யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டம் (Jaffna Electoral District) எனப்படுவது இலங்கையின் 1978 அரசியலமைப்பின் படி அமைக்கப்பட்ட 22 தேர்தல் மாவட்டங்களில் ஒன்றாகும். இலங்கை நாடாளுமன்றம், மாகாணசபைகள் போன்றவற்றுக்கு உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக உருவாக்கப்பட்ட ஒரு புவியியல் அலகு. இத்தேர்தல் மாவட்டம் வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய இரு நிருவாக மாவட்டங்களை மட்டும் உள்ளடக்கிய அலகாகும். தேர்தல் தவிர்ந்த ஏனைய நிர்வாக நடவடிக்கைகளில் தனித்தனி நிர்வாக மாவட்டங்களாகவே இவை இயங்குகின்றன.

Remove ads

தேர்தல் தொகுதிகள்

யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் அமைந்துள்ள தேர்தல் தொகுதிகள்:

  1. ஊர்காவற்துறை தேர்தல் தொகுதி
  2. வட்டுக்கோட்டை தேர்தல் தொகுதி
  3. காங்கேசன்துறை தேர்தல் தொகுதி
  4. மானிப்பாய் தேர்தல் தொகுதி
  5. கோப்பாய் தேர்தல் தொகுதி
  6. உடுப்பிட்டி தேர்தல் தொகுதி
  7. பருத்தித்துறை தேர்தல் தொகுதி
  8. சாவகச்சேரி தேர்தல் தொகுதி
  9. நல்லூர் தேர்தல் தொகுதி
  10. யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதி
  11. கிளிநொச்சி தேர்தல் தொகுதி

நாடாளுமன்றத் தேர்தல்கள்

2010 நாடாளுமன்றத் தேர்தல்

2010 ஏப்ரல் 8 ஆம் நாள் இடம்பெற்ற 2010 இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்துக்கான முடிவுகள்:[4]

மேலதிகத் தகவல்கள் கட்சி, தொகுதி வாரியாக முடிவுகள் ...

பின்வருவோர் தெரிவாயினர்:[5] டக்ளஸ் தேவானந்தா (ஈபிடிபி), 28,585 விருப்பு வாக்குகள்; மாவை சேனாதிராஜா (இதக), 20,501; சுரேஷ் பிரேமச்சந்திரன் (ஈபிஆர்எல்எஃப்), 16,425; ஏ. வினாயகமூர்த்தி (ததேகூ), 15,311; இ. சரவணபவன் (ததேகூ), 14,961; சில்வெஸ்டர் "உதயன்" அலண்டைன் (ஈபிடிபி), 13,128; எஸ். சிறீதரன் (ததேகூ), 10,057; முருகேசு சந்திரகுமார் (ஈபிடிபி), 8,105; விஜயகலா மகேசுவரன் (ஐதேக), 7,160;

2004 நாடாளுமன்றத் தேர்தல்

2004 ஏப்ரல் 2 ஆம் நாள் இடம்பெற்ற 2004 இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்துக்கான முடிவுகள்:[6]

மேலதிகத் தகவல்கள் கட்சி, தொகுதி வாரியாக முடிவுகள் ...

பின்வருவோர் தெரிவாயினர்:[7] செல்வராசா கஜேந்திரன் (ததேகூ), 112,077 விருப்பு வாக்குகள் (விவா); பத்மினி சிதம்பரநாதன் (ததேகூ), 68,240 விவா; கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (அஇதகா), 60,770 விவா; சுரேஷ் பிரேமச்சந்திரன் (ஈபிஆர்எல்எஃப்), 45,786 விவா; கே. சிவனேசன் (ததேகூ), 43,730 விவா; நடராஜா ரவிராஜ் (இதக), 42,965 விவா; எம். கே. சிவாஜிலிங்கம் (டெலோ), 42,193 விவா; மாவை சேனாதிராஜா (இதக), 38,783 விவா; டக்ளஸ் தேவானந்தா (ஈபிடிபி), 9,405 விவா.

2006 நவம்பர் 10 இல் நடராஜா ரவிராஜ் (இதக) படுகொலை செய்யப்பட்டார். இவருக்குப் பதிலாக நல்லதம்பி சிறீகாந்தா (டெலோ) 2006 நவம்பர் 30 பதவியேற்றார்..[8]

2008 மார்ச் 6 இல் கே. சிவநேசன் (ததேகூ) படுகொலை செய்யப்பட்டார். இவருக்குப் பதிலாக சொலமன் சிரில் (ததேகூ) 2008 ஏப்ரல் 9 இல் பதவியேற்றார்.[9]

2001 நாடாளுமன்றத் தேர்தல்

12வது நாடாளுமன்றத் தேர்தல் 2001 டிசம்பர் 5 இல் இடம்பெற்றது.[10][11]

மேலதிகத் தகவல்கள் கட்சி, தொகுதி வாரியாக முடிவுகள் ...

விருப்பு வாக்குகளின் அடிப்படையில் பின்வரும் 9 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.[12] வீரசிங்கம் ஆனந்தசங்கரி (தவிகூ), 36,217 வாக்குகள்; மாவை சேனாதிராஜா (தவிகூ-இதக), 33,831; கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (தவிகூ-தகா), 29,641; அ. விநாயகமூர்த்தி (தவிகூ-தகா), 19,472; நடராஜா ரவிராஜ் (தவிகூ-இதக), 19,263; ம. க. சிவாஜிலிங்கம் (தவிகூ-டெலோ), 17,859; தியாகராஜா மகேஸ்வரன் (ஐதேமு-ஐதேக), 11,598; டக்ளஸ் தேவானந்தா (ஈபிடிபி), 9,744; நடராசா மதனராஜா (ஈபிடிபி), 7,350.

Remove ads

அரசுத்தலைவர் தேர்தல்கள்

2015 அரசுத்தலைவர் தேர்தல்

7வது அரசுத்தலைவர் தேர்தல் 2015 சனவரி 8 அன்று நடைபெற்றது. யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் முடிவுகள்:[13]

மேலதிகத் தகவல்கள் வேட்பாளர், கட்சி ...

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads