ஆசியக் கோப்பை (காற்பந்து)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஆசியக் கிண்ணம் (காற்பந்து) அல்லது ஏஎஃப்சி ஆசியக் கோப்பை (AFC Asian Cup) என்பது ஆசிய கால்பந்துக் கூட்டமைப்பால் நடத்தப்பெறும் நாடுகளுக்கிடையேயான கால்பந்துப் போட்டித் தொடராகும். கோப்பா அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக உலக அளவில் பழமையான கண்ட கால்பந்துப் போட்டியாகும். வெற்றிபெறும் அணி நேரடியாக பிஃபா கூட்டமைப்புகள் கோப்பையில் ஆடத் தகுதிபெறும்.[1]
ஆசியக் கிண்ணம் நான்காண்டுகளுக்கு ஒருமுறை 1956 (ஆங்காங்) முதல் 2004 (சீனா) வரை நடத்தப்பட்டு வந்தது. இதே சுழற்சியில் ஒலிம்பிக் போட்டிகளும் ஐரோப்பிய கால்பந்தாட்டப் போட்டிகளும் ஆசியக்கிண்ணம் இடம்பெறும் அதே ஆண்டில் நடத்தப்பெற்றதால், ஆசியக் கிண்ணத்தை நடத்துவதற்கான காலகட்டம் மாற்றப்பட்டது. 2004 இற்குப் பிறகு 2007-இல் நடத்தப்ப்பட்டது. இப்போட்டிஅயி பெறுகிறது. 2007-இல் தென்கிழக்காசியாவில் இந்தோனேசியா, மலேசியா, வியட்நாம், தாய்லாந்து ஆகிய நாடுகள் நடத்தின. அதன் பின்னர் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை போட்டிகள் நடத்தப்படுகின்றன.
ஆசியக் கிண்ணம் பொதுவாக சிறிய எண்ணிக்கையிலான முன்னணி அணிகளால் ஆதிக்கம் செலுத்தப்படுகிறது. தொடக்கத்தில் வெற்றி பெற்ற அணிகளில் தென் கொரியா (இரண்டு முறை), ஈரான் (மூன்று முறை) ஆகியவை அடங்கும். 1984 முதல், சப்பான் (நான்கு முறை), சவூதி அரேபியா (மூன்று முறை) ஆகியவை மிகவும் வெற்றிகரமான அணிகளாக உள்ளன, கடைசி பத்து இறுதிப் போட்டிகளில் இவையிரண்டும் ஏழில் வெற்றி பெற்றன. வெற்றி பெற்ற மற்ற அணிகள் கத்தார் (2019 நடப்பு வாகையாளர்), ஆத்திரேலியா (2015), ஈராக் (2007), குவைத் (1980) ஆகியவை ஆகும். இசுரேல் 1964 இல் வென்றது, ஆனால் பின்னர் அது வெளியேற்றப்பட்டது, அது பின்னர் ஐரோப்பிய காற்பந்துச் சங்கங்களின் ஒன்றியத்தில் இணைந்தது.
ஆத்திரேலியா 2007 இல் ஆசியக் கூட்டமைப்பில் இணைந்தது, அது 2015 இல் தனது நாட்டில் போட்டிகளை நடத்தி, இறுதிப் போட்டியில் தென் கொரியாவை வென்றது. 2019 ஆசியக்கிண்ணத்தில் பங்குபற்றிய அணிகளின் எண்ணிக்கை 16 இல் இருந்து 24 இற்கு அதிகரிக்கப்பட்டது.[2][3]
Remove ads
முடிவுகள்
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads