பண்டைய தமாசுக்கசு நகரம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பண்டைய தமாசுக்கசு நகரம் (Ancient City of Damascus) சிரியா நாட்டின் வரலாற்றுச் சிறப்பு மிக்க பண்டைய நகரம் ஆகும். உலகில் மக்கள் தொடர்ந்து வாழும் நகரங்களில் ஒன்றான தமாசுக்கசு நகரத்தில், கிமு 3200 முதல் மக்கள் தொடர்ந்து வாழ்கின்றனர். [1] இப்பண்டைய தமாசுக்கசு நகரத்தில், கிறித்தவ தேவாலயங்கள் மற்றும் இசுலாமியர்களின் மசூதிகள் உள்ளிட்ட, பல தொல்லியல் களங்களைக் கொண்டுள்ளது. பண்டைய தமாசுக்கசு நகரத்தில் கிரேக்கர்கள், உரோமர்கள், பைசாந்தியர்கள் மற்றும் உதுமானியப் பேரரசசினர் தங்களின் பண்பாட்டுக் களங்களை நிறுவியுள்ளனர்.

ரோமானியர்கள் சிரியாவை ஆட்சி செய்த போது, பண்டைய வரலாற்றுக் கால தமாசுக்கசு நகரத்தைச் சுற்றி கட்டிய கோட்டைச் சுவர்களை, 1979ல் யுனெசுகோவால் உலகப் பாரம்பரியக் களாக அறிவிக்கப்பட்டது.
2011 முதல் நடைபெறும் சிரிய உள்நாட்டுப் போர் காரணமாக, சிரியாவின் அனைத்து உலகப் பாரம்பரியக் களங்களும், அழியும் நிலையில் உள்ளதாக, சூன், 2013ல் யுனெசுகோ நிறுவனம் அறிவித்துள்ளது.[2]
Remove ads
தமாசுக்கசு நகரத் தோற்றம் மற்றும் நிறுவகையும்
பராடா ஆற்றின் [3] தெற்குக் கரையில் அமைந்த, சிரியா நாட்டின் தலைநகரான பண்டைய தமாசுக்கசு நகரம், கிமு 3000 ஆண்டில் 86.12 ஹெக்டேர் பரப்பளவில் நிறுவப்பட்டது. உரோமானியர்களால் இந்நகரத்தைச் சுற்றிலும் 4.5 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட கோட்டைச் சுவர் கட்டப்பட்டத்து. பின்னர் எகிப்தின் அய்யூப்பிடு வம்சத்தாரும் [4] மற்றும் எகிப்தின் மம்லுக் வம்சத்தாரும் [5] இக்கோட்டைச் சுவரை வலுப்படுத்தினர்.[2]
கிமு இரண்டாயிரத்தில் முதன்முதலாக தம்ஸ்கு ("Ta-ms-qu") என அழைக்கப்பட்ட தமாசுக்கசு நகரம், இட்டைட்டு பேரரசுக்கும், புது எகிப்திய இராச்சியத்திற்கும் நடுவில், அமோரிட்டுப் பகுதியில் அமைந்திருந்தது.
செமிடிக் மொழியான அரமேயம் பேசிய அரமேனியர்கள், [6] தமாசுக்கசு நகரத்தை திமிஷ்கு எனும் பெயரில், கிமு 11ம் நூற்றாண்டு முதல், கிமு 733 வரை ஆண்டனர்.[7]
Remove ads
வரலாற்றுக் காலக்கோடுகள்
வரலாற்றுக் காலத்தில் தமாசுக்கசு நகரம் கீழ்கண்ட இராச்சியங்களின் கீழ் இருந்தது.
|
|
Remove ads
பண்டைய தமாசுக்கசு நகரத்தின் தொன்மையான இடங்கள்
- பண்டைய தமாசுக்கசு தெருக் காட்சி
- அல்- ஹமிதயா சதுக்கம்
- ஜுபிடர் கோயிலின் இடிபாடுகள், அல்- ஹமிதயா சதுக்கம்
- அசம் அரண்மனை
- புனித அனானியவின் வழிபாட்டிடம்
- மரியம் தேவாலயம்
- உமயத்து மசூதி
- பண்டைய தமாசுக்கசு நகரத்தின் குறுகலான தெரு
பண்டைய தமாசுக்கசு நகரத்தின் தற்போதைய நிலை
யுனெஸ்கோ நிறுவனத்தின் பரிந்துரையின் பேரில்,[20] பண்டைய தமாசுக்கசு நகரத்தின் அழிவு நிலையில் உள்ள தொல்லியல் களங்களை, அழிவு நிலையில் உள்ள உலகப் பாரம்பரியக் களங்களாக அறிவித்துள்ளது.[21][22]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads