வனமகன் (திரைப்படம்)
ஏ. எல். விஜய் இயக்கத்தில் 2017 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
வனமகன் (திரைப்படம்) (ஆங்கிலம்: Vanamagan)[1] 2017ம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். ஏ. எல். விஜய் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தை, ஏ. எல். அழகப்பன் என்பவர் தாயாரித்து வெளிட்டுள்ளார். இப்படத்தில் ஜெயம் ரவி கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் சாயிஷா, பிரகாஷ் ராஜ், தம்பி ராமையா, வருண், ரோபோ சங்கர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.[2] ஹாரிஸ் ஜெயராஜ் என்பவர் இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார். இந்தப் படத்தின் தயாரிப்பு 2016 செப்டம்பரில் தொடங்கியது. 23 ஜூன் 2017 அன்று வெளியிடப்பட்டது.[3]

Remove ads
வகை
சாகச படம், சண்டைப் படம், சிரிப்பு படம்.
கதை
காவ்யாவின் பெற்றோர் அவளது குழந்தை பருவத்திலேயே ஒரு விபத்து காரணமாக இறந்து விடுகின்றனர். அவர்கள் விட்டுச் சென்ற தொழில் நிறுவனத்தை அவளது தந்தையின் நண்பரான ராஜசேகர் (அவரது செல்வத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்) கவனித்து வருகிறார். காவ்யாவும் அவரது நண்பர்களும் ஒரு புத்தாண்டை அந்தமானில் கொண்டாட திட்டமிடுகின்றனர். அங்கு அவர்கள் மிகவும் மோசமானவர்களாக நடந்துகொள்கிறார்கள். அவர்களின் செயல்களுக்காக காவலர்களிடமிருந்து தப்பிக்கும்போது, காவ்யா ஓட்டிச் சென்ற வாகனம் பழங்குடி இனத்தவரான ஜாரா என்பவன் மீது மோதி அவனது தலையில் பலத்த காயம் அடைந்து விடுகிறான். காவ்யா சிறந்த சிகிச்சையை அளித்து அவரைக் காப்பாற்ற முடிவு செய்கிறாள். எனவே அவள் அவனை சென்னைக்கு அழைத்து வருகிறாள். முதலில், ஜாராவுக்கு அவளுடைய மொழி தெரியாது என்பதால் அவர்களுக்கு இடையே பல தவறான புரிதல்கள் ஏற்படுகிறது. சிறிது நாள் கழித்து, அவள் அவனைப் பயிற்றுவிக்கத் தொடங்குகிறாள். அவர்களுடைய மொழிகள் தெரியாவிட்டாலும் அவர்களுக்கு இடையே ஒரு அழகான பிணைப்பு தொடங்குகிறது. காவ்யாவின் நண்பரான விக்கி, தவறான எண்ணித்துடன் அவளை நெருங்க முயலும் போது ஜாராவால் காப்பாற்றப்படுகிறாள். காவ்யா ஜாராவுக்கு உதவ முயற்சிக்கிறாள் ஆனால் ஜாரா அந்தமானுக்கு அழைத்துச் செல்லப்படுகிறார். காவ்யாவும் அந்தமனை அடைகிறாள். இதற்கிடையில் பழங்குடியினர் வசிக்கும் காட்டினை காலி செய்து விட்டு அந்த இடத்தில் ஒரு ஜெர்மன் நிறுவனம் தொழில் தொடங்க திட்டம் தீட்டுகிறது. அந்த நிறுவனம் காவ்யாவின் பாதுகாவலர் ராசசேகருக்கு நெருக்கமாக இருக்கிறது. காவ்யாவும், ஜாராவும் காதலிக்கின்றனர். ராஜசேகர் இருவரின் காதலையும் அப்படியே ஏற்றுக் கொள்கிறார். பின்னர் என்னவாயிற்று என்பதை மீதிக் கதை சொல்கிறது.
Remove ads
நடிகர்கள்
ஜாராவாக (கே. வாசி) ஜெயம் ரவி
காவ்யாவாக சாயிஷா
ராச்சேகராக பிரகாஷ் ராஜ்
புலிப்பாண்டியனாக தம்பி ராமையா
விக்கியாக வருண்
அர்ஜுனன்
ஜாராவின் தந்தையாக வேல ராமமூர்த்தி
காவ்யாவின் மாமனாக தலைவாசல் விஜய்
ரம்யாவாக ரம்யா சுப்பிரமணியன்
விசா வழங்குபவராக ஆர். எஸ். சிவாஜி
காவல் அதிகாரியாக சண்முகராஜன்
துணை இயக்குநராக சஞ்சய் பாரதி
மைக்கேல் ராஜ் - சாம் பால்
சூர்யபிரகாசுவாக சீனிவாசன்
தமா - மில்டன் ராஜு
ரவி வெங்கட்ராமன்
தயாரிப்பு
மதராசபட்டினம் பட வெற்றிக்குப் பிறாகு ஏ. எல். விஜய் சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்க ஒருத் திரைப்படம் தொடங்க எண்ணினார். சூரியா இப்படத்தின் கதையை விரும்பினார், ஆனால் பொருட்செலவு காரணமாக தொடர இயலவில்லை.[4][5] பின்னர் நவம்பர் 2015 இல், இயக்குநர் ஏ. எல். விஜய் ஜெயம் ரவிமுக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க இத்திரைப்படத்தை இயக்குவதாக அறிவித்தார். தனது மற்ற படங்கள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, இருவரும் 2016 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இந்த திட்டத்தின் பணிகளைத் தொடங்குவதாக நடிகர் ஜெயம் ரவி உறுதிப்படுத்தினார்.[6] இந்தப் படம் குமரிக்கண்டம் என்ற ஒரு இழந்த ராச்சியத்திலிருந்து தப்பிக்கும் ஒரு மனிதனைப் பற்றியது என்று தெரிவிக்கப்பட்டது [7] மே 2016 ன் பிள்பகுதியில்ல, இந்த திட்டம் தொடங்கும் என்பதை விஜய் உறுதிப்படுத்தினார். மேலும் இந்தத் திரைப்படம் அந்தமான் தீவுகளில் விரிவாக படமாக்கப்படும் என்பதை வெளிப்படுத்தியது. இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜயராஜ் மற்றும் ஒளிப்பதிவாளர் திரு ஆக்யோரும் இத்திட்டத்தில் இணைந்தனர்.[8][9]
பின்னர் செப்டம்பர் 2016 இல் சென்னையில் இப்படத்தின் தயாரிப்பு தொடங்கப்பட்டது. சாயிஷா படத்தில் முன்னணி பெண் பாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இதன் மூலம் தமிழ்ப் படத்தில் அறிமுகமானார்.[10] சஞ்சய் பாரதி மற்றும் வருண் ஆகியோரும் இப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டனர். நடிகர் ஜெயம் ரவி கதாநாயகியின் மீது காதல் கொள்வது போல நடிப்பார் என்பதையும், நகரத்திற்கு வந்துவிடும் ஒரு பழங்குடி மனிதனை ஜெயம் ரவி சித்தரிப்பார் என்பதையும் அறிவித்தனர்.[11] படத்தின் முன்னோட்டம் அதிகாரப்பூர்வமாக 6 பிப்ரவரி 2017 அன்று வெளியிடப்பட்டது.[12][13] முன்னோட்டத்தில் இடம் பெற்ற ஆப்பிரிக்க பழங்குடியின பின்னணி இசை நல்ல வரவேற்பைப் பெற்றது.[14]
வெளியீடு
ஆரம்பத்தில் படத்தின் வெளியீட்டு தேதி 19 மே 2017 அன்று நிர்ணயிக்கப்பட்டது. 30 மே 2017 அன்று திரைப்படத் துறை வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டதால், தயாரிப்பாளர்கள் திரையரங்கு வெளியீட்டை 23 ஜூன் 2017 க்கு ஒத்திவைத்தனர்.[15] படத்தின் செயற்கைக்கோள் உரிமைகள் ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கு விற்கப்பட்டன.[16] ."[17]
Remove ads
ஒலிப்பதிவு
இந்தப் படத்தின் ஒலிப்பதிவினை ஹாரிஸ் ஜயராஜ் மேற்கொண்டார். இயக்குநர் ஏ. எல். விஜய்யுடனான அவரது முதல் படமாகும்.மேலும் நடிகர் ஜெயம் ரவியுடன் தாம் தூம் மற்றும் எங்கேயும் காதல் ஆகிய படங்களுக்குப் பின்னர் இணைந்த மூன்றாவது படமாகும். இது இசையமைப்பாளராக ஹாரிஸ் ஜயராஜின் 50 வது படம் ஆகும். முழுமையான இசைத் தொகுப்பு 22 ஏப்ரல் 2017 அன்று வெளியிடப்பட்டது.
மதன் கார்க்கி அனைத்துப் பாடல்களையும் எழுதினார்.
Remove ads
குறிப்புகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads