திருப்பெரும்புதூர்

தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர் From Wikipedia, the free encyclopedia

திருப்பெரும்புதூர்map
Remove ads

திருப்பெரும்புதூர் (ஆங்கிலம்: Sriperumbudur) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தின் திருப்பெரும்புதூர் வட்டத்தின் தலைமையிடம் மற்றும் நகராட்சி ஆகும். மேலும் திருப்பெரும்புதூர் ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் இங்கு இயங்குகிறது.

விரைவான உண்மைகள்

திருப்பெரும்புதூர் வைணவ ஆச்சாரியரான இராமானுசர் பிறந்த தலமாகும். இப்பபகுதியில் ஆதிகேசவபெருமாள் மற்றும் இராமானுஜர் திருக்கோயில் அமைந்துள்ளது. முன்னாள் பாரதப் பிரதமர் பாரத ரத்னா இராஜீவ் காந்தி கொல்லப்பட்ட நினைவிடமும் இந்த பகுதியில் உள்ளது. திருப்பெரும்புதூர் நகரம் முந்தைய செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.

Remove ads

அமைவிடம்

திருப்பெரும்புதூர் நகராட்சிக்கு தெற்கே காஞ்சிபுரம் 38 கி.மீ.; வடக்கே சென்னை 33 கி.மீ.; கிழக்கே தாம்பரம் 25 கி.மீ.; மேற்கே திருவள்ளூர் 18 கி.மீ. தொலைவில் உள்ளது.

நகராட்சியின் அமைப்பு

19.39 ச.கி.மீ. பரப்பும், 15 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும், 383 தெருக்களையும் கொண்ட இப்பகுதி திருப்பெரும்புதூர் (சட்டமன்றத் தொகுதி) மற்றும் திருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்டதாகும்.[4][5][6]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பகுதி 6,318 வீடுகளும், 24,864 மக்கள்தொகையும், கொண்டது. மேலும் இப்பகுதியின் எழுத்தறிவு 86.26% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 950 பெண்கள் வீதம் உள்ளனர்.[7]

புவியியல்

இவ்வூரின் அமைவிடம் 12.97°N 79.95°E / 12.97; 79.95 ஆகும்.[8] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 37 மீட்டர் (121 அடி) உயரத்தில் இருக்கின்றது.

தொழிற்சாலைகள்

  • டெல் - மடிக்கணினி, மேசைக் கணினி உற்பத்தி தொழிற்சாலை
  • ஹுன்டாய் தானுந்து தொழிற்சாலை
  • ஜெ.கெ டயர்ஸ்
  • செயிண்ட் கோபைன்
  • பாக்ஸ்கான்
  • சாம்சங் - குளிர்சாதன பெட்டி

ஆதாரங்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads