விசாகப்பட்டினம் பல்லுயிர் பூங்கா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
விசாகப்பட்டினம், பல்லுயிர் பூங்கா (Biodiversity Park, Visakhapatnam), என்பது அயல் சூழலில் தாவரங்களைப் பாதுகாக்கும் தாவரவியல் பூங்கா ஆகும். இது இந்தியாவின் ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் அமைக்கப்பட்டுள்ளது.[1] இந்த பூங்கா, இராணி சந்திரமணி தேவி அரசு மருத்துவமனை வளாகத்தில் 3 ஏக்கர்கள் (1.2 ha) பரப்பளவில் அமைந்துள்ளது . அரசு சாரா, பதிவுசெய்யப்பட்ட, சுற்றுச்சூழல் அமைப்பான விசாகப்பட்டினம் ஓங்கில் இயற்கைப் பாதுகாப்பு சமூகத்தினால் (டி.என்.சி.எஸ்) 13 ஆண்டுகளாகப் பராமரித்து வரப்படுகிறது. தற்பொழுது மருத்துவமனை நிர்வாகம் மற்றும் விசாகப்பட்டினம் பெருநகர மண்டல மேம்பாட்டு ஆணையத்துடன் இணைந்து பராமரிக்கப்படுகிறது.[2] இந்த பூங்கா 5 ஜூன் 2002 அன்று திறக்கப்பட்டது. இந்த பூங்காவில் 2,000க்கும் மேற்பட்ட தாவரங்கள் உள்ளன.[3] மேலும் 60 வகையான பறவைகள் மற்றும் 105 வகையான பட்டாம்பூச்சிகளின் வருகைப் பதிவு செய்யப்பட்டுள்ளது.[4] இந்த பூங்கா மாணவர்களுக்குக் கல்வி மற்றும் விழிப்புணர்வுணர்வினையும், ஆராய்ச்சியாளர் மற்றும் தாவரவியலாளர்கள், விலங்கியல் வல்லுநர்களுக்கு "வாழ்க்கை ஆய்வகமாக" உள்ளது.[5][6][7]

Remove ads
மண்டலங்கள்
பூங்காவில் 10 முக்கிய பிரிவுகளின் கீழ் தாவரங்கள் உள்ளன: [8]
- கோயில் காடுகள்
- சுராசிக் காலத் தாவரப்பகுதி-வாழும் தொல்லுயிர் தாவரங்கள்
- கள்ளி வகைத் தாவரங்கள்
- அலங்காரத் தாவரங்கள்
- நீர் வாழ்த் தாவரங்கள்
- மருத்துவ/மூலிகை/வாசனைத் தாவரங்கள்
- பூச்சி உண்ணும் தாவரங்கள்
- ஆர்க்கிட்
- பன்னம் (பெரணி வகை)
- மூங்கில் மற்றும் பனைத் தாவரங்கள்
இந்த பிரிவுகளில் பல்வேறு அரியத் தாவரங்கள் உள்ளன. பாசில் மரம் (ஜின்கோ பிலோபா ) மற்றும் தாவரவியல் அதிசயங்களான, கிருஷ்ணாவின் வெண்ணெய் கோப்பை, புனித சிலுவை, இயேசு புன்னகை, ஆட்டோகிராப் மரம், பெருக்க மரம், மிக்கி மவுஸ் மரம், சிரிக்கும் புத்த மூங்கில், ஆக்டோபஸ் மரம் போன்ற விந்தையான மரங்களும் காணப்படுகிறது.[3][6] இது 'பசுமை வீடு அல்லது பசுமை வலையிடப்பட்ட வீடு', 'குளம்', 'கற்றாழை & சதைப்பற்றுள்ள தாவர பாதுகாப்பிடம்’ உள்ளன. இந்த பூங்காவில் பயிற்சிப் பட்டறை மற்றும் பயிற்சித் திட்டங்களை நடத்துவதற்காக பயிற்சி மையமும் தொடங்கப்பட்டுள்ளது.[9]
Remove ads
செடிகள்
பல்லுயிர் பூங்காவில் பின்வரும் தாவரங்கள் உள்ளன:
- புனித காடுகள்/கோயில் காடுகள் மண்டலம்: விநாயகர் வழிபாடு (21 தாவரங்கள்), நட்சத்திர வனம்/பிறப்பு நட்சத்திரங்கள் அல்லது நட்சத்திர விண்மீன்கள் (27 தாவரங்கள்), ராசி வனம்/இராசி அறிகுறிகள் (12 தாவரங்கள்), சப்த ரிஷி வனம்/7 இந்திய முனிவர்கள் தோட்டம் (7 தாவரங்கள்) மற்றும் நவகிரக வன (9 தாவரங்கள்).[10][11]
- மருத்துவ/மூலிகை மற்றும் நறுமணப் பொருட்கள்: செஞ்சந்தனம், சந்தனம், காந்தள், சர்பகந்தி, சிறுகுறிஞ்சா, கோஸ்டஸ் இக்னியஸ் உள்ளிட்ட 500 வகையான மருத்துவ தாவரங்கள்.[12]
- அலங்காரத் தாவரங்கள்: 200க்கும் மேற்பட்ட வகைகள், நாகலிங்க மரம், பேசிபுளோரா, பெருகிள்ளை, ஜேம்சு பாண்ட் 007, ஒச்னா செரூலேட்டா.[13]
- கற்றாழை: கோல்டன் பீப்பாய் கற்றாழை எக்கினோகாக்டஸ் க்ரூசோனி, ரூபிபால் கற்றாழை ஜிம்னோகாலிசியம் மிஹானோவிச்சி உட்பட கிட்டத்தட்ட 100 வகைகள்
- கல்செடி (பேரினம்): லித்தோப்சு சிற்றினங்கள், 300[14]
- நீர் வாழ்தாவரங்கள்: விக்டோரியா அமசோனிகா உட்பட 50க்கும் மேற்பட்ட இனங்கள்.[15] அல்லி, தாமரை, ஈக்விசிட்டம், வாலிஸ்நேரியா, ஹைட்ரில்லா, பொட்டாமோகெட்டன். இந்தப் பூங்காவில் அலையாத்தித் தாவரங்களானஅவிசென்னியா மரீனா சுவாச வேர்களுடனும் (காற்று வேர்), அகேந்தோபைலம் முதலியன
- புரோமிலியாட்சு: 15 வகைகள், டில்லாண்டிசியா.[16]
- பன்னம்: நெப்ரோலெப்பிசு (வாள் பெரணி), பறவைக் கூடு பன்னம், டெரிசு, பாலிபோடியம், நட்சத்திரப் பன்னம், இதயப் பன்னம்.
- பூச்சி உண்ணும் தாவரங்கள்: கெண்டி ( தாவரக் குடுவை).[17][3]
- மூங்கில் தோப்பு: சிரிக்கும் புத்த மூங்கில் பம்புசா வென்ட்ரிகோசா, தங்க மூங்கில், பச்சை மூங்கில் உள்ளிட்ட 5 வகையான மூங்கில் காணப்படுகின்றன.
- பனைத் தோப்பு: 25க்கும் மேலான இனங்கள். வோடியெடியா பைபர்கட்டா, கூந்தற்பனை, ஹைப்போர்பி லேஜெனிகலிசு, சைரோஸ்டேகைசு ரென்டா
- ஆர்போரேட்டம்: இதில் 200க்கும் மேற்பட்ட பூர்வீக மற்றும் கவர்ச்சியான மர இனங்கள் உள்ளன.[8]
Remove ads
பறவைகள்
இந்தப் பூங்காவில் 60 வகையான பறவைகள் உள்ளதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.[12] இவற்றில் முக்கியமானவை பொன்முதுகு மரங்கொத்தி, புள்ளி ஆந்தை, பராக்கீட்ஸ், கருங்கொண்டை நாகணவாய், செம்போத்து, செம்மீசைச் சின்னான், ஊதாத் தேன்சிட்டு மற்றும் கூகை ஆந்தை.
பட்டாம்பூச்சிகள்
பட்டாம்பூச்சிகளில் 6 குடும்பங்களைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட இனங்கள் விசாகப்பட்டினத்தில் கிழக்கு தொடர்ச்சி மலைக் காடுகளில் காணப்படுகின்றன. இதில் அழகிகள் பட்டாம்பூச்சிக் குடும்பத்தில் 10க்கும் மேற்பட்ட இனங்களும் வெள்ளையன்கள் பட்டாம்பூச்சி குடும்பத்தில் 20க்கும் மேற்பட்ட இனங்களும், வரியன்கள் பட்டாம்பூச்சிக் குடும்பத்தில், 30 க்கும் மேற்பட்ட இனங்களும் நீலன்கள் பட்டாம்பூச்சிகள் குடும்பத்தில் 20 க்கும் மேற்பட்ட இனங்களும், ரியோடினிடே குடும்பத்தில் ஒரு இனமும் தாவிகள் பட்டாம்பூச்சி குடும்பத்தில் 10 இனங்களும் இங்குக் காணப்படுகின்றன.[18][19] பருவகாலங்களில் ஆண் பட்டாம்பூச்சிகள் குரோடலேரியா ரெட்டுசாசா, கிலுகிலுப்பை, தேள் கொடுக்கி போன்ற தாவரங்களைக் கூட்டமாகச் சுற்றி அவற்றிலிருந்து ஆல்கலாய்டுகளை இனப்பெருக்கத்திருக் தேவைக்காக உறிஞ்சுகின்றன.[20][21][22][4]
Remove ads
ஹுத்ஹுதுத் புயல்
அக்டோபர் 2014இல் ஹுத்ஹுதுத் புயல் கிழக்கு இந்தியா மற்றும் நேபாளத்தில் பெரும் சேதத்தையும் உயிர் இழப்பையும் ஏற்படுத்தியது. முழு பூங்காவும் கடுமையாகச் சேதமடைந்து கிட்டத்தட்ட ஒரு மயானம் போலக் காட்சியளித்தது. அனைத்து மர இனங்களும் வேரோடு வீழ்ந்தன. வேலிகளும் அழிக்கப்பட்டன. குளம், பசுமைக் குடில், கற்றாழை வீடு இடிந்து விழுந்து சேதமடைந்தன.[23][24][25] அரசாங்க உதவியுடன் மாணவ தன்னார்வலர்களால் இந்த பூங்கா ஒரு வருட காலத்திற்குள் சீரமைக்கப்பட்டு புத்துயிர் பெற்றது.[9][26]
Remove ads
விருதுகள்
விசாகப்பட்டினத்தின் பல்லுயிர் பூங்காவின் வளர்ச்சி மற்றும் பராமரிப்பிற்காக ஓங்கில் இயற்கை பாதுகாப்பு சங்கம் (டி.என்.சி.எஸ்) ஆந்திர மாநில அரசின் மாநில அளவிலான இரண்டு விருதுகளைப் பெற்றுள்ளது.[13]
மேலும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads