விழுப்புரம் பேருந்து நிலையம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
விழுப்புரம் பேருந்து நிலையம் (Villupuram Bus Stand) இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஓர் பேருந்து நிலையம் ஆகும். இங்கு விழுப்புரம் மண்டலத்திற்கு உட்பட்ட தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் அமைந்துள்ளது.
Remove ads
அமைவிடம்
இப்பேருந்து நிலையமானது திருச்சி சாலையில் அமைந்துள்ளது. இங்கிருந்து கிழக்கு பாண்டி சாலையில் 2 கி.மீ தொலைவில் பழைய பேருந்து நிலையமும் (அறிஞர் அண்ணா பேருந்து நிலையம்), தமிழ்நாட்டின் தென்னக இரயில்வேயின், மிகப் பெரிய இரயில் நிலையங்களின் ஒன்றான விழுப்புரம் இரயில் நிலையம் 2.5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. பழைய பேருந்து நிலையமானது நகரப் பேருந்துகளுக்காக பயன்படுத்தப்படுகிறது.
போக்குவரத்து

இப்பேருந்து நிலையமானது தென் தமிழகத்தை இணைக்கும் முக்கியப் பேருந்து நிலையமாகும். தலைநகரம் சென்னையில் இருந்து தென்தமிழகமான திருச்சி, மதுரை, தூத்துக்குடி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி போன்ற பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் இப்பேருந்து நிலையத்தை வந்தடைந்த பின்னே செல்கிறது. இங்கிருந்து வடக்கு திசையில் 160 கி.மீ தொலைவில் சென்னையும், தெற்கு திசையில் 160 கி.மீ தொலைவில் திருச்சியும், கிழக்கு திசையில் 40 கி.மீ தொலைவில் புதுச்சேரியும், மேற்கு திசையில் 38 கி.மீ தொலைவில் திருக்கோவிலூரும், தென்கிழக்கு திசையில் 40 கி.மீ தொலைவில் கடலூரும், வடமேற்கு திசையில் 60 கி.மீ தொலைவிலும் திருவண்ணாமலையும் மற்றும் 44 கி.மீ தொலைவில் செஞ்சிக் கோட்டையும் மற்றும் ஆரணி 93 கி.மீ. தொலைவிலும், தென்மேற்கு திசையில் 144 கி.மீ தொலைவில் சேலமும் அமைந்துள்ளது. விழுப்புரத்திலிருந்து பண்ருட்டி வழியாக கடலூர், விருத்தாச்சலம், கும்பகோணம், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, தஞ்சாவூர் போன்ற இடங்களுக்கு செல்லலாம். அதுமட்டுமில்லாமல் செஞ்சி, ஆரணி வழியாக வேலூருக்கும் அடிக்கடி பேருந்து வசதிகள் உள்ளது
Remove ads
நடைமேடைகள்
இப்பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசுப் பேருந்துகள், அரசு விரைவுப் பேருந்துகள், தனியார் பேருந்துகள், கருநாடக அரசுப் பேருந்துகள் போன்றவை அனுமதிக்கப்படுகிறது. இப்பேருந்து நிலையத்தில் 3 நடைமேடைகளும், 67 தடுப்புகளும் உள்ளன.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
