நேபாள மக்கள்தொகையியல்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
2011-ஆம் ஆண்டின் நேபாள மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, நேபாளத்தின் மக்கள்தொகை 2,64,94,504 (2 கோடியே, 64 இலட்சத்து, 94 ஆயிரத்து 504) என கணக்கிடப்பட்டது. கடந்த 21.6 ஆண்டுகளில் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் 1.35% மட்டுமே உயர்ந்துள்ளது. [1] 2016-இல் பெண்களின் சராசரி வயது 25 ஆகவும், ஆண்களின் சராசரி வயது 22 ஆண்டுகளாகவும் இருந்தது.[2]நேபாள மக்கள்தொகையில் 4.4% மட்டுமே 65 வயதினர்க்கு மேற்பட்டவர்களாக இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. 65 வயதிற்கு மேற்பட்டவர்களில் பெண்கள் 6,81,252 மற்றும் ஆண்கள் 5,97,628 ஆகவுள்ளனர். 15 முதல் 64 வயதிற்குட்டவர்கள் மக்கள்தொகையில் 61% ஆக உள்ளனர் மற்றும் 14 வயதிற்குட்பட்டவர்கள் 34.6% ஆகவுள்ளனர். 2011-ஆம் ஆண்டின் கணக்குப்ப்படி, சராசரி சிசு பிறப்பு விகிதம் 1,000 நபர்களுக்கு 22.17 வீதமும், சராசரி சிசு இறப்பு வீதம் 46 ஆக உள்ளது. 2006-இல் சிசு மரணம் 1000 குழந்தைகளுக்கு 48 வீதமாக இருந்தது. கிராமப்புறங்களில் மகப்பேறு மருத்துவ வசதிகள் குறைவாக இருப்பதால், சிசு இறப்பு வீதம், நகரப்பகுதிகளை காட்டிலும், கிராமப்பகுதிகளில் கூடுதலாக உள்ளது.[3] பெண்களில் ஆயுள் எதிர்பார்ப்பு 67.44 வயதாகவும், ஆண்களின் ஆயுள் எதிர்பார்ப்பு 64.94 வயதாகவும் உள்ளது. இறப்பு வீதம் ஒரு இலட்சம் பேரில் 681 ஆகவுள்ளது. நிகர இடப்பெயர்வு வீதம் ஒரு இலட்சம் பேரில் 61 ஆகவுள்ளது. 2011-ஆம் ஆண்டின் நேபாள மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி சராசரி எழுத்தறிவு வீதம் 65.9% ஆக உள்ளது.[4]



Remove ads
மக்கள்தொகை வளர்ச்சி
சூன் 2001-ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, நேபாளத்தின் மக்கள்தொகை 23 மில்லியன் ஆக இருந்தது.[5]1991-ஆம் ஆண்டிலிருந்து மக்கள்தொகை வளர்ச்சி 2.3% (5 மில்லியன்) உயர்ந்துள்ளது.[5] ஒவ்வொரு ஐந்தாண்டிற்கும் மக்கள்தொகை 3 மில்லியன் வீதம் உயர்ந்து தற்போது சராசரி மக்கள்தொகை 30 மில்லியனாக உள்ளது.
இந்தியா மற்றும் திபெத்திலிருந்து நேபாளத்திற்கு மக்கள் இடம்பெயர்ந்த காரணத்தால், நேபாளத்தில் 60 ஜாதியினரும், மொழிப்பிரிவினரும் உள்ளனர்.[6][6] 1950-ஆம் ஆண்டு முதல் நிலநடுக்கம் போன்ற இயற்கை பேரிடர்கள் காரணமாக, மலைப்பகுதிகளில் வாழ்ந்த மக்கள் காத்மாண்டு சமவெளி மற்றும் தராய் சமவெளிகளில் இடம்பெயர்ந்துள்ளனர்.[6] 1980களில் மேற்கு சித்வான் சமவெளிப் பகுதி, நேபாளத்தின் முக்கிய போக்குவரத்து மையமாக மாறியது. நேபாளத்தின் சமவெளிப் பகுதிகளில் போக்குவரத்து, தொழில், வணிகம், வேளாண்மை மற்றும் அரசு சேவைகள் உயர்ந்ததால், சமவெளிப் பகுதிகளில் இடப்பெயர்வு மூலமும், இயற்கையாகவும் மக்கள்தொகை வேகமாக உயர்ந்து வருகிறது. [6]
Remove ads
முக்கிய புள்ளி விவரங்கள்
நேபாளத்தின் மக்கள்தொகை பரம்பல் அமைப்பு
2011-ஆம் ஆண்டின் நேபாள மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 22 சூன் 2011-இல் நேபாளத்தின் மக்கள்தொகை அமைப்பு:[7]
ஆயுள் எதிர்பார்ப்பு
ஆதாரம்: UN World Population Prospects[8]
Remove ads
மக்கள் தொகை புள்ளி விவரம்

கரு வளர்ச்சி மற்றும் குழந்தை பிறப்பு புள்ளிவிவரம்
நேபாளத்தின் மொத்த கருவள வீதம் மற்றும் பிறப்பு வீதம்::[11]
2011-ஆம் ஆண்டின் நேபாள மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் மக்கள் நலம் புள்ளிவிவரப்படி கீழ்கண்ட புள்ளி விவரங்கள் காட்டுகிறது.[12]
குழந்தை பிறப்பின் போது சராசரி இடைவேளை (மாதங்கள்)
- மொத்தம்: 36.2
- கிராமப்புறம்: 35.9
- நகர்புறம்: 40.3 (2011)
முதல் குழந்தை பிறப்பின் போது சராசரி வயது
- சராசரி: 20.1 (2011)
கருவள வீதம் - முன்னரும் தற்போதும்
- மொத்த கருவள வீதம் : 4.6 குழந்தை பிறப்பு/பெண்கள் (1996)
- மொத்த கருவள வீதம்: 4.1 குழந்தை பிறப்பு/பெண்கள் (2001)
- மொத்த கருவள வீதம்: 3.1 குழந்தை பிறப்பு/பெண்கள் (2006)
- மொத்த கருவள வீதம்Total fertility rate: 2.6 குழந்தை பிறப்பு/பெண்கள்
- கிராமப்புற கருவள வீதம்: 2.8 குழந்தை பிறப்பு/பெண்கள்
- நகர்ப்புற கருவள வீதம்: 1.6 குழந்தை பிறப்பு/பெண்கள் (2011)
ஒரு குடும்பம் வீதம் குழந்தைகளின் எண்ணிக்கை
- ஒட்டு மொத்தமாக (பெண்/ஆண்): 2.1 / 2.3
- தற்போது மணமானவர்கள் (பெண்/ஆண்): 2.2 / 2.3
- நகர்புறம் (பெண்/ஆண்): 1.9 / 2.0
- கிராமப்புறம் (பெண்/ஆண்): 2.2 / 2.3 (2011)
பாலினம் மற்றும் வயது வாரியாக குடும்ப அளவு
- 2011-இல் பாலினம் மற்றும் வயது வாரியாக குடும்ப அளவு
Remove ads
மொழிகள்
நேபாளத்தில் அதிகம் பேசப்படும் மூன்று வகையான மொழிக் குடும்பங்கள் உள்ளது. அவைகள்:இந்திய-ஆரிய மொழிகள், திபெத்திய-பர்மிய மொழிகள் மற்றும் வட்டார பழங்குடி மொழிகள் ஆகும். 2001-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பில் நேபாளத்தில் 92 மொழிகள் குறிப்படாதவைகள் பட்டியலில் இருந்தது. 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, நேபாளத்தில் பெரும்பாலான மக்களால் பேசப்படும் நேபாள மொழி ஆட்சி மொழியாகவும், அலுவல் மொழியாகவும் உள்ளது.[13]
Remove ads
சமயம்
2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, நேபாளத்தில் இந்துக்கள் 81.3%, பௌத்தர்கள் 9.0%, இசுலாமியர் 4.4%, கிராதர்கள் 3.0%, கிறித்தவர்கள் 1.42% மற்றும் பிறர் 0.9% ஆக உள்ளனர்.[15]

2015 நேபாள அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் நேபாளம் மதச்சார்ப்பற்ற நாடாக அறிவிக்கப்பட்டது. [16] முன்னர் நேபாளம் இந்து சமய நாடாக விளங்கியது.
நேபாளத்தில் சமயங்கள் (2011)[14]
பிற சமயங்கள் (0.9%)
Remove ads
நேபாள இனக்குழுக்கள் மற்றும் வட்டார மக்கள்
நேபாள மொழி தேசிய மொழியாக உள்ளது. 2000-ஆம் முன்னர் வரை சமஸ்கிருத மொழி 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை கட்டாயமாக பள்ளிகளில் பயிற்றுவிக்கப்பட்டது. மாவோயிஸ்டுகள் சமஸ்கிருத மொழியை கற்பிக்கும் ஆசிரியர்களை கொடூரமாக தாக்கியதால் 2001-ஆண்டிலிருந்து பள்ளிகளில் சமஸ்கிருத மொழி கற்பிக்கப்படுவது நிறுத்தப்பட்டது. பின்னர் 20 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் 2019 முதல் மீண்டும் சமஸ்கிருத மொழி பள்ளிகளில் கற்பிக்கப்படுகிறது.[17] தெராய் சமவெளிகளில் மட்டும் வாழும் மாதேசி மக்கள் மற்றும் இமயமலைகளில் வாழும் திபெத்திய மக்கள், தாரு மக்கள், செர்ப்பா மக்கள் போன்றவர்கள் அவரவர் வட்டார மொழிகளில் பேசுகின்றனர்.
மனித வள குறியீட்டில் மாதேசி மக்கள் நேபாளத்தில் முதலிடத்தில் உள்ளனர்.[18] பாலின சமத்துவத்தில் நேவார் இனப் பெண்கள் கல்வியிலும், அரசியல், பொருளாதாரம் மற்றும் சமூகத்தில் மற்ற இனக்குழுக்களை விட அதிகம் முன்னேறியுள்ளனர். நேவார் பெண்களை ஒப்பிடும் போது, பிராமண மற்றும் சத்திரியப் பெண்களின் நிலை குறைவாகவே உள்ளது.[19][20][21][22][23]
Remove ads
வெளிநாடுகளில் நேபாள மக்கள்
நேபாளம் தவிர்த்து நேபாளி மக்களில் கூர்க்கா இன மக்கள் அதிகமாக இந்தியா, ஐக்கிய இராச்சியம், வளைகுடா நாடுகள், மலேசியா, ஆங்காங்கு, சிங்கப்பூர் போன்ற நாடுகளின் இராணுவம் மற்றும் காவல் துறையில் நூறு ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிகின்றனர். இந்தியாவிலும், ஐக்கிய இராச்சியத்திலும், நேபாள கூர்க்கா மக்களை கொண்ட கூர்க்கா ரெஜிமெண்ட் படைப்பரிவு உள்ளது.

2001-ஆம் கணக்கெடுப்பின் படி, ஐக்கிய இராச்சியத்தில் 6,000 கூர்க்கா மக்கள் வாழ்ந்து வந்தனர்.[24] தற்போதைய கணக்கெடுப்பின் படி, ஐக்கிய இராச்சியத்தில் 51,000 நேபாளிகள் வாழ்ந்து வருகின்றனர்.[25]
வெளிநாடு வாழ் நேபாளிகள்
2000-ஆம் ஆண்டு முதல் இந்தியா தவிர்தது மத்திய கிழக்கு நாடுகள், சவுதி அரேபியா மற்றும் மலேசியா போன்ற நாடுகளில் புலம் பெயர்ந்து வாழும் நேபாளிகள் கடும் இன்னலுக்கு உள்ளாகி வருகின்றனர்.[26]
இந்தியாவில் நேபாளிகள்
இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தின் வடக்கே அமைந்த டார்ஜிலிங் மாவட்டம் மற்றும் காளிம்பெங் மாவட்டங்களில் நேபாள கூர்க்கா மக்கள் அதிகம் வாழும் பகுதிகளைக் கொண்டு கூர்க்காலாந்து பிரதேச நிர்வாகம் அமைக்கப்பட்டது. மேலும் நேபாள நாட்டு கூர்க்கா இன மக்கள் கொண்ட கூர்க்கா ரெஜிமெண்ட மற்றும் கூர்க்கா துப்பாக்கிப் படைகள் இந்தியாவில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக நிர்வகிக்கப்படுகிறது.[30][31]
ஐக்கிய இராச்சியத்தில்
மே 2009 முதல் பிரித்தானியப் பேரரசின் இராணுவத்தில் குறைந்தது நான்கு ஆண்டுகள் பணிபுரிந்த கூர்க்கா படைவீரர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர் ஐக்கிய ராச்சியத்தில் குடியேற அனுமதிக்கப்பட்டது.
Remove ads
நேபாளத்தில் வாழும் வெளிநாட்டவர் மக்கள்தொகை

2001-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, நேபாளத்தில் பிறந்த வெளிநாட்டவர்களின் குழந்தைகள் 1,16,571 ஆக இருந்தது. வெளிநாட்டு குழந்தைகளில் 90% இந்திய நாட்டவர்களின் குழந்தைகளாக இருந்தனர். மீதம் 10% குழந்தைகள் பூட்டான், பாகிஸ்தான் மற்றும் சீன நாட்டவர்களின் குழந்தைகள் ஆவார்.[32]
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads