புவிசார் குறியீடு பெற்றுள்ள தமிழ்நாடு பொருட்களின் பட்டியல்

From Wikipedia, the free encyclopedia

புவிசார் குறியீடு பெற்றுள்ள தமிழ்நாடு பொருட்களின் பட்டியல்
Remove ads

புவிசார் குறியீடு பெற்றுள்ள தமிழ்நாட்டுப் பொருட்களின் பட்டியல் என்பது இந்திய அரசு தமிழ்நாட்டின் தனித்தன்மை வாய்ந்த பொருட்களுக்கு வழங்கியுள்ள புவிசார் குறியீட்டுப் பட்டியல் ஆகும். இந்தக் குறியீட்டினை, குறிப்பிட்ட உற்பத்திப் பொருள் முறையாக மரபு சார்ந்த முறையில் தயாரிக்கப்பட்டதற்கும், தரத்தைக் காப்பதற்குமான சான்றாக எடுத்துக்கொள்ளலாம்.‌ 2023-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை, தமிழ்நாட்டின் 56 பொருட்களுக்குப் புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.[1] தொடர்ந்து பல பொருட்களுக்கு இந்தக் குறியீடு வழங்கப்பட்டு வருகிறது.[1]

Thumb
காஞ்சிபுரம் பட்டுச் சேலைகள்
Remove ads

பட்டியல்

  1. அரும்பாவூர் மரச்சிற்பம்[2]
  2. ஆத்தூர் வெற்றிலை[3]
  3. ஆரணிப் பட்டு
  4. இராமநாதபுரம் முண்டு மிளகாய்
  5. இலவம்பாடி முள்கத்திரி[4]
  6. அய்யம்பாளையம் நெட்டை தென்னை[5]
  7. ஈரோடு மஞ்சள்[6]
  8. உடன்குடி கருப்பட்டி[7]
  9. ஊட்டி வர்க்கி மார்ச் 2023[8]
  10. கம்பம் பன்னீர் திராட்சை[9]
  11. கன்னியாகுமரி மாறாமலை கிராம்பு
  12. கன்னியாகுமரி மட்டி வாழைப்பழம்[10]
  13. ஈத்தாமொழி நெட்டைத் தென்னை [11]
  14. காஞ்சிபுரம் பட்டு[12]
  15. செட்டிநாடு கண்டாங்கி சேலை[13]
  16. செட்டிநாடு கொட்டான்
  17. கிழக்கிந்திய தோல் தொழிற்சாலை
  18. கொடைக்கானல் மலைப்பூண்டு[14]
  19. நாகர்கோவில் கோவில் நகைகள்[15] புவிசார் குறியீடு
  20. கோவில்பட்டி கடலைமிட்டாய்[16]
  21. கோவை கோரா பருத்திப் புடவை[17] புவிசார் குறியீடு
  22. சுவாமிமலை வெண்கலப் படிமங்கள்[18]
  23. சேலம் ஜவ்வரிசி[19]
  24. சேலம் வெண்பட்டு[20]
  25. சோழவந்தான் வெற்றிலை
  26. கும்பகோணம் வெற்றிலை
  27. திருப்புவனம் பட்டுச் சேலைகள்
  28. தஞ்சாவூர் ஓவியத்தட்டு
  29. தஞ்சாவூர் ஓவியம்
  30. தஞ்சாவூர் பொம்மைகள்
  31. தஞ்சாவூர் நெட்டி வேலைப்பாடு[21]
  32. தஞ்சாவூர் வீணை
  33. திருநெல்வேலி செடிபுட்டா சேலைகள்[22]
  34. தோடா பூந்தையல்
  35. நெகமம் காட்டன் சேலை[23]
  36. நரசிங்கம்பேட்டை நாகசுரம்[24]
  37. நாச்சியார் கோயில் விளக்கு
  38. நீலகிரி தேயிலை
  39. பத்தமடை பாய்
  40. பவானி ஜமக்காளம்
  41. பழனி பஞ்சாமிர்தம்
  42. மாமல்லபுர மரபுச்சின்னங்கள்
  43. மணப்பாறை முறுக்கு[25]
  44. மதுரை சுங்குடி சேலை
  45. மதுரை மல்லி[26]
  46. மயிலாடி கல் சிற்பம்[27]
  47. மயிலாடுதுறை தைக்கால் பிரம்பு வேலைப்பாடு[28]
  48. மார்த்தாண்டம் தேன்
  49. விருதுநகர் புரோட்டா
  50. விருப்பாச்சி மலை வாழைப்பழம்
  51. வேலூர் முள் கத்திரிக்காய்
  52. ஜடேரி நாமக்கட்டி[29][30]
  53. மதுரை மரிக்கொழுந்து.[31]
  54. மதுரை விளாச்சேரி களிமண் பொம்மைகள்
  55. தோவாளை மாணிக்க மாலை
  56. பண்ருட்டி பலாப்பழம் [32]
  57. பண்ருட்டி முந்திரி
  58. புளியங்குடி எலுமிச்சை பழம்
  59. விருதுநகர் சம்பா வத்தல்
  60. செட்டிகுளம் சின்ன வெங்காயம் [33]
  61. இராமநாதபுரம் சித்துறைகார் அரிசி
Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads