மத்தியத்தரைக் கடல் பிராந்தியம், துருக்கி

From Wikipedia, the free encyclopedia

மத்தியத்தரைக் கடல் பிராந்தியம், துருக்கி
Remove ads

துருக்கியின் மத்தியதரைக் கடல் பிராந்தியம் (Mediterranean Region) (துருக்கியம்: Akdeniz Bölgesi) துருக்கி நாட்டின் 7 புவியியல் பிராந்தியங்களில் ஒன்றாகும். இப்பிராந்தியம் தென்துருக்கியில், மத்தியதரைக் கடலின் வடகிழக்குப் பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இதில் 8 மாகாணங்கள் உள்ளது. இப்பிராந்தியத்தின் பெரிய நகரம் ஆந்தாலியா ஆகும். பிற நகரங்கள் அதானா, மெர்சின் மற்றும் காரமன்மராஸ் ஆகும்.

விரைவான உண்மைகள் மத்தியதரைக் கடல் பிராந்தியம் Akdeniz Bölgesi, நாடு ...
Remove ads

அமைவிடம்

இதன் மேற்கில் ஏஜியன் பிராந்தியம், வடக்கில் மத்திய அனதோலியா பிராந்தியம், கிழக்கில் கிழக்கு அனடோலியா பிராந்தியம், வடகிழக்கில் தென்கிழக்கு அனதோலியா பிராந்தியம் மற்றும் தெற்கில் மத்தியதரைக் கடல் மற்றும் தென்கிழக்கில் சிரியா உள்ளது.

மாகாணங்கள்

மத்தியதரைக் கடல் பிராந்தியத்தில் 8 மாகாணங்கள் உள்ளது. அவைகள்:

  1. அதனா மாகாணம்
  2. அந்தால்யா மாகாணம்
  3. மெர்சின் மாகாணம்
  4. பர்தூர் மாகாணம்
  5. கத்தே மாகாணம்
  6. இஸ்பார்டா மாகாணம்
  7. உஸ்மானியே மாகாணம்
  8. கரமன் மாகாணம்

புவியியல்

துருக்கியின் மத்தியதரைக் கடல் பிராந்தியத்தின் பெரும்பாலான பகுதிகளில் மலைகளால் சூழ்ந்துள்ளது. அவைகளில் முக்கியமானது தாரசு மலைத்தொடர்கள் மற்றும் நூர் மலைத்தொடர்கள் ஆகும். இம்மலைத்தொடர்களில் பெர்தன் ஆறு, செஹான் ஆறு மற்றும் செய்கான் ஆறுகள் உற்பத்தியாகிறது. இப்பிராந்தியத்தில் பெய்செகிர் ஏரி, எகிர்தீர் ஏரி மற்றும் பர்தூர் ஏரிகள் உள்ளது.

தட்ப வெப்பம்

மேலதிகத் தகவல்கள் தட்பவெப்பநிலை வரைபடம் ஆந்தாலியா ...

இப்பிராந்தியத்தின் கடற்கரை பகுதிகள் நடுநிலக்கடல் சார் வானிலையைக் கொண்டது. இதன் உட்பகுதிகள் குறைந்த வெப்பம், குளிர் மற்றும் குளிர்காலத்தில் பனிப் பொழியும்.

Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads