ராக்காய் வாராக்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ராக்காய் வாராக் அல்லது மகாராஜா ராக்காய் வாராக் (ஆங்கிலம்: Rakai Warak; Srī Mahārāja Rakai Warak; இந்தோனேசியம்: Rakai Warak Dyah Manara) என்பவர் இந்தோனேசியா, மத்திய ஜாவா, மாதரம் இராச்சியத்தின் சைலேந்திர மரபைச் சார்ந்த அரசர் ஆவார். இவரின் ஆட்சிக்காலம் 3 மார்ச் 803 - 26 சூலை 827. இவர் மாதரம் இராச்சியத்தின் 4-ஆவது அரசர் ஆவார்.
8-ஆம் 9-ஆம் நூற்றாண்டுகளில், மாதரம் இராச்சியத்தின் அரசராக இருந்தவர் சிறீவிஜயத்தின் அரசராகவும் இருந்தார்.[1] மாதரம் இராச்சியத்தின் ஆளுமையின் கீழ் சிறீ விஜயப் பேரரசு அமையப் பெற்றதும், மாதரம் இராச்சியத்தை ஆட்சி செய்த அதே அரசர்கள் சிறீ விஜயப் பேரரசையும் ஒருசேர ஆட்சி செய்தனர்.
ராக்காய் வாராக் எனும் பெயரும் சமரகரவீரன் (Samaragrawira) எனும் பெயரும்; ஒரே நபரைக் குறிப்பிடுவதாக வரலாற்று ஆசிரியர்கள் சிலர் கருதுகின்றனர். ஆனால் அது ஓர் அனுமானம் என்று அண்மைய் ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன.
Remove ads
சர்ச்சைகள்
இந்தோனேசிய வரலாற்றாசிரியர் சிலாமெட் முல்ஜானா (Slamet Muljana) முன்வைத்த ஒரு கோட்பாடு; சமரகரவீரனின் அசல் பெயர் சமரகரவீரர் என்றும்; அவர் சிறீ விஜய மன்னர் பாலபுத்திர தேவாவின் (Balaputradewa) தந்தை என்றும் கூறுகிறது.
எனினும், நாளந்தா கல்வெட்டின் பதிவுகளின்படி, பாலபுத்திரதேவா என்பவர், சோம வம்சத்தைச் சேர்ந்த தருமசேதுவின் மகள் தேவி தாராவுக்குப் (Tara Dharmasetu) பிறந்த சமரகரவீரனின் மகனாவார். பெரும்பாலான வரலாற்றாசிரியர்கள் தருமசேது சிறீ விஜய இராச்சியத்தின் மன்னர் என்று நம்புகிறார்கள்.
உண்மையில், பாலபுத்திரதேவா தன் தாத்தாவிடம் இருந்து சுமாத்திரா தீவின் அரியணையைப் பெற்றார். இதுவே வரலாற்றாசிரியர் சிலாமெட் முல்ஜானாவின் கருத்தும் ஆகும். பாலபுத்திரதேவா எனும் பாலபுத்திரன் தருமசேதுவிடம் இருந்து சிறீ விஜய அரியணையைப் பெறவில்லை; சைலேந்திர வம்சத்தைச் சேர்ந்தவராக இருந்ததால், பாலபுத்திரதேவா சிறீ விஜயத்தின் அரசராக முடிந்தது என்றும்; சிலாமெட் முல்ஜானா தம் கருத்தை முன்வைக்கிறார்.
Remove ads
அரச வரலாறு
ராக்காய் வாராக் எனும் பெயர் மந்தியாசி கல்வெட்டு, வானுவா தெங்கா III கல்வெட்டு ஆகியவற்றின் மூலமாக அறியப்படுகிறது. மேலும் வங்சாகீர்த்தா கையெழுத்துச் சுவடியின் மூலமாக (Naskah Wangsakerta) அவரின் பெயர் மேலும் வலுப்படுத்தப்படுகிறது.[2]
மந்தியாசி கல்வெட்டில் காணப்படும் மாதரம் இராச்சியத்தின் மன்னர்களின் பட்டியலில் சிறீ மகாராஜா ராக்காய் வாராக் நான்காவது இடத்தில் உள்ளார். அவரது பெயர் ராக்காய் பனராபனுக்கு (Rakai Panaraban) பிறகும், ராக்காய் காருங்கிற்கு (Rakai Garung) முன்பும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Remove ads
வானுவா தெங்கா III கல்வெட்டு
இருப்பினும், இது வானுவா தெங்கா III கல்வெட்டில் காணப்படும் மன்னர்களின் பட்டியல், மற்ற கல்வெட்டுகளில் இருந்து வேறுபட்டது. அங்கு ஸ்ரீ மகாராஜா ராக்காய் வாராக்-கின் பெயர் ராக்காய் பனராபனுக்கு (Rakai Panaraban) பிறகும், தயா குலாவுக்கு (Dyah Gula) முன்பும் குறிப்பிடப்படுகிறது.
ராக்காய் வாராக் என்ற பெயர் உண்மையான பெயர் அல்ல; ஏனெனில் இந்தப் பெயரின் பொருள் வாராக் பிராந்தியத்தின் தலைவன் என்பதாகும். இருப்பினும், வானுவா தெங்கா III கல்வெட்டில், அவரது உண்மையான பெயர் தயா மனாரா (Dyah Manara) என்று அறியப்படுகிறது.
பழைய ஜாவானிய மொழியில் ராக்காய் என்றால் தலைவன் என்று பொருள் படும். ராகா (raka) அல்லது ராகே (rake) எனும் சமசுகிருதச் சொல்லில் இருந்து உருவானது.
மேலும் காண்க
மாதரம் இராச்சியத்தின் மன்னர்கள்
மேற்கோள்கள்
சான்றுகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads