மண்டலம் (சோழர் காலம்)
சோழ அரசின் மிகப்பெரிய பிராந்திய பிரிவு From Wikipedia, the free encyclopedia
Remove ads
மண்டலம் ("மண்டலம்" (maṇḍalam) என்னும் "பாடி" (pāḍi) என்கிற வார்த்தைகளுடைய அர்த்தம் "வட்டம்"[2]) என்பது சோழ அரசின் மிகப்பெரிய பிராந்தியப் பிரிவு ஆகும். சோழநாடு அதன் உச்சத்தின்போது, அதன் ஆட்சிப் பகுதிகளை ஒன்பது மண்டலங்களாக பிரித்திருந்தது. இதில் இலங்கையும், வெற்றிகொள்ளப்பட்ட பிற பகுதிகளும் அடங்கும்.[3] இதில் இரண்டு முக்கிய மண்டல்கள் சோழ மண்டலம் மற்றும் ஜெயங்கொண்டசோழ மண்டலமும் ஆகும்.[4]

Remove ads
சோழ நாட்டின் நிர்வாகப் பிரிவுகள்
மண்டலம் என்ற சொல்லானது சங்க காலத்தின் போது கூட, தமிழக பிராந்தியத்தியங்களான சேர, சோழ, பாண்டிய மண்டலங்களைக் குறிக்க பயன்படுத்தப்பட்டது.[5] முதலாம் இராஜராஜ சோழன் ஆட்சியின்போது, சோழர்களின் கீழ் இணைந்திருந்த தமிழ் நாட்டின் பல்வேறு அரசியல்-கலாச்சாரப் பகுதிகளை ஒழுங்கமைப்பதற்கான கருத்து உருவானது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒவ்வொரு பிராந்தியங்களும் அதன் தனித்துவமான கலாச்சார அம்சங்களை தொடர்ந்து பராமரிக்க மண்டலங்களாக நீடித்தன.[2]
மண்டலமானது சோழர்களின் பிராந்தியப் பிரிவுகளில் மிகப்பெரியது, சிறிய பிரிவு கிராமம் ஆகும். இது ஊர் எனப்பட்டது. கிராமங்கள் பல கொண்டது நாடு. ஒவ்வொரு நாடும் ஒரு விவசாய உற்பத்திப் பிரிவாக செயல்பட்டு, பத்து கிராமங்கள் மற்றும் ஒன்று அல்லது இரண்டு நகரங்களைக் கொண்டிருந்தது. இது கோட்டம் அல்லது கூற்றம் எனப்படும். முதலாம் இராசராச சோழன் அரசு நிர்வாகத்துக்காக வளநாடு என்ற இடைநிலைப் பிரிவை அறிமுகப்படுத்தினார். நாடுகள் பல கொண்டதாக வளநாடு இருந்தது. ஒவ்வொரு மண்டலமும் பத்து வளநாடுகளாக பிரிக்கப்பட்டது. இவற்றை பிளப்பதினாலும் மற்றும் மறு சீரமைப்பு செய்ததாதன் காரணமாகவும், 12 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் பதினைந்தாக அதிகரித்தது.[6]
சோழ நாடு தன் அதிகாரத்தின் உச்சத்திலிருந்தபோது, அது ஒன்பது மண்டலங்களாக பிரிக்கப்பட்டிருந்தது, இதில் இலங்கை போன்ற வெற்றிகொள்ளப்பட்ட பகுதிகளும் அடங்கும்.[7]
சோழமண்டலம்
சோழர்களின் முக்கிய மண்டலங்களில் ஒன்றான சோழமண்டலமானது தற்காலத்திய தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியதாக இருந்தது. சோழர் வரலாற்றில் அதன் தலைநகரானது பல்வேறு இடங்களில் மாற்றப்பட்டு உறையூர், தஞ்சாவூர், கங்கைகொண்ட சோழபுரம் ஆகிய இடங்களில் அமைந்திருந்தது.[8]
தொண்டைமண்டலம் / ஜெயங்கொண்ட சோழமண்டலம்
சோழர்களின் முக்கிய மண்டலங்களில் ஒன்றான தொண்டைமண்டலமானது முன்பு பல்லவர்களின் ஆட்சிப் பகுதியாக இருந்தது. இப்பகுதியானது சோழர்களால் கி. பி. 880 கைக்கொள்ளப்பட்டது. பின்னர் இப்பகுதிக்கு மறுபெயராக ஜயங்கொண்ட சோழமண்டலம் (அதாவது சோழ நாட்டால் வெற்றிகொள்ளப்பட்ட நிலம்) என்று இடப்பட்டது.[9] தொண்டைமண்டலமானது தற்கால தமிழ்நாட்டின் திருப்பத்தூர்,திருவண்ணாமலை,வேலூர் போன்ற மாவட்டங்களின் பகுதிகளையும், ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூர், நெல்லூர் ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளை உள்ளடக்கியதாக இருந்தது. பல்லவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் இப்பகுதி இருந்த ஐந்தாம் மற்றும் ஒன்பதாம் நூற்றாண்டுகளில், காஞ்சிபுரம் இதன் தலைநகரமாக இருந்தது.[10]
கொங்குமண்டலம்
கொங்குமண்டமானது தற்கால மாவட்டங்களான கோயம்புத்தூர், கரூர்,ஈரோடு, திருப்பூர்,நீலகிரி, கிருட்டிணகிரி,சேலம், நாமக்கல், தர்மபுரி போன்ற மாவட்டப் பகுதிகளை உள்ளடக்கியமாக இருந்தது.[11]
பாண்டியமண்டலம்
பாண்டியமண்டலம் அல்லது இராஜராஜபாண்டிமண்டலம்[1] என்பது பாரம்பரியமாக பாண்டியரின் ஆட்சியின் கீழ் இருந்த பகுதியாகும். இப்பகுதியானது தமிழ்நாட்டின் தென்கிழக்கு பகுதியின் பெரும்பகுதியைக் கொண்டு, மதுரையை தலைநகராக கொண்டு இருந்தது.[12]
கங்கபாடி
இந்த மண்டலம் முடிகொண்டசோழமண்டலம் என்றும் அறியப்பட்டது.[1] இது முன்பு மேலைக் கங்கரின் நாடாக இருந்தது.
தடிகைபாடி
இந்த மண்டலம் விக்ரமசோழமண்டலம் என்றும் அழைக்கப்பட்டது.[1]
நுளம்பபாடி
இந்த மணடலமானது நிகரிலிசோழமண்டலம் என்றும் அழைக்கப்பட்டது.[1]
மரையபாடி
மரையபாடி[1] என்பது வடக்கு மண்டலங்களில் ஒன்றாகும். இது தற்கால ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானாவின் பகுதிகளை உள்ளடக்கியது.
மும்முடிசோழமண்டலம் / ஈழமண்டலம்
இராசராச சோழன் இலங்கையின் வடக்குப் பகுதிகளை சோழ நாட்டுடன் இணைந்த போது, அவர் இப்பகுதிக்கு மும்முடிசோழமண்டலம் என்று பெயரிட்டார், இது ஈழமண்டலம் என்றும் அறியப்பட்டது. இந்த மண்டலத்தில் அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை போன்ற பகுதிகளை உள்ளடக்கியதாக இருந்தது.[1]
நடுவில்மண்டலம்
இந்த மண்டலம் எப்போதும் ஒரு முழுமையான மண்டலமாகக் கருதப்படுவதில்லை, இந்த மண்டலம் சோழமண்டலம் மற்றும் தொண்டைமண்டலம் ஆகியவற்றுக்கு நடுவே அமைந்திருப்பதால் இப்பெயரால் அழைக்கப்பட்டது. இந்த பிராந்தியமானது எந்தவொரு ஆளும் வம்சத்துடனும் தொடர்புபடுத்தப்படவில்லை, இதன் விளைவாக இது முக்கியத்துவம் பெறவில்லை. நடுவில்மண்டலமானது தென்பெண்ணை ஆறு மற்றும் வட வெள்ளாறு ஆகியவற்றுக்கு இடைபட்ட பகுதியில் இருந்தது.[13]
Remove ads
குறிப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads