இலங்கையின் தேர்தல் மாவட்டங்கள்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இலங்கையின் தேர்தல் மாவட்டங்கள் (Electoral districts in Sri Lanka) என்பது இலங்கையின் 1978 அரசியலமைப்பின் படி இலங்கை நாடாளுமன்றத்திற்கு விகிதாசார அடிப்படையில் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக தேர்தல் நோக்கங்களுக்காக மட்டும் அமைக்கப்பட்ட அலகுகள் ஆகும். இதனடிப்படையில் 22 தேர்தல் மாவட்டங்கள் அமைக்கப்பட்டன. இவை 160 வாக்கெடுப்புப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்த 22 தேர்தல் மாவட்டங்களுக்கும் விகிதாசார பிரதிநிதித்துவ முறையின் கீழ் தேர்தல் நடைபெறுகின்றது.
இரண்டு தேர்தல் மாவட்டங்களைத் தவிர மீதமான 20 தேர்தல் மாவட்டங்களும் அவற்றின் நிருவாக மாவட்டத்தின் பெயர்களையே தாங்கியுள்ளன. மாறாக, யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய நிருவாக மாவட்டங்கள் தேர்தல் நோக்கங்களுக்காக ஒன்றிணைக்கப்பட்டு யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டம் என அழைக்கப்படுகிறது. அதே போல், மன்னார், முல்லைத்தீவு, வவுனியா ஆகிய நிருவாக மாவட்டங்கள் ஒன்றிணைக்கப்பட்டு வன்னித் தேர்தல் மாவட்டம் என அழைக்கப்படுகிறது.
இந்த 22 புதிய தேர்தல் மாவட்டங்களிலும் முதற்தடவையாக 1989 ஆம் ஆண்டில் பொதுத்தேர்தல் நடத்தப்பட்டது.
Remove ads
உறுப்பினர்கள்
இலங்கை அரசியலமைப்பின் படி, நாடாளுமன்றம் 225 உறுப்பினர்களைக் (ஆசனம்) கொண்டிருக்க வேண்டும்:[1]
- மாகாண அடிப்படையில், ஒவ்வொரு மாகாணத்திற்கும் 4 உறுப்பினர்கள் என்ற அடிப்படையில் (பகுதி 96(4)) 36 உறுப்பினர்கள் தேர்தெடுக்கப்படுவார்கள்.[2] ஒவ்வொரு மாகாணத்திற்குமான உறுப்பினர்கள் குறிப்பிட்ட மாகானத்துக்குள் அடங்கிய தேர்தல் மாவட்டங்களுக்கிடையேயான தொகுதிப் பங்கீட்டு அடிப்படையில் தேர்தெடுக்கப்படுவார்கள்.[2]
- அனைத்துத் தேர்தல் மாவட்டங்களுக்கும் மொத்தம் 160 இடங்கள் (பகுதி 98) ஒதுக்கப்பட்டுள்ளன.[3] தேர்தல் ஆணையம் ஆண்டு தோறும் அந்தந்த தேர்தல் மாவட்டங்களின் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கையைப் பொருத்து தேர்தல் மாவட்டங்களின் உறுப்பினர்களின் எண்ணிக்கையை முடிவு செய்யும்.
- 29 இடங்கள் தேசியப் பட்டியலில் இருந்து நியமிக்கப்படுவார்கள் (பகுதி 99A).[4]
Remove ads
தொகுதிச் சீரமைப்பு ஆணையம்
தேர்தல் மாவட்டச் சீரமைப்புக்காகவும், 36 மாகாண இருக்கைகளை நிர்ணயிப்பதற்காகவும் அரசியலமைப்பின் படி தொகுதிச் சீரமைப்பு ஆணையம் (Delimitation Commission) ஒன்று அமைக்கப்பட்டது.[2][5] தேர்தல் மாவட்டங்களின் எண்ணிக்கை 20 முதல் 25 வரை இருக்கலாம் என அரசியலமைப்பு வரையறுத்தது.[2]
1978 நவம்பர் 29 இல் தொகுதிச் சீரமைப்பு ஆணையம் நிறுவப்பட்டது. இதன் முடிவுகள் 1981 சனவரு 15 இல் வெளியிடப்பட்டன. இதன் படி இலங்கை 22 தேர்தல் மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டது. இந்த 22 தேர்தல் மாவட்டங்களில் 21 மாவட்டங்களின் பெயர்கள் அந்தந்த நிருவாக மாவட்டங்களின் பெயர்களை எடுத்துக் கொண்டன. நிருவாக மாவட்டங்களான மன்னார், முல்லைத்தீவு, வவுனியா புதிதாக அமைக்கப்பட்ட வன்னி தேர்தல் மாவட்டமாக இணைக்கப்பட்டன. 36 மாகாண இருக்கைகளும் பின்வருமாறு மாகாணவாரியாகப் பிரிக்கப்பட்டன:
- மத்திய மாகாணம் - கண்டி 1; மாத்தளை 1; நுவரெலியா 2.
- கிழக்கு - அம்பாறை 2; மட்டக்களப்பு 1; திருகோணமலை 1.
- வடக்கு - யாழ்ப்பாணம் 1, வன்னி 3.
- வடமத்திய - அநுராதபுரம் 2, பொலனறுவை 2.
- வடமேற்கு - குருனாகலை 2, புத்தளம் 2.
- சபரகமுவா - கேகாலை 2; இரத்தினபுரி 2.
- தெற்கு - காலி 1, மாத்தறை 1; அம்பாந்தோடை 2.
- ஊவா - பதுளை 2; மொனராகலை 2.
- மேற்கு - கொழும்பு 2; கம்பகா 1; களுத்துறை 1.
1984 பெப்ரவரியில் யாழ்ப்பாண மாவட்டத்தின் தெற்குப் பகுதியில் இருந்து கிளிநொச்சி மாவட்டம் என்ற புதிய நிருவாக மாவட்டம் அமைக்கப்பட்டது. இதனை அடுத்து இந்த இரு நிருவாக மாவட்டங்களும் யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் ஒருங்கிணைக்கப்பட்டது.
Remove ads
மாவட்ட அடிப்படையில் இட ஒதுக்கீடு
தற்போதைய உறுப்பினர்கள்
தேர்தல் மாவட்ட அடிப்படையில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை:
ஆண்டுகள் வாரியாக இட ஒதுக்கீடு
தேர்தல் மாவட்டங்களுக்கு ஆண்டுகள் வாரியாக ஒதுக்கப்பட்ட இடங்கள்.[10][11]
Remove ads
தேர்தல் மாவட்டங்களும், வாக்கெடுப்புப் பிரிவுகளும்
கொழும்புகம்பகா |
கண்டி
மாத்தளைநுவரெலியாதிருகோணமலை
|
காலி
மாத்தறை
அம்பாந்தோட்டை
|
களுத்துறையாழ்ப்பாணம்வன்னிமட்டக்களப்பு
திகாமடுல்லை |
குருநாகல்
புத்தளம்அனுராதபுரம்
பொலன்னறுவை
|
பதுளை
மொனராகலை
இரத்தினபுரி
கேகாலை |
Remove ads
இவற்றையும் பார்க்கவும்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads