின் போது இந்த நிலையம் கிள்ளான் துறைமுக வழித்தடத்திற்கு சேவை செய்யத் தொடங்கியது. இந்த வழித்தடத்தில் தற்போது ரவாங் தொடருந்து நிலையம் மற்றும் கிள்ளான் துறைமுக கொமுட்டர் நிலையம் ஆகிய நிலையங்களுக்கு இடையிலான தொடருந்துகள் இயக்கப்படுகின்றன.
மாற்றுத் திறனாளிகளுக்கான மின்தூக்கிகள்
இந்த நிலையத்தில் இரண்டு பக்க நடைமேடைகளுடன் நான்கு தடங்கள் உள்ளன; இரண்டு வெளிப்புறத் தடங்கள், மேலும் இரண்டு உள் தடங்கள். கேடிஎம் இடிஎஸ் அல்லது நிலையத்தில் நிற்காத சரக்கு தொடருந்துகளுக்கான தடங்களாக வெளித்தடங்கள் பயன்படுத்தப்படுகின்றன. மாற்றுத் திறனாளிகளுக்கான மின்தூக்கிகள் கொண்ட ஒரு பாதசாரி மேல்நிலைப் பாலம், நிலையத்தின் இரண்டு தளங்களுடன் இணைக்கப்பட்டு உள்ளது.
நிலைய அமைப்பு
L3 | எம்ஆர்டி நடைமேடை தளம் | நடைமேடை 2 | 12 புத்ராஜெயா → PY01 குவாசா டாமன்சாரா (→) |
தீவு நடைமேடை | |||
நடைமேடை 1 | 12 புத்ராஜெயா → PY41 புத்ராஜெயா சென்ட்ரல் ←) | ||
L2 | எம்ஆர்டி வசதிகள் | கழிப்பறைகள், எம்ஆர்டி நிலைய இயந்திர அறைகள் | |
L1 | எம்ஆர்டி வசதிகள் | கேடிஎம் கட்டண வாயில்கள், எம்ஆர்டி கட்டண வாயில்கள், பயணச்சீட்டு இயந்திரங்கள், வாடிக்கையாளர் சேவை அலுவலகங்கள், நிலையக் கட்டுப்பாடு அறைகள், கடைகள், கோலா சிலாங்கூர் சாலையின் இருபுறத்தில் இருந்து பாதசாரி பாலத்தின் B நுழைவு வாயில் | |
G | கேடிஎம் நடைமேடை தளம் | நடைமேடை | |
நடைமேடை 1 | 2 தஞ்சோங் மாலிம்–கிள்ளான் → KA15 தஞ்சோங் மாலிம் (→) ETS → பாடாங் பெசார் (→) | ||
பக்கவழி தடம் | |||
பக்கவழி தடம் | |||
நடைமேடை 2 | 2 தஞ்சோங் மாலிம்–கிள்ளான் → KA19 கிள்ளான் துறைமுகம் (←) ETS >>> கிம்மாஸ் (←) | ||
பக்க நடைமேடை | |||
சாலை வழிப் பகுதி | நுழைவாயில் A, பேருந்து முனையம், வாடகைக் கார்கள், ஊழியர்களின் வாகங்கள் நிறுத்துமிடம், பல மாடி பூங்கா மற்றும் நடைபாதை |
Remove ads
மேற்கோள்கள்
மேலும் காண்க
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads