மீரா நாயர்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

மீரா நாயர் (Mira Nair, பிறப்பு 15 அக்டோபர் 1957) என்பவர் நியூயார்க் நகரை தளமாக கொண்ட ஒரு இந்திய-அமெரிக்க திரைப்படப் படைப்பாளி ஆவார்.[1] இவரது திரைப்பட தயாரிப்பு நிறுவனமான, மீராபாய் பிலிம்ஸ், இந்திய சமூகத்தின் பொருளாதார, சமூக, பண்பாட்டுத் துறைகள் குறித்து பன்னாட்டு பார்வையாளர்களுக்கான திரைப்படங்களில் நிபுணத்துவம் பெற்றது. இவரது சிறந்த படங்களாக அறியப்பட்ட மிசிசிப்பி மசாலா, த நேம்சேக், தி கோல்டன் லயன்- மான்சூன் வெட்டிங், சலாம் பம்பே!, சிறந்த வெளிநாட்டு மொழித் திரைப்படத்திற்கான அகாதமி விருது மற்றும் ஆங்கில மொழியில் இல்லாத சிறந்த திரைப்படத்திற்கான பாஃப்டா விருதுக்கான பரிந்துரைகளைப் பெற்றன.

விரைவான உண்மைகள் மீரா நாயர், பிறப்பு ...
Remove ads

துவக்ககால வாழ்க்கையும் கல்வியும்

மீரா நாயர் 1957 அக்டோபர் 15 அன்று இந்தியாவின், ஒடிசாவின், ராவுர்கேலாவில் பிறந்தார். இவரது இரண்டு அண்ணன்கள் மற்றும் பெற்றோருடன் புவனேசுவரத்தில் வளர்ந்தார். இவரது தந்தை அம்ரித் லால் நாயர் ஒரு இந்திய ஆட்சிப் பணி அதிகாரி ஆவார். மேலும் இவரது தாயார் பர்வீன் நய்யார் ஒரு சமூக சேவகராவார். அவர் பெரும்பாலும் குழந்தைகளின் மீது கவனம் செலுத்துபவராக இருந்தார்.[2]

இவர் 18 வயது வரை புவனேசுவரத்தில் வசித்து வந்தார். ஒரு கான்வென்ட்டில் பயின்றார். அதைத் தொடர்ந்து இவர் லொரேட்டோ கான்வென்ட், தாரா ஹால், சிம்லா, ஐரிஷ்-கத்தோலிக்க மிஷனரி பள்ளி ஆகியவற்றில் பயின்றார். அங்கு இவர் ஆங்கில இலக்கியத்தின் மீது ஆர்வத்தை வளர்த்துக் கொண்டார். தாரா ஹாலில் பயின்றதைத் தொடர்ந்து, மீரா டெல்லி பல்கலைக்கழகத்தில் உள்ள மிராண்டா ஹவுசில் படிக்கச் சென்றார், அங்கு இவர் சமூகவியலில் தேர்ச்சி பெற்றார். சிறந்த கல்வியைப் பெறுவதற்காக, மீரா மேற்கத்திய பள்ளிகளில் பயில விண்ணப்பித்தார், மேலும் 19 வயதில், கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகத்தில் இவருக்கு முழு உதவித்தொகை வழங்கப்பட்டது, ஆனால் இறுதியில் அதை நிராகரித்து, அதற்கு பதிலாக ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் முழு உதவித்தொகையை ஏற்றுக்கொண்டார்.[3] [சரிபார்ப்பு தோல்வியுற்றது]

Remove ads

தொழில்

இவர் ஒரு திரைப்படப் படைப்பாளியாக ஆவதற்கு முன்பு, முதலில் நடிப்பில் ஆர்வம் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் வங்க கலைஞரான பாதல் சர்கார் எழுதிய நாடகங்களில் இவர் நடித்தார். இவர் ஆர்வர்ட் பல்கலைக்கழகத்தில் படித்தபோது, ​​ நாடக நிகழ்ச்சியில் ஈடுபட்டார். மேலும் செனெகாவின் ஓடிபஸ்ஸில் இருந்து ஜோகாஸ்டாவின் உரையை நடித்ததற்காக பாய்ஸ்டன் பரிசைப் பெற்றார்.

ஆவணப்படங்கள்

இவர் தனது திரைப்படத் தயாரிப்பு வாழ்க்கையின் துவக்கத்தில், முதன்மையாக ஆவணப்படங்களை உருவாக்கினார். அதில் இவர் இந்திய பண்பாட்டு பாரம்பரியத்தை ஆராய்ந்தார். 1978 மற்றும் 1979 இக்கு இடையில் ஆர்வர்டில் தனது திரைப்பட ஆய்வேடுக்காக, மீரா ஜமா மஸ்ஜித் ஸ்ட்ரீட் ஜர்னல் என்ற கருப்பு-வெள்ளை திரைப்படத்தைத் தயாரித்தார். பதினெட்டு நிமிடம் கொண்ட அந்தப் படத்தில், மீரா பழைய தில்லியின் தெருக்களை ஆராய்ந்து, இந்திய உள்ளூர் மக்களுடன் சாதாரண உரையாடல்களை நிகழ்த்தினார்.[3]

1982 ஆம் ஆண்டில், இவர் தனது இரண்டாவது ஆவணப்படத்தை சோ ஃபார் ஃப்ரம் இந்தியா என்ற தலைப்பில் உருவாக்கினார். இது ஐம்பத்தி இரண்டு நிமிட திரைப்படமாகும். இது நியூயார்க்கின் சுரங்கப்பாதையில் வசிக்கும் இந்திய செய்தித்தாள் வியாபாரியைப் பின் தொடர்வதாக இருந்தது. அவரது கர்ப்பிணி மனைவி அவர் நாடு திரும்புவதற்காகக் காத்திருந்தார்.[2] இந்தப் படம் அமெரிக்க திரைப்பட விழா மற்றும் நியூயார்க் குளோபல் வில்லேஜ் திரைப்பட விழாக்களில் சிறந்த ஆவணப்படமாக அங்கீகரிக்கப்பட்டது.[3]

1984 இல் வெளியான இவரது மூன்றாவது ஆவணப்படமான இந்தியா கேபரே, பம்பாயில் ஆடைகளை அவிழ்த்து ஆடும் பெண்கள் சுரண்டப்படுவதை வெளிப்படுத்துவதாக இருந்தது. மேலும் மனைவி வீட்டில் இருக்கையில் உள்ளூர் சிற்றின்ப நடனக் குடிப்பகங்களுக்கு தவறாமல் செல்லும் வாடிக்கையாளரைப் பின்தொடர்வதாக இருந்தது.[3] இந்த ஆவணப் படத்திற்காக மீரா சுமார் $130,000 திரட்டினார். 59 நிமிட படம் இப்படம் இரண்டு மாத காலக்கட்டத்தில் படமாக்கப்பட்டது. இதை மீராவின் குடும்பத்தினர் விமர்சித்தனர்.[2] இவரது நான்காவது மற்றும் கடைசி ஆவணப்படம், கனடிய தொலைக்காட்சிக்காகத் தயாரிக்கப்பட்டது. அதில் கருவின் பாலினத்தைக் கண்டறிய சினைக் கரு திரவ சோதனை எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதை ஆராய்ந்தது. 1987 ஆம் ஆண்டு வெளியான, சில்ட்ரன் ஆஃப் எ டிசயர்டு செக்ஸ் ஆவணப்படமானது சமூகத்தில் ஆண் சந்ததிக்கு ஆதரவான நிலை உள்ளதன் காரணமாக பெண் சிசு கலைக்கபடுவதை அது அம்பலப்படுத்தியது. [மேற்கோள் தேவை]

2001 ஆம் ஆண்டில், தி லாஃபிங் கிளப் ஆஃப் இந்தியாவுடன், யோகாவின் அடிப்படையில் சிரிப்பு குறித்து ஆராய்ந்தார். நிறுவனர் டாக்டர் மதன் கராரியா, சங்கத்தின் வரலாறு மற்றும் நாடு முழுவதும் உள்ள சிரிப்பு சங்கங்களின் வளர்ச்சி மற்றும் அதைத் தொடர்ந்து உலகம் பற்றியும் பேசினார். இந்த ஆவணப்படத்தில் சிரிப்பு சங்கங்களின் உறுப்பினர்களின் கூற்றுகள் இருந்தன. அவர்கள் இந்த நடைமுறையால் எவ்வாறு தங்கள் வாழ்க்கை மேம்பட்டடது அல்லது மாறியது என்பதை விவரித்தனர். அதன் சிறப்புப் பிரிவுகளில் மும்பையில் உள்ள ஒரு மின் உற்பத்தித் தொழிற்சாலையில் பணியாற்றும் தொழிலாளர்கள் தங்கள் காபி இடைவேளையின் போது சிரிக்க நேரத்தை எடுத்துக் கொண்டதைக் காட்டினர்.

திரைப்படங்கள்

1983 இல் தன் தோழியான சூனி தாராபோரேவாலாவுடன் இணைந்து மீரா சலாம் பாம்பே!. படத்திற்கான எழுத்துப் பணிகளை செய்தார். மீரா தனது ஆவணப்படத் தயாரிப்பு மற்றும் நடிப்பு அனுபவர்களைக் கொண்டு, தெருக்களில் உயிர் பிழைத்து, உண்மையான குழந்தைப் பருவத்தை இழந்த பிள்ளைகளின் வாழ்க்கையை இன்னும் நம்பகத்தன்மையுடன் சித்தரிக்க உண்மையான "தெருப் பிள்ளைகளைத்" தேடினார். இந்தப் படம் வணிக ரீதியாக வெற்றி பெறவில்லை என்றாலும், 1988 இல் கான் திரைப்பட விழாவில் கேமரா டி'ஓர் மற்றும் பிரிக்ஸ் டு பப்ளிக் உட்பட 23 சர்வதேச விருதுகளைப் பெற்றது. சலாம் பாம்பே! 1989 இல் சிறந்த சிறந்த சர்வதேச திரைப்படத்திற்கான அகாதமி விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டது.[4]

மீராவும், தாராபோரேவாலாவும் 1991 ஆம் ஆண்டு வெளியான மிசிசிப்பி மசாலா திரைப்படத்தின் மூலம் பார்வையாளர்களுக்கு தொடர்ந்து படங்களைத் தந்தனர். இது மிசிசிப்பிக்கு இடம்பெயர்ந்த உகாண்டாவில் பிறந்த இந்தியர்களின் கதையைச் சொன்னது.[2] டென்செல் வாஷிங்டன், ரோஷன் சேத், சரிதா சௌத்ரி ஆகியோர் நடித்த இந்தத் திரைப்படம், கம்பள தூய்மைப் பணி வணிக உரிமையாளரை (வாஷிங்டன்) மையமாகக் கொண்டது. அவர் தனது இந்திய வாடிக்கையாளர் ஒருவரின் மகளை (சவுத்ரி) காதலிக்கிறார். இந்த படம் ஆப்பிரிக்க-அமெரிக்க மற்றும் இந்திய சமூகங்களில் உள்ள வெளிப்படையான தப்பெண்ணத்தைக் காட்டுவதாக உள்ளது. சலாம் பம்பாய்! திரைப்படம் விமர்சகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் 1992 இல் சன்டான்ஸ் திரைப்பட விழாவில் பெரும் வரவேற்பைப் பெற்றது. வெனிஸ் திரைப்பட விழாவில் மூன்று விருதுகளைப் பெற்றது.[3]

மீரா தனது குறிப்பிடத்தக்க படங்களில் ஒன்றான மான்சூன் வெட்டிங் படத்தை உருவாக்குவதற்கு முன்பு மேலும் நான்கு படங்களை இயக்கினார். 2001 இல் வெளியான இப்படம், சப்ரினா தவான் எழுதிய பஞ்சாபி இந்திய திருமணத்தின் கதையைக் கூறியது. ஒரு சிறிய குழுவினரை வேலைக்கு அமர்த்தி, மீராவுக்கு அறிமுகமானவர்கள், உறவினர்கள் போன்ற சிலரை நடிக்க வைத்த இந்த படம் உலகளவில் 30 மில்லியன் டாலருக்கும் அதிகமாக வசூலித்தது. இந்தப் படத்துக்கு வெனிஸ் திரைப்பட விழாவில் கோல்டன் லயன் விருது வழங்கப்பட்டது. இந்த விருதைப் பெறும் முதல் பெண்மணி என்ற பெருமையை மீரா பெற்றார்.[5]

மீரா பின்னர் கோல்டன் குளோப் விருது பெற்ற படமான அஸ்டரிக்கல் பிளைண்ட்னஸ் (2002) என்ற படத்தை இயக்கினார். அதையடுத்து வில்லியம் மேக்பீஸ் தாக்கரேயின் காவியமான வேனிட்டி ஃபேர் (2004) என்ற படத்தை இயக்கினார்.

2007 ஆம் ஆண்டில், மீரா ஆரி பாட்டர் அண்டு த ஆர்டர் ஆப் த பீனிக்சு, படத்தை இயக்கும்படி கேட்கப்பட்டார். ஆனால் அந்த வாய்ப்பை த நேம்சேக் படத்தில் பணிபுரிவதற்காக நிராகரித்தார்.[2] த நேம்சேக் படமானது புலிட்சர் பரிசு- பெற்றவரான ஜும்ப்பா லாஹிரி எழுதிய புத்தகத்தின் அடிப்படையிலானதாகும். அப்படத்திற்கு சீனரி தாரபோர்வாலாவின் திரைக்கதை எழுதினார். அப்படத்தன் கதையானது நியூயார்க் நகர சமுதாயத்துடன் பொருந்த விரும்பும் இந்திய குடியேறியின் மகனைப் பின்தொடர்கிறது. ஆனால் அவரது குடும்பத்தின் பாரம்பரிய வழிகளில் இருந்து விலகிச் செல்ல போராடுகிறார். இந்த படத்திற்கு டார்ட்மவுத் திரைப்பட விருது வழங்கப்பட்டது மற்றும் மற்றும் பாலிவுட் திரைப்பட விருதுகளில் பிரைட் ஆஃப் இந்தியா விருதும் வழங்கப்பட்டது . இதைத் தொடர்ந்து அமெலியா ஏர்ஃகாட் வாழ்க்கை வரலாறை அடிப்படையாகக் கொண்ட அமெலியா (2009) படத்தை இயக்கினார். அப்படத்தில் ஹிலாரி ஸ்வாங்க், ரிச்சர்ட் கியர் ஆகியோர் நடித்தனர்.[6]

2012 ஆம் ஆண்டில், மொஹ்சின் ஹமீத்தின் விற்பனையில் சக்கைபோடுபோட்ட புதினத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு பரபரப்பூட்டும் படமான தி ரிலக்டன் ஃபண்டமட்டலிஸ்ட் என்ற படத்தை மீரா இயக்கினார். இது 2012 வெனிஸ் திரைப்பட விழாவில் விமர்சன ரீதியான பாராட்டுகளைப் பெற்றது. பின்னர் 2013 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் உலகளவில் வெளியிடப்பட்டது.[7]

2016 ஆண்டு வால்ட் டிஸ்னி பிக்சர்ஸ் தயாரிப்பில் குயின் ஆஃப் கேட்வே படத்தை இயக்கினார். அதில் லுபிடா நியாங்கோ மற்றும் டேவிட் ஓயலோவோ ஆகியோர் நடித்தனர். அது உகாண்டா உகாண்டா சதுரங்க மேதையான பியோனா முட்சியின் கதையை அடிப்படையாகக் கொண்டது.[8]

நாயரின் குறும்படங்களில் நெல்சன் மண்டேலாவின் மேற்கோளான ″சிரமங்கள் சில மனிதர்களை உடைக்கின்றன, ஆனால் சிலரை உருவாக்குகின்றன.″ என்பதில் ஈர்க்கப்பட்டு ஃபோர்க், எ ஸ்பூன் அண்ட் அ நைட் என்ற குறும்படத்தை உருவாக்கினார். இவர் 11'09 "01 செப்டம்பர் 11 (2002) படக் கோவையில் ஒரு குறும்படத்தை இயக்கினார். அதில் 11 திரைப்படப் படைப்பாளிகள் 11 செப்டம்பர் 2001 நிகழ்வுகளுக்கு எதிர்வினையாற்றினர்.[9]

பிற பணிகள்

நீண்டகால செயற்பாட்டாளாரன மீரா, உகாண்டாவின் கம்பாலாவில் மைஷா ஃபிலிம் லேப் என்ற வருடாந்திர திரைப்படத் தயாரிப்பாளர்கள் பட்டறையை நிறுவினார். 2005 ஆம் ஆண்டு முதல், கிழக்கு ஆபிரிக்காவில் உள்ள இளம் இயக்குநர்கள் இந்த இலாப நோக்கற்ற நிறுவனத்தில் "நம் கதைகளை நாம் சொல்லாவிட்டால், வேறு யார் சொல்லுவார்கள்" என்ற நம்பிக்கையுடன் பயிற்சி பெற்றுள்ளனர்.[10]

1998ல், சலாம் பாம்பே படத்தில் கிடைத்த லாபத்தைப் பயன்படுத்தி! இந்தியாவில் தெருவோர குழந்தைகளுக்காக செயல்படும் சலாம் பாலக் அறக்கட்டளையை உருவாக்கினார்.[11]

2015 ஆம் ஆண்டு நிலவரப்படி, இவர் நியூயார்க் நகரில் வசித்துவருகிறார். அங்கு இவர் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் திரைப்படப் பிரிவில் துணைப் பேராசிரியராக உள்ளார். இந்தப் பல்கலைக்கழகம் நாயரின் மைஷா ஃபிலிம் லேப் உடன் ஒத்துழைப்பை வழங்கி, சர்வதேச மாணவர்கள் இணைந்து பணியாற்றவும், திரைப்படத் தயாரிப்பில் தங்கள் ஆர்வங்களைப் பகிர்ந்து கொள்ளவும் வாய்ப்புகளை வழங்குகிறது.[12]

2020 யூலையில், பத்திரிகையாளர் எலன் பாரி, தி நியூயார்க் டைம்சில் வெளியிடப்பட்ட அயோத்தி நவாப் குடும்பம்" பற்றிய புலிட்சர் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்ட " தி ஜங்கிள் பிரின்ஸ் ஆஃப் டெல்லி " கதையை அமேசான் சுடியோசு வலைத் தொடராக மீரா மாற்றியமைப்பதாக அறிவித்தார்.[13][14]

2021 மார்ச்சில் மீரா டிஸ்னி+ இக்காக பத்து பகுதிகள் கொண்ட தொலைக்காட்சித் தொடரை இயக்குவார் என்று அறிவிக்கப்பட்டது, இது நேஷனல் டிரெஷர் என்ற தொடரை புதிய நடிகர்களுடன் மீண்டும் உருவாக்குவதாக உள்ளது.[15]

Remove ads

தனிப்பட்ட வாழ்க்கை

1977 ஆம் ஆண்டில், ஆர்வர்ட் பல்கலைக்கழகத்தில் ஒளிப்படம் எடுக்கும் போது மீரா தன் முதல் கணவர் மிட்ச் எப்ஸ்டீனை சந்தித்தார். அவர்கள் 1987 இல் விவாகரத்து செய்தனர். 1988 இல் உகாண்டாவில் மிசிசிப்பி மசாலா திரைப்படத்திற்காக ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தபோது மீரா தனது இரண்டாவது கணவரான இந்தோ-உகாண்டா அரசியல் விஞ்ஞானியான மஹ்மூத் மம்தானியைச் சந்தித்தார். மம்தானியும் தன் மனைவியைப் போலவே கொலம்பியா பல்கலைக்கழகத்தில் கற்பிக்கிறார்.[2] இவர்களின் மகன் சோஹ்ரான் மம்தானி 1991 இல் உகாண்டாவில் பிறந்தார். 2020 ஆம் ஆண்டில், அந்த ஆண்டின் தொடக்கத்தில் நடந்த ஜனநாயகக் கட்சியின் முதன்மைத் தேர்தலில் நடப்பு சட்டமன்ற உறுப்பினர் ஆரவெல்லா சிமோடாஸை தோற்கடித்த பின்னர், நியூயார்க் மாநில சட்டமன்றத்தில் அசுடோரியா, குயின்சுவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இடத்தை ஜோஹ்ரான் வென்றார்.[16]

மீரா பல தாசாப்தங்களாக ஒரு உற்சாகமான யோகா பயிற்சியாளராக உள்ளார்; ஒரு திரைப்படத்தை உருவாக்கும் போது, நடிகர்கள் மற்றும் குழுவினருடன் யோகா செய்து நாளைத் தொடங்குகிறார்.[17]

திரைப்படவியல்

  • ஜமா ஸ்ட்ரீட் மஸ்ஜித் ஜர்னல் (1979)
  • சோ ஃபார் ஃப்ரம் இண்டியா (1982)
  • இண்டியா கேபரெ (1985)
  • சில்ட்ரன் ஆஃப் எ டிஸைர்ட் செக்ஸ் (1987)
  • சலாம் பாம்பே! (1988)
  • மிஸ்ஸிஸிப்பி மசாலா (1991)
  • தி டே தி மெர்சிடெஸ் பிகேம் எ ஹாட் (1993)
  • தி பெரெஸ் ஃபாமிலி (1995)
  • காம சூத்ரா: ஏ டெல் ஆப் லவ் (1996)
  • மை ஓன் கண்ட்ரி (1998) (ஷோடைம் டிவி)
  • மான்சூன் வெட்டிங் (2001)
  • ஹிஸ்டரிகல் பிளைண்ட்னெஸ் (2002)
  • 11'9"01 செப்டம்பர் 11 (பிரிவு - "இண்டியா") (2002)
  • ஸ்டில், தி சில்ட்ரன் ஆர் ஹியர் (2003)
  • வேனிடி ஃபேர் (2004)
  • தி நேம்சேக் (2006)
  • மைக்ரேஷன் (எய்ட்ஸ் ஜாகோ) (2007)
  • நியூயார்க், ஐ லவ் யூ (பிரிவு - "கோஷெர் வெஜிடேரியன்") (2008)
  • 8 (பிரிவு - "ஹௌ கான் இட் பி?") (2008)
  • அமெலியா (2009)
Remove ads

விருதுகள்

வெற்றிகள்

  • 1985: சிறந்த ஆவணப் படம், குளோபல் வில்லேஜ் திரைப்பட விழா: இண்டியா கேபரே
  • 1986: கோல்டன் ஏதனா, ஏதன்ஸ் சர்வதேச திரைப்பட விழா: இண்டியா கேபரே
  • 1986: ப்ளூ ரிப்பன், அமெரிக்கத் திரைப்பட விழா: இண்டியா கேபரே
  • 1988: பார்வையாளர் விருது, கேன்ஸ் திரைப்பட விழா: சலாம் பாம்பே!
  • 1988: கோல்டன் கேமரா (சிறந்த முதல் படம்), கேன்ஸ் திரைப்பட விழா: சலாம் பாம்பே!
  • 1988: இந்தியில் சிறந்த முழுநீளத் திரைப்படத்திற்கான தேசியத் திரைப்பட விருது]]: சலாம் பாம்பே! [18]
  • 1988: முதல் இடத்து வெளிநாட்டு திரைப்படங்களுக்கான நேஷனல் போர்ட் ஆஃப் ரிவியூ அவார்ட் சலாம் பாம்பே!
  • 1988: மான்ட்ரியல் உலகத் திரைப்பட விழாவில் "ஜூரி விருது", "மிகப் பிரபலத் திரைப்படம்" மற்றும் "ஈகுமெனிகல் ஜூரியின் விருது": சலாம் பாம்பே!
  • 1988: புதிய தலைமுறை விருது லாஸ் ஏஞ்செல்ஸ் திரைப்பட விமர்சகர்கள் அமைப்பு விருதுகள்
  • 1988: லிலியன் கிஷ் விருது (முழு நீளத் திரைப்படத்தில் சிறப்புடைமை), திரைப்பட விழாவில் லாஸ் ஏஞ்சல்ஸ் பெண்மணி: சலாம் பாம்பே!
  • 1991: கோல்டன் ஓசெல்லா (சிறந்த அசல் திரைக்கதை), வென்னிஸ் திரைப்பட விழா: மிஸ்ஸிஸிப்பி மசாலா (சூனி தாராபோரேவாலாவுடன்)[19]
  • 1991: விமர்சகர்கள் சிறப்பு விருது, சாவோ பௌலோ சர்வதேச திரைப்பட விழா: மிஸ்ஸிஸிப்பி மசாலா
  • 1992: சிறந்த இயக்குநர் (வெளிநாட்டுத் திரைப்படம்), இடாலியன் நேஷனல் சிண்டிகேட் ஆஃப் பிலிம் ஜர்னலிஸ்ட்ஸ்]: மிஸ்ஸிஸிப்பி மசாலா
  • 1992: ஆசிய ஊடக விருது, ஆசிய அமெரிக்க சர்வதேச திரைப்பட விழா
  • 1993: சிறந்த முழுநீளத் திரைப்படத்திற்கான இன்டிபெண்டெண்ட் ஸ்பிரிட் அவார்ட் : மிஸ்ஸிஸிப்பி மசாலா
  • 2000: சிறப்புக் குறிப்பு (ஆவணப்படம் மற்றும் கட்டுரை), பையார்ரிட்ஸ் இண்டர்நேஷனல் ஃபெஸ்டிவல் ஆஃப் ஆடியோவிஷுவல் புரோகிராமிங்: தி லாஃபிங் கிளப் ஆஃப் இண்டியா
  • 2001: கோல்டன் லயன் (சிறந்த திரைப்படம்), வெனிஸ் திரைப்பட விழா: மான்சூன் வெட்டிங்
  • 2001: லாடெர்னா மாஜிகா ப்ரைஸ் வெனிஸ் திரைப்பட விழா: மான்சூன் வெட்டிங்
  • 2002: பார்வையாளர் விருது, கான்பெர்ரா சர்வதேச திரைப்பட விழா: மான்சூன் வெட்டிங்
  • 2002: சர்வதேச திரைப்படத்திற்கான சிறப்பு விருது, ஜீ சினி அவார்ட்ஸ்: மான்சூன் வெட்டிங்
  • 2002: யுனெஸ்கோ விருது, வெனிஸ் திரைப்பட விழா: 11'9"01 செப்டம்பர் 11
  • 2004: ஃபெய்த் ஹப்லீ வெப் ஆஃப் லைஃப் அவார்ட், ரோசெஸ்டர்-ஹை ஃபால்ஸ் சர்வதேச திரைப்பட விழா
  • 2007: "கோல்டன் அப்ரோடைட்", லவ் ஈஸ் ஃபோல்லி சர்வதேச திரைப்பட விழா (பல்கேரியா): தி நேம்சேக்

நியமனங்கள்

  • 1989: சிறந்த வெளிநாட்டு மொழி திரைப்படத்திற்கான அகாதெமி விருது: சலாம் பாம்பே!
  • 1989: சிறந்த வெளிநாட்டு திரைப்படத்திற்கான சீஸர் விருது (Meilleur film étranger ): சலாம் பாம்பே!
  • 1989: சிறந்த வெளிநாட்டு மொழி திரைப்படத்திற்கான கோல்டன் குளோப் விருது: சலாம் பாம்பே!
  • 1990: பாஃப்டா திரைப்பட விருது ஆங்கில மொழியல்லாததற்கான சிறந்த திரைப்படம்: சலாம் பாம்பே!
  • 1990: பிலிம்ஃபேர் சிறந்த இயக்குநர் விருது: சலாம் பாம்பே!
  • 1990: பிலிம்ஃபேர் சிறந்த திரைப்பட விருது: சலாம் பாம்பே!
  • 1991: கோல்டன் லயன் (சிறந்த திரைப்படம்), வெனிஸ் திரைப்பட விருது: மிஸ்ஸிஸிப்பி மசாலா
  • 1996: கோல்டன் சீஷெல், சான் செபாஸ்டின் சர்வதேச திரைப்பட விழா: காம சூத்ரா: எ டெல் ஆப் லவ்
  • 1999: சிறந்த திரைப்படம், வெர்ஸௌபெர்ட் இண்டர்நேஷனல் கே & லெஸ்பியன் பிலிம் ஃபெஸ்டிவல்: மை ஓன் கண்ட்ரி
  • 2001: ஸ்க்ரீன் இண்டர்நேஷனல் அவார்ட் (சிறந்த ஐரோப்பியமல்லாத திரைப்படம்), ஐரோப்பிய திரைப்பட விருதுகள்: மான்சூன் வெட்டிங்
  • 2001: சிறந்த வெளிநாட்டு மொழி திரைப்படத்திற்கான கோல்டன் குளோப் விருது: மான்சூன் வெட்டிங்
  • 2002: பாஃப்டா திரைப்பட விருது ஆங்கில மொழியல்லாததற்கான சிறந்த திரைப்படம்: மான்சூன் வெட்டிங்
  • 2003: சிறந்த இயக்குநருக்கான க்ளோட்ருடிஸ் விருது: மான்சூன் வெட்டிங்
  • 2003: கோல்டன் ஸ்டார், இண்டர்நேஷனல் பிலிம் ஃபெஸ்டிவல் ஆஃப் மார்ராகெச்: ஹிஸ்டரிகல் பிளைண்ட்னெஸ்
  • 2003: ஐரோப்பிய ஐக்கியத்திலிருந்து வந்த சிறந்த திரைப்படத்திற்கான சீஸர் விருது: 11'9"01 செப்டம்பர் 11
  • 2004: கோல்டன் லயன் (சிறந்த திரைப்படம்), வெனிஸ் திரைப்பட விழா: வேனிடி ஃபேர்
  • 2007: சிறந்த திரைப்படத்திற்கான கோதம் விருது: தி நேம்சேக்

நியமனங்கள்

  • 1989: சிறந்த வெளிநாட்டு மொழி திரைப்படத்திற்கான அகாதெமி விருது: சலாம் பாம்பே!
  • 1989: சிறந்த வெளிநாட்டு திரைப்படத்திற்கான சீஸர் விருது (Meilleur film étranger ): சலாம் பாம்பே!
  • 1989: சிறந்த வெளிநாட்டு மொழி திரைப்படத்திற்கான கோல்டன் குளோப் விருது: சலாம் பாம்பே!
  • 1990: பாஃப்டா திரைப்பட விருது ஆங்கில மொழியல்லாததற்கான சிறந்த திரைப்படம்: சலாம் பாம்பே!
  • 1990: பிலிம்ஃபேர் சிறந்த இயக்குநர் விருது: சலாம் பாம்பே!
  • 1990: பிலிம்ஃபேர் சிறந்த திரைப்பட விருது: சலாம் பாம்பே!
  • 1991: கோல்டன் லயன் (சிறந்த திரைப்படம்), வெனிஸ் திரைப்பட விருது: மிஸ்ஸிஸிப்பி மசாலா
  • 1996: கோல்டன் சீஷெல், சான் செபாஸ்டின் சர்வதேச திரைப்பட விழா: Kama Sutra: A Tale of Love
  • 1999: சிறந்த திரைப்படம், வெர்ஸௌபெர்ட் இண்டர்நேஷனல் கே & லெஸ்பியன் பிலிம் ஃபெஸ்டிவல்: மை ஓன் கண்ட்ரி
  • 2001: ஸ்க்ரீன் இண்டர்நேஷனல் அவார்ட் (சிறந்த ஐரோப்பியமல்லாத திரைப்படம்), ஐரோப்பிய திரைப்பட விருதுகள்: மான்சூன் வெட்டிங்
  • 2001: சிறந்த வெளிநாட்டு மொழி திரைப்படத்திற்கான கோல்டன் குளோப் விருது: மான்சூன் வெட்டிங்
  • 2002: பாஃப்டா திரைப்பட விருது ஆங்கில மொழியல்லாததற்கான சிறந்த திரைப்படம்: மான்சூன் வெட்டிங்
  • 2003: சிறந்த இயக்குநருக்கான க்ளோட்ருடிஸ் விருது: மான்சூன் வெட்டிங்
  • 2003: கோல்டன் ஸ்டார், இண்டர்நேஷனல் பிலிம் ஃபெஸ்டிவல் ஆஃப் மார்ராகெச்: ஹிஸ்டரிகல் பிளைண்ட்னெஸ்
  • 2003: ஐரோப்பிய ஐக்கியத்திலிருந்து வந்த சிறந்த திரைப்படத்திற்கான சீஸர் விருது: 11'9"01 செப்டம்பர் 11
  • 2004: கோல்டன் லயன் (சிறந்த திரைப்படம்), வெனிஸ் திரைப்பட விழா: வேனிடி ஃபேர்
  • 2007: சிறந்த திரைப்படத்திற்கான கோதம் விருது: தி நேம்சேக்
Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads