1535
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஆண்டு 1535 (MDXXXV) பழைய யூலியன் நாட்காட்டியில் வெள்ளிக்கிழமையில் துவங்கிய சாதாரண ஆண்டு ஆகும்.
Remove ads
நிகழ்வுகள்
- சனவரி 18 - பெருவின் லிமா நகரம் பிரான்சிஸ்கோ பிசாரோவினால் நிறுவப்பட்டது.
- மார்ச் 10 - பிரே தொமாசு பெர்லாங்கா கலாபகசுத் தீவுகளைக் கண்டுபிடித்தார்.
- மே 4 - முதலாவது ஆங்கிலேயக் கார்த்தூசிய மாவீரர்கள் இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றியின் உத்தரவில் தூக்கிலிடப்பட்டனர்.
- மே 19 - பிரெஞ்சு நாடுகாண் பயணி இழ்சாக் கார்ட்டியே வட அமெரிக்கா நோஒக்கிய தனது இரண்டாவது பயணத்தை மூன்று கப்பல்கள், 110 மாலுமிகளுடன் ஆரம்பித்தார்.
- சூன் 1 - தூனிசு நகர் மீதான தாக்குதலை புனித உரோமைப் பேரரசன் ஐந்தாம் சார்லசு ஆரம்பித்தான். உதுமானியரிடம் இருந்து இந்நகரம் கைப்பற்றப்பட்டு 30,000 பேர் வரையில் அங்கு படுகொலை செய்யப்பட்டனர்.
- சூன் 22 - இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றிக்கு விசுவாசமாக இருக்க மறுத்த கருதினால் ஜோன் பிசர் தூக்கிலிடப்பட்டார்.[1]
- சூலை 6 - உட்டோப்பியா நூலை எழுதியவரும், இங்கிலாந்தின் உயராட்சித் தலைவராகவும் இரிந்த சர் தாமஸ் மோர் தேசத்துரோகக் குற்றச்சாட்டுகளுக்காக தூக்கிலிடப்பட்டார்.[2]
- அக்டோபர் 2 - இழ்சாக் கார்ட்டியே செயிண்ட் லாரன்சு ஆற்றுப் பகுதியில் தீவு ஒன்றைக் கண்டுபிடித்தார். இது பின்னர் மொண்ட்ரியால் என அழைக்கப்பட்டது.
- அக்டோபர் 4 - முதலாவது ஆங்கில மொழி விவிலியம் ஆண்ட்வெர்ப்பில் அச்சிடப்பட்டது.
Remove ads
பிறப்புகள்
இறப்புகள்
- சூலை 6 - தாமஸ் மோர், ஆங்கிலேய அரசியல்வாதி (பி. 1478)
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads