தேசா பெட்டாலிங்

From Wikipedia, the free encyclopedia

தேசா பெட்டாலிங்map
Remove ads

தேசா பெட்டாலிங் (ஆங்கிலம்; மலாய்: Desa Petaling) என்பது மலேசியா, கோலாலம்பூர் கூட்டரசு பிரதேசத்தின் தென் பகுதியில் உள்ள ஒரு புறநகர் பகுதி; மற்றும் சுபாங் ஜெயா, செரி பெட்டாலிங் போன்ற பெரு நகரங்களுக்கு அருகில் அமைந்துள்ள இந்த நகரம்; நன்கு கட்டமைக்கப்பட்ட புறநகர் நகரமாக வளர்ச்சி பெற்றுள்ளது.[2][3]

விரைவான உண்மைகள் தேசா பெட்டாலிங் Desa Petaling கோலாலம்பூர், நாடு ...

கோலாலம்பூர் மாநகரின் தெற்கே, செபுத்தே மக்களவைத் தொகுதிக்குள் அமைந்துள்ள இந்த புறநகர்ப் பகுதியின் கிழக்கே சுங்கை பீசி, வடக்கே பண்டார் தாசேக் செலாத்தான் மற்றும் மேற்கே செரி பெட்டாலிங், கூச்சாய் லாமா போன்ற நகரங்களை எல்லைகளாகக் கொண்டுள்ளது.[4]

Remove ads

அணுகல்

இங்கு வசிப்பவர்களுக்கு கோலாலம்பூர் மாநகர மையம் மற்றும் அருகிலுள்ள சிலாங்கூர் மாநில நகரங்களுக்கு விரைவாகச் செல்வதற்கு எளிதான அணுகலையும் இந்த நகரம் வழங்குகிறது. பல ஆண்டுகளாக, நகர்ப்புற வசதிகளுக்கு அருகாமையிலும், மலிவு விலையிலும் வீடுகளைத் தேடும் குடும்பங்களுக்கு தேசா பெட்டாலிங் ஒரு விருப்பமான குடியிருப்பு இடமாக மாறியுள்ளது.[2]

வரலாறு

தொடக்கத்தில் இந்த நகரம் பெரும் பெட்டாலிங்கின் (Greater Petaling) ஒரு பகுதியாக இருந்தது. அதன் பிறகு பெரும் பெட்டாலிங் என்பது பெட்டாலிங் மாவட்டம் மற்றும் பெட்டாலிங் ஜெயா எனப் பிரிக்கப்பட்டது. பெட்டாலிங் ஜெயா எனும் பெயரில் இருந்துதான் தேசா பெட்டாலிங் அதன் பெயரைப் பெற்றது. பெட்டாலிங் என்ற பெயரே வரலாற்றுச் சிறப்புமிக்கதாகும். 1800-ஆம் ஆண்டுகளின் ஈயச் சுரங்க காலத்தில் இருந்து பெட்டாலிங் எனும் பெயரின் வரலாறு தொடங்குகிறது. கோலாலம்பூரின் புறநகர் விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக 1980கள்; மற்றும் 1990களில் தேசா பெட்டாலிங் துரிதமாக வளர்ச்சி கண்டது.[2]

தேசா பெட்டாலிங் உருவாக்கப்பட்ட காலத்தில் நடுத்தர அளவிலான குடியிருப்புப் பகுதியாக உருவாக்கப்பட்டது. அதற்குப் பின்னர் குறைந்த மற்றும் நடுத்தர விலை அடுக்குமாடி குடியிருப்புகள், வரிசைத் தரைவீடுகள் மற்றும் நவீன கூட்டுரிமை வீடுகள் (Condominium) வளாகங்கள் உருவாக்கப்பட்டன.

மாநகராட்சிகள்

தேசா பெட்டாலிங் நகரத்தின் வளர்ச்சிக்கு, அந்த நகரத்தைச் சுற்றியுள்ள சாலைகளும்; மற்றும் புறநகர்ப் பகுதிகளுடன் இணைக்கும் நெடுஞ்சாலைகளின் மேம்பாடுகளும்தான் முக்கிய காரணங்களாக அமைகின்றன. தேசா பெட்டாலிங் அமைந்துள்ள பெட்டாலிங் மாவட்டம் மிகத் துரிதமாக வளர்ச்சி கண்டுள்ளது. இதுவே பெட்டாலிங் மாவட்டம் 3 நகராட்சி மன்றப் பகுதிகளாகப் பிரிக்கப்படுவதற்கு வழிவகுத்தது.

Remove ads

போக்குவரத்து

விரைவுச்சாலைகள்/நெடுஞ்சாலைகள்/சாலைகள்

தேசா பெட்டாலிங்கை கீழ்க்காணும் முக்கிய விரைவுச் சாலைகள்; மற்றும் சாலைகள் வழியாக அணுகலாம்.

E37  கோலாலம்பூர்–சிரம்பான் விரைவுச்சாலை [6]
E5  சா ஆலாம் விரைவுச்சாலை (KESAS)[6]
E10  பந்தாய் புதிய விரைவுச்சாலை (NPE)[6]
28 கோலாலம்பூர் மத்திய வட்டச் சாலை 2 (MRR2)[6]
E20  மாஜு விரைவுச்சாலை[6]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads