விக்ரம்
இந்திய நடிகர் / From Wikipedia, the free encyclopedia
விக்ரம் (17 ஏப்ரல் 1966) என்பவர் தமிழ்நாட்டுத் திரைப்பட நடிகர், திரைப்படத் தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர் மற்றும் குரல் நடிகர் ஆவார். இவர் 1990 ஆம் ஆண்டு முதல் சேது (1999), விண்ணுக்கும் மண்ணுக்கும் (2001), சாமி (2003), பிதாமகன் (2003), ஐ (2015) போன்ற தமிழ் மொழி திரைப்படங்களிலும், தெலுங்கு மற்றும் மலையாளத் திரைப்படங்களிலும் நடித்ததன் மூலம் தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராவார்.
விக்ரம் | |
---|---|
விக்ரம் 2003 | |
பிறப்பு | கென்னடி ஜான் விக்டர் 17 ஏப்ரல் 1966 (1966-04-17) (அகவை 58)[1][2] சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
படித்த கல்வி நிறுவனங்கள் | இலயோலாக் கல்லூரி, சென்னை |
பணி |
|
செயற்பாட்டுக் காலம் | 1988–தற்போது வரை |
பெற்றோர் | வினோத் ராஜ் (தந்தை) |
வாழ்க்கைத் துணை | சைலஜா பாலகிருஷ்ணன் (தி. 1992) |
பிள்ளைகள் | இளவரசி அக்ஷிதா விக்ரம் |
உறவினர்கள் | தியாகராஜன் (தாய்வழி மாமா) பிரசாந்த் (உறவினர்) |
விருதுகள் | சிறந்த நடிகருக்கான தேசிய திரைப்பட விருது (2003) சிறந்த நடிகருக்கான தமிழக அரசு திரைப்பட விருது (1999, 2003, 2010) கலைமாமணி விருது (2004) |
இவர் தமிழ்த் திரைப்படத் துறையில் பணி புரிந்த வரையில் 7 பிலிம்பேர் விருதுகள் பெற்றுள்ளார். அது மட்டுமின்றி சிறந்த நடிகருக்கான ஒரு தேசிய விருதும் தமிழ் நாடு மாநில விருதும் பெற்றுள்ளார். இவருக்கு மிலான் பல்கலைக்கழகம் 2011 ஆம் ஆண்டு மே மாதம் அன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது. தனது நடிப்பாற்றல் மூலமாகத் தமிழ்த் திரையுலகில் முன்னணி இடம் வகிக்கும் நடிகருள் இவரும் ஒருவர்.[3]
விக்ரம் வெவ்வேறு சமூக நிகழ்ச்சிகளை முன் நின்று நடத்தியுள்ளார். இவர் ஐக்கிய நாடுகளின் குடிசார் அமைப்பின் தூதர். சஞ்சீவனி அறக்கட்டளையின் தூதுவராகவும் வித்யா சுதா, என்னும் மாற்றுத் திறன் பள்ளியின் தூதுவராகவும் உள்ளார். காசி கண் நலப்பணியின் வேளையிலும் தன்னை ஆட்படுத்திக் கொண்டார். விக்ரம் நிறுவனம் மூலம் பல நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.[4]