தருமநகரா இராச்சியம்

ஜகார்த்தா நகரை மையமாகக் கொண்டு 4-ஆம் நூற்றாண்டில் உருவான அரசு From Wikipedia, the free encyclopedia

தருமநகரா இராச்சியம்
Remove ads

தருமநகரா இராச்சியம் (Tarumanagara; Taruma Kingdom) என்பது இந்தோனேசியா, மேற்கு ஜாவாவில் ஏறக்குறைய 1650 ஆண்டுகளுக்கு முன்பு, 400 - 500-ஆம் ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட ஒரு சுந்தானிய-இந்திய இராச்சியமாகும். இந்தோனேசியாவின் மூதாதைய இராச்சியங்களில் மூன்றாவது இராச்சியம் என அறியப்படும் தருமநகரா இராச்சியம், ஜகார்த்தா நகரை மையமாகக் கொண்டு 4-ஆம் நூற்றாண்டில் உருவான அரசு ஆகும்.[1]

விரைவான உண்மைகள் தருமநகரா இராச்சியம் Tarumanagara ᮒᮛᮥᮙᮔᮌᮛ, தலைநகரம் ...

இதனைத் தருமநகரம் அரசு; தருமநகரா அரசு (Tarumanagara Kingdom); அல்லது தருமா அரசு (Taruma Kingdom); அல்லது தருமா (Taruma) என்றும் அழைப்பது உண்டு. இந்த அரசு மேற்கு ஜாவாவை 320 ஆண்டுகள் ஆட்சி செய்து உள்ளது.

Remove ads

பொது

Thumb
பூர்ணவர்மனின் 2022-ஆம் ஆண்டு வரைபடம்

தர்மநகரா அரசு தோன்றுவதற்கு முன்பாக வேறு இரண்டு அரசுகள், இந்தோனேசியா ஜாவாவில் தோன்றி உள்ளன. முதன்முதலாகத் தோன்றிய அரசு சாலகநகரா இராச்சியம் (Salakanagara Kingdom) (கி.பி. 130 - கி.பி. 362).

சாலகநகரா இராச்சியம்தான் இந்தோனேசியாவில் தோன்றிய முதலாவது இந்தியமய அரசு ஆகும். மேற்கு ஜாவாவில் ஆட்சி புரிந்த இந்த இராச்சியம், ஒரு புராண இந்திய இராச்சியம் எனவும் வகைப்படுத்தப் படுகிறது.

அடுத்து இரண்டாவதாகத் தோன்றியது போர்னியோ, கிழக்கு கலிமந்தான் காடுகளில் தோன்றிய கூத்தாய் இராச்சியம் (Kutai Kingdom) ஆகும். இந்த இராச்சியம், 399-ஆம் ஆண்டு தொடங்கி 1635-ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்தது. 1300-ஆம் ஆண்டு வாக்கில் கூத்தாய் இராச்சியம், இசுலாமிய அரசாக மாற்றம் கண்டது.[2][3]

ஜெயசிங்கவர்மன்

தர்மநகரா பேரரசை தோற்றுவித்தவர் மகரிஷி ராஜாதி ராஜகுரு ஜெயசிங்கவர்மன் (Maharshi Rajadirajaguru Jayasingawarman).[4] இந்தோனேசிய வரலாற்றுக் காலச் சுவடு நுசாந்தாராவில் (Nusantara) சொல்லப்படுகிறது. இந்த நூலின் மற்றொரு பெயர் புசுதாகா இராச்சிய பூமி நுசாந்தரா (Pustaka Rajyarajya i Bhumi Nusantara). 17-ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட நூல்.

மகரிஷி ராஜாதி ராஜகுரு ஜெயசிங்கவர்மனின் வரலாறு, இந்தியாவின் குப்த பேரரசு (Gupta Empire) காலத்தில் தொடங்குகிறது. இந்தியத் துணைக் கண்டத்தின் பெரும் பகுதிகளை ஆட்சி செய்த மாபெரும் பேரரசுகளில் குப்த பேரரசும் ஒன்றாகும். குப்த பேரரசின் ஆட்சிக் காலம்: 320 – 551.[5]

Remove ads

தோற்றம்

குப்த பேரரசர்கள்

Thumb
இந்தோனேசியா, தருமநகர மாநிலத்தின் தற்போதைய சின்னம் (2010)

குப்த பேரரசர்களில் மிகவும் புகழ் பெற்றவர்கள் முதலாம் சந்திரகுப்தர்; சமுத்திரகுப்தர்; இரண்டாம் சந்திரகுப்தர்; முதலாம் குமாரகுப்தன்; மற்றும் இசுகந்தகுப்தர் ஆவார்கள். இவர்களில் சமுத்திரகுப்தர் என்பவர் குப்த பேரரசை 335 முதல் 375 வரையில் 40 ஆண்டுகள் ஆட்சி செய்தவர். குப்த பேரரசைப் பெரிய அளவில் விரிவு படுத்தியவர்.[6]

சமுத்திர குப்தர் 350-ஆம் ஆண்டுகளில் இந்தியாவின் ஆந்திர பிரதேசப் பகுதியில் இருந்த சலங்கயானா (Salankayana) அரசின் மீது படை எடுத்தார். சலங்கயானா அரசு கிருஷ்ணா கோதாவரி ஆற்றுப் பகுதிகளில் இருந்த அரசு. அதன் தலைநகரம் வேங்கி. இப்போது மேற்கு கோதாவரியில் உள்ள ஏலூரு .[7]

Remove ads

சலங்கயானா அரசு

Thumb
1900-இல் கண்டுபிடிக்கப்பட்ட சியாருதுன் கல்வெட்டு

இந்தச் சலங்கயானா அரசு, அப்போது தமிழ்நாட்டை ஆட்சி செய்த பல்லவர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. அந்தப் படை எடுப்பில் சலங்கயானா அரசு சரிந்தது. சலங்கயானா அரசின் மீது படையெடுப்பு நடந்த போது அசுதிவர்மன் என்பவர் (Hastivarman of Vengi) அரசராக இருந்தார்.[8]

அந்தச் சலங்கையனா அரசில் இருந்து ஜாவா தீவிற்கு வந்தவர்தான் ஜெயசிங்கவர்மன். சலங்கயானா படையெடுப்பிற்குப் பின்னர் ஜெயசிங்கவர்மன், மேற்கு ஜாவாவில் குடியேறினார். அதற்கு முன்னர் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு வங்காளத்திலும் இலங்கையிலும் தங்கி இருந்தார்.[7][4]

தர்மலோகபால தேவவர்மன்

ஜெயசிங்கவர்மன், ஜாவா தீவிற்கு வந்த போது, அங்கு சாலகநகரா இராச்சியம் எனும் ஓர் அரசு ஆட்சி செய்தது. சாலகநகரா இராச்சியம் அரசு ஒரு சுந்தானிய அரசாகும். சாலகநகர அரசுதான் இந்தோனேசியாவில் தோன்றிய முதலாவது இந்தியமய அரசு. இதன் தலைநகரத்தின் பெயர் ராஜாதாபுரம் (Rajatapura).[4][9][10]

ஜாவாவிற்குச் சென்ற முதல் பல்லவ வணிகத் தூதர் பிரபு தர்மலோகபால தேவவர்மன் கங்கா ரக்சக கோபுரா சாகரன் (Prabu Dharmalokapala Dewawarman Gangga Raksagapura Sagara). அவர் தான் இந்தோனேசியாவில் முதல் பல்லவ அரசான சாலகநகரா இராச்சியத்தை உருவாக்கியவர். இவரின் அசல் பெயர் தேவவர்மன் (Dewawarman). சாலகநகரா இராச்சியம் 130-ஆம் ஆண்டில் உருவாக்கப் பட்டது.[4]

எட்டாம் தேவவர்மன்

Thumb
1883-இல் ஜகார்த்தாவில் கண்டுபிடிக்கப்பட்ட தருமநகரா துர்கை அம்மன் சிலை.

அந்தக் கட்டத்தில் சாலகநகரா அரசை எட்டாம் தேவவர்மன் (King Dewawarman VIII of Salakanagara) என்பவர் ஆட்சி செய்து வந்தார். அவருக்கு ஒரு மகள் இருந்தார். அவர் அந்த நாட்டின் இளவரசி. அந்த இளவரசியைத் தான் ஜெயசிங்கவர்மன் திருமணம் செய்து கொண்டார்; எட்டாம் தேவவர்மனின் மருமகன் ஆனார்.[4]

எட்டாம் தேவவர்மனின் மருமகன் ஜெயசிங்கவர்மனுக்காக ஒரு புதிய அரசு தோற்றுவிக்கப்பட்டது. அதன் பெயர் தர்மநகரா அரசு. அப்போதைய கட்டத்தில் தர்மநகரா அரசு ஒரு சிறிய அரசு. ஜெயசிங்கவர்மன் ஆட்சியின் போது, சாலகநகரா இராச்சியத்தின் ஆட்சி மையம் சாலகநகரத்தில் இருந்து தர்மநகரா அரசிற்கு சிறிது சிறிதாக மாற்றப் பட்டது.[11] சாலகநகரா அரசாங்கத்தின் மையம் தருமநகராவிற்கு மாறிய பிறகு, சாலகநகரா அரசு ஒரு மாநில அரசாக மாறியது.

ஜாவா எனும் யுவதீபம்

கிளாடியஸ் டோலமி (Claudius Ptolemy) எனும் கிரேக்க வரலாற்று ஆசிரியர் எழுதிய ஜியோகிராபிகா அய்பெஜெசிஸ் (Geographike Hyphegesis) எனும் நூலில் தர்மநகரா அரசைப் பற்றி குறிப்பிட்டு உள்ளார். ஜாவா எனும் யுவதீபத்தில் (Yawadwipa), ஆர்கைர் (Argyre) எனும் பெயரில் ஒரு பெரிய நகரம் இருக்கிறது. சாலகநகரா இராச்சியத்தின் தலைநகரமாக விளங்குகிறது என்று எழுதி இருக்கிறார்.[12]

  • சாலகநகரா இராச்சியத்தின் ஆட்சிக்காலம்: 0130 - 0362
  • டோலமி எழுதிய நூலின் காலம்: 0160
  • சமுத்திர குப்தர் ஆட்சிக் காலம்: 0335 - 0375
  • தர்மநகாரா அரசு உருவான காலம்: 0358
Remove ads

கல்வெட்டுகள்

Thumb
ஜகார்த்தா, தருமநகரா பல்கலைக்கழகம் (2010)

5-ஆம் நூற்றாண்டின் தர்மநகரா அரசின் ஆட்சியாளர் பூர்ணவர்மன். தர்மநகரா அரசை ஆட்சி செய்தவர்களில் மிகவும் பிரபலமானவர். இவர் ஜாவாவின் தொடக்கக் கால கல்வெட்டுகளை உருவாக்கியவர் ஆவார். அந்தக் கல்வெட்டுகள் கிபி 358-ஆம் ஆண்டு கல்வெட்டுகளாக வரையறுக்கப்பட்டுள்ளதுன.

இவர்தான் தர்மநகரா எனும் ஒரு சின்ன அரசை ஒரு பெரிய இராச்சியமாக மாற்றியவர் ஆவார்.

ஏழு கல்வெட்டுகள்

தர்மநகரா இராச்சியத்துடன் தொடர்புடைய ஏழு கல்வெட்டுகள் மேற்கு ஜாவா, போகோர் (Bogor) மற்றும் ஜகார்த்தாவிற்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. அவற்றில் போகோர் நகரத்திற்கு அருகில் ஐந்து கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப் பட்டு உள்ளன.[13]:36

இதுவரையிலும் இந்தோனேசியாவில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுகள் அனைத்தும் அந்த நாட்டின் அரும்பொருட்கள் என இந்தோனேசிய அரசாங்கம் அவற்றைப் பாதுகாத்து வருகிறது.

காக்கி கிரி நியோரேங் கல்வெட்டு

தர்மநகரா இராச்சியத்தின் மன்னன் பூர்ணவர்மன் காலத்திய ஒரு கல்வெட்டு 1900-ஆம் ஆண்டுகளில் கிடைத்தது. அதன் பெயர் பத்து தாபாக் காக்கி கிரி நியோரேங் கல்வெட்டு (Batu Tapak Kaki Kiri Nyoreang inscription). அந்தக் கல்வெட்டு, சுந்தானிய மொழியில் பல்லவ எழுத்து முறையில் எழுதப்பட்டு உள்ளது.

தர்மநகரா இராச்சியத்தின் கல்வெட்டுகள், மலாய் தீவுக்கூட்டத்தின் மேற்குப் பகுதியில் இந்து மதம் தோன்றியதற்கான தொடக்கப் பதிவுகளாகும்[14]:53

Remove ads

பூர்ணவர்மன்

Thumb
பூர்ணவர்மன் காலத்து கல்வெட்டு.

தர்மநகரா இராச்சியம், இப்போதைய சுந்தா எனும் நிலைப் பகுதியைச் சேர்ந்தது. அந்த தர்மநகரா அரசைத் தோற்றுவித்தவர் ஜெயசிங்கவர்மன். இவர் 382-ஆம் ஆண்டில் காலமானார். அவருடைய உடல் மேற்கு ஜாவாவில் உள்ள காளி கோமதி ஆற்றின் கரையில் அடக்கம் செய்யப்பட்டது. இந்த இடம் இப்போது பெக்காசி (Bekasi) என்று அழைக்கப் படுகிறது.

அதன் பின்னர் அவருடைய மகன் தர்மயவர்மன் (Dharmayawarman) 382-ஆம் ஆண்டு தொடங்கி 395-ஆம் ஆண்டு வரை தர்மநகரா இராச்சியத்தை ஆட்சி செய்தார். இவர் 13 ஆண்டுகள் மட்டுமே ஆட்சி செய்தார். இவருடைய அஸ்தி சந்திரபாகா (Chandrabaga) ஆற்றின் கரையில் கரைக்கப்பட்டது.

பூர்வலிங்க நகரம்

தர்மநகர இராச்சியத்தின் மன்னர்களில் மூன்றாவது மன்னர் பூர்ணவர்மன். பூர்ணவர்மன் ஆட்சியின் கீழ், தருமநகர அரசு, 48 சிறிய அரசுகளைத் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது. சாலகநகரா எனும் இராசதபுராவில் (Rajatapura) இருந்து, பூர்வலிங்கம் (Purbalingga)[15] வரை பூர்ணவர்மனின் ஆளுமை நீண்டு இருந்தது.

பூர்வலிங்கா நகரம் (Purbalingga) என்பது தற்போதைய மத்திய ஜாவாவில் உள்ள ஒரு நகரமாகும். இன்றும் அதே பெயரில்தான் உள்ளது.

Remove ads

தருமநகர அரசர்கள்

Thumb
5-ஆம் நூற்றாண்டில் ஜகார்த்தா பத்து ஜெயா பகுதியில் கட்டப்பட்ட தருமநகரா ஆலயங்கள்
  1. ஜெயசிங்கவர்மன் - (Jayasingawarman) - 358 – 382
  2. தர்மயவர்மன் - (Dharmayawarman) - 382 – 395
  3. பூர்ணவர்மன் - (Purnawarman) - 395 – 434
  4. விசுணுவர்மன் - (Wisnuwarman) - 434 – 455
  5. இந்திரவர்மன் - (Indrawarman) - 455 – 515
  6. கந்தரவர்மன் - (Candrawarman) - 515 – 535
  7. சூர்யவர்மன் - (Suryawarman) - 535 - 561. மீண்டும் ஒரு புதிய தலைநகரம் நிறுவப்பட்டது. பழைய தலைநகரான சுந்தரபுரத்தை விட்டு வெளியேறினார். தற்போதைய கருட் (Garut) அருகே கெந்தானில் ஒரு புதிய குடியேற்றம் நிறுவப்பட்டது.
  8. கீர்த்தவர்மன் - (Kertawarman) - 561 - 628. தர்மநகராவின் ஒரு காலனி அரசாக காலு இராச்சியம் 612-ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
  9. லிங்கவர்மன் - (Linggawarman) - 628 - 650. லிங்கவர்மனின் இரண்டாவது மகள் இளவரசி சோப காஞ்சனாவுக்கும் (Princess Sobakancana); ஸ்ரீ விஜய பேரரசின் அரசர் செரி ஜெயனாசாவுக்கும் திருமணம்.
  10. தருசுபாவா - (Tarusbawa) - 670 - 690. இவர் காலத்தில் தர்மநகரா இராச்சியம் இரண்டாகப் பிரிக்கப் பட்டது; சுந்தா இராச்சியம் (Sunda Kingdom); மற்றும் காலு இராச்சியம் (Galuh Kingdom); தர்மநகரா இராச்சியத்தின் மீது ஸ்ரீ விஜய பேரரசின் படையெடுப்பு நடந்தது.
Remove ads

தருமநகரா பல்கலைக்கழகம்

காட்சியகம்

  • தருமநகரா இராச்சிய காட்சிப் படங்கள்

மேலும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads