1470கள்
பத்தாண்டு From Wikipedia, the free encyclopedia
Remove ads
1470கள் என்றழைக்கப்படும் பத்தாண்டு காலம் 1470ஆம் ஆண்டு துவங்கி 1479-இல் முடிவடைந்தது.
1470
- மார்ச் 12 – ரோசாப்பூப் போர்கள்: இங்கிலாந்து இராச்சியத்தில் யோர்க் அரசர்கள் லான்காஸ்டர்களை வென்றனர்.
- மே 15 – மூன்று தடவைகள் சுவீடனின் மன்னராகப் பதவியில் இருந்த எட்டாம் சார்லசு இறந்தார்.
- மே 16 - ஸ்டென் ஸ்டூர் தன்னை சுவீடனின் மன்னராக அறிவித்தார். சூன் 1 இல் இவர் மன்னராக ஏற்றுக் கொள்ளப்பட்டார்.
- செப்டம்பர் 13 – இங்கிலாந்தின் மன்னர் நான்காம் எட்வர்டின் முன்னாள் சகாவான வாரிக் குறுநில மன்னர் ரிச்சார்ட் நெவில் தலைமையிலான கிளர்ச்சியை அடுத்து, மன்னர் தனது மைத்துனர் பர்கண்டியின் சார்லசிடம் உதவி கேட்க வேண்டி வந்தது.
- அக்டோபர் 3 – இலண்டன் கோபுரத்தில் சிறை வைக்கப்பட்டிருந்த இங்கிலாந்தின் ஆறாம் என்றி அங்கிருந்து விடுவிக்கப்பட்டு, மன்னராக்கப்பட்டார்.
- பகாங்கு சுல்தானகம் உருவாக்கப்பட்டது (இன்றைய மலேசியாவில்).
- யொகான் ஹெயின்லின் அச்சியந்திரத்தை பிரான்சில் அறிமுகப்படுத்தி, தனது முதலாவது நூலை இதே ஆண்டில் வெளியிட்டார்.
- இந்த ஆண்டுக்கும் 1700 இற்கும் இடையில் சுவிட்சர்லாந்து கூட்டமைப்பில் 8,888 சூனியக் காரிகள் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 5,417 பேருக்கு மரண தண்டனைநிறைவேற்றப்பட்டது.
Remove ads
பிறப்புகள்
1471
- மே 21 – ஆல்பிரெஃக்ட் டியுரே, செருமானிய ஓவியர், கணிதவியலாளர் (இ. 1528)
- பெப்ரவரி 16 – கிருஷ்ணதேவராயன், விஜயநகரப் பேரரசர் (இ. 1529)
1472
- தயன் கான், வடக்கு யுவான் அரசமரபின் ஒரு கான் (இ. 1517)
- பலராம தாசன், 15 ஆம் நூற்றாண்டு ஒடியா கவிஞர் (இ. 1556)
1473
- பெப்ரவரி 19 – நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ், போலந்து வானியலாளர், கணிதவியலாளர் (இ. 1543)
- தாமஸ் வோல்சி, ஆங்கிலேய உயராட்சித் தலைவர், கருதினால் (இ. 1530)
1475
- மார்ச் 6 – மைக்கலாஞ்சலோ, இத்தாலிய சிற்பி (இ. 1564)
1476
1477
- கியார்கியோன், இத்தாலிய ஓவியர் (இ. 1510)
1478
- பெப்ரவரி 7 – தாமஸ் மோர், ஆங்கிலேய அரசியல்வாதி, மனிதநேயவாதி (இ. 1535)
- சூர்தாசர், இந்திய ஞானி, புலவர்
1479
- மே 5 – குரு அமர் தாஸ், மூன்றாவது சீக்கிய குரு (இ. 1574)
- வல்லபாச்சார்யா, இந்து மெய்யியலாளர் (இ. 1531)
Remove ads
இறப்புகள்
1470
- இராமாநந்தர் - இந்திய வைணவப் புலவர்
1476
- சூலை 6 – இரெகியோமோண்டேனசு, செருமானிய வானியலாளர் (பி. 1436)
1478
- முதலாம் திம்மராச உடையார், மைசூர் மன்னர்
1479
- மன்டூல் கான், வடக்கு யுவான் அரசமரபின் ஒரு கான் (பி. 1438)
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads