செதாபாக்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
செதாபாக் (ஆங்கிலம்; மலாய்: Setapak; சீனம்: 文良港); என்பது மலேசியா, கோலாலம்பூர், கோம்பாக் மாவட்டத்தில் உள்ள ஒரு நகர்ப்புறப் பகுதி; மற்றும் ஒரு முக்கிம் ஆகும். கோலாலம்பூர் மாநகரில் ஒரு துடிப்பான நகர்ப்புறப் பகுதியாக அறியப்படும் இந்த இடம்; பல்கலைக்கழக மாணவர்களின் எண்ணிக்கைக்கும்; நவீன வாழ்க்கை முறை வசதிகளுக்கும்; மற்றும் சிறந்த போக்குவரத்து இணைப்புகளுக்கும் பெயர் பெற்றது.[1]


1900-ஆம் ஆண்டுகளில் ஈயச் சுரங்கங்கள் மற்றும் ரப்பர் தோட்டங்களுக்கான மையமாக விளங்கிய இந்த இடம்; தற்போது நவீன மயத்தில் செழிப்புறும் பகுதியாக மாறியுள்ளது. 1969-ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட துங்கு அப்துல் ரகுமான் தொழில்நுட்ப மேலாண்மை பல்கலைக்கழகம் (Tunku Abdul Rahman University of Management and Technology) (TAR UMT) போன்ற பல கல்லூரிகளைக் கொண்ட செதாபாக் நகர்ப்பகுதி; நகர்ப்புற வசதிகளுடன் ஒரு துடிப்பான சூழலுக்குப் பங்களிக்கிறது. இருப்பினும் அதிக மக்கள் தொகை அடர்த்தியைக் கொண்டது; மற்றும் போக்குவரத்து நெரிசலையும் அடிக்கடி எதிர்கொள்கிறது.
கோலாலம்பூர் மாநகரின் மையப் பகுதியிலிருந்து 8 கிமீ தொலைவில் அமைந்துள்ள இந்த நகர்ப்புறப் பகுதி, 20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்து ஆழமான வரலாற்றையும் கொண்டுள்ளது.[1]
Remove ads
சொற்பிறப்பியல்
முன்னர்க் காலத்தில் இந்த இடத்தில் ஈயச் சுரங்கங்கள் மற்றும் ரப்பர் தோட்டங்கள் இருந்தன. மலாய் மொழியில் தாபாக் (Tapak) என்றால் அடி என்று பொருள். எனவே செதாபாக் என்றால் அருகில் அல்லது அருகாமை என்று பொருள்படும். இது கோலாலம்பூர் புறநகர்ப் பகுதியின் அருகாமையைக் குறிக்கலாம்; அல்லது பெயரின் தோற்றத்திற்கான வரலாற்று வேர்களையும் குறிக்கலாம்.[2]
வரலாறு
1880-ஆம் ஆண்டுகளில், செதாபாக் ஒரு சிறிய பழங்குடியினர் கிராமமாக இருந்தது. அந்தப் பகுதியில் தொடக்கக்கால மக்கள் பழங்குடியினர் எனும் ஓராங் அசுலி ஆவர். இவர்களுடன் மினாங்கபாவு மக்களும் இணைந்து வாழ்ந்தனர்.[3] அதன் பின்னர் 1890-ஆம் ஆண்டுகளில், அந்தப் பகுதியில் உருவாக்கப்பட்ட ரப்பர் தோட்டங்களில் பணிபுரிவதற்காக மலேசிய இந்தியர்கள் குடியேறினர்; மேலும் ஈயச் சுரங்கங்களில் வேலை செய்வதற்காகச் சீனர்களும் அழைத்து வரப்பட்டனர். ரப்பர் தோட்டங்கள், ஈயச் சுரங்கங்கள் ஆகியவற்றின் வளர்ச்சியின் காரணமாக செதாபாக் கிராமம் படிப்படியாக வளர்ச்சி பெற்றது.
1884 ஏப்ரல் 12-ஆம் திகதி, மலாயா கூட்டமைப்பு மாநிலங்கள் எனும் பிரித்தானிய மலாயா நிர்வாக அமைப்பின் முதல் தலைமை ஆளுநரான பிராங்க் சுவெட்டன்காம், அந்தப் பகுதியில் வசித்த பழங்குடியினரின் தலைவராக பத்து தாபாக் (Batu Tapak) என்பவரை மீண்டும் தலைவராக நியமிக்கக் கேட்டுக் கொண்டார். அதன் பின்னர், செதாபாக் கிராமத்தின் பழங்குடித் தலைவரைப் பெருமைபடுத்தும் வகையில், செதாபாக் கிராமத்திற்கு, செதாபாக் எனும் பெயர் வழங்கப்பட்டது.
Remove ads
புவியியல் வரையறை

கோம்பாக் மக்களவைத் தொகுதியில் கோலாலம்பூரின் வடகிழக்கில் செதாபாக் முக்கிம் அமைந்துள்ளது. இது 62 சதுர மைல்கள் (160 கிமீ2) பரப்பளவைக் கொண்டது. செதாபாக்கின் வடக்குப் பகுதி குனோங் பூங்கா புவா (Gunung Bunga Buah) என்றும் அழைக்கப்படுகிறது. கெந்திங் செம்பா, செதாபாக்கின் வடகிழக்குப் பகுதியில் உள்ளது. கிழக்கில் புக்கிட் டிண்டிங் உள்ளது. செதாபாக் பகுதி, இதற்கு முன்னர் வங்சா மாஜு மக்களவைத் தொகுதி மற்றும் செத்தியா வங்சா மக்களவைத் தொகுதி ஆகிய இரு மக்களவைத் தொகுதிகளைக் கொண்டிருந்தது. தற்போது மூன்று தொகுதிகள் உள்ளன.
கோம்பாக் ஆறு, குனோங் பூங்கா புவா (Gunung Bunga Buah) எனும் மலையை அதன் பிறப்பிடமாகக் கொண்டது. இந்த ஆறு செதாபாக் முக்கிம் வழியாகப் பாயும் முக்கிய ஆறாகும். செதாபாக் முக்கிம், கோம்பாக் நகரம், கம்போங் பாடாங் பாலாங் (Kampung Padang Balang), கம்போங் பாரு ஆயர் பனாஸ் (Kampung Baru Air Panas); மற்றும் பல கிராமங்களையும் கொண்டுள்ளது.
லோக் யூ கோட்டை
இன்றைய கட்டத்தில், செதாபாக் முக்கிம், வங்சா மாஜு நகரத்தையும்; கெந்திங் கிள்ளான்-பகாங் நெடுஞ்சாலையில் சில கிலோமீட்டர் தொலைவு பகுதியையும்; அதைச் சுற்றியுள்ள மற்ற சில பகுதிகளையும் கொண்டுள்ளது. செதாபாக்கிற்குச் சற்று தெற்கே தித்திவங்சா பொழுதுபோக்கு பூங்கா (Titiwangsa Recreational Park) அமைந்துள்ளது. லோக் யூ குன்று (Loke Yew Hill) இந்த நகரத்தில் ஒரு முக்கிய வரலாற்று இடமாகவும் அறியப்படுகிறது.
இங்கு லோக் யூ குன்று எனும் பெயரில் ஒரு குன்று உள்ளது; அந்தக் குன்றுக்கு, சீனக் கொடையாளர் லோக் யூவின் (Loke Yew) பெயரிடப்பட்டது. இந்தக் குன்றில் லோக் குடும்பத்திற்குச் சொந்தமான ஒரு பாழடைந்த கோட்டையும் உள்ளது. தற்போது அந்தக் கோட்டையின் இடிபாடுகள் மட்டுமே உள்ளன. இருப்பினும், இன்றுவரை இந்தக் கோட்டை வளாகம், லோக் யூ குடும்பத்திற்கான அடக்கம் செய்யப்படும் இடமாக உள்ளது.
மலேசிய விலங்கியல் பூங்கா

செடாபக்கில் உள்ள மலேசிய விலங்கியல் பூங்கா (National Zoo of Malaysia)[4] மலேசியப் பிரதமர், துங்கு அப்துல் ரகுமான் அவர்களால் நவம்பர் 16, 1963 அன்று திறக்கப்பட்டது.
மலேசிய விலங்கியல் பூங்கா, கோலாலம்பூரிலிருந்து சுமார் 13 கிலோமீட்டர் தொலைவில் உலு கிள்ளானுக்குச் செல்லும் வழியில் அமைந்துள்ளது. இந்த விலங்கியல் பூங்கா, 42 ஏக்கர் (17 எக்டேர்) நிறைய மழையைப் பெறும் வெப்பமண்டலக் காட்டில் அமைந்துள்ளது. மேலும் எதிர்கால மேம்பாட்டிற்காக 100 ஏக்கர் (40 எக்டேர்) நிலப்பரப்பையும் கொண்டுள்ளது.
Remove ads
போக்குவரத்து

செதாபாக் வட்டாரத்தின் தற்போதைய தொடருந்து நிலையங்கள்:
- 5 கிளானா ஜெயா வழித்தடம்
எதிர்காலத்தில், செதாபாக் நகர்ப்பகுதியின் முழுப் பகுதியும் 13 எம்ஆர்டி சுற்று வழித்தடத்தின் செதாபாக் எம்ஆர்டி நிலையம் எனும் பெயரில் ஓர் உயர்த்தப்பட்ட நிலையத்தால் சேவை செய்யப்படும்.
Remove ads
அரசியல்
மக்களவை
காட்சியகம்
மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads

