1586
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஆண்டு 1586 (MDLXXXVI) கிரெகொரியின் நாட்காட்டியில் ஒரு புதன்கிழமையில் துவங்கிய ஒரு சாதாரண ஆண்டு ஆகும். பழைய 10-நாட்கள் பின்தங்கிய யூலியன் நாட்காட்டியில் இது சனிக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும். 1582 இற்குப் பின்னரும் உலகின் பல நாடுகளில் யூலியன் நாட்காட்டி 1929 ஆம் ஆண்டு வரை பயன்பாட்டில் இருந்தது.
Remove ads
நிகழ்வுகள்
- சூன் 16 – ஸ்காட்லாந்தின் முதலாம் மேரி தனது வாரிசாக எசுப்பானியாவின் இரண்டாம் பிலிப்பு மன்னரை அறிவித்தார்.
- செப்டம்பர் 20–21 – இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத்தைக் கொலை செய்து மேரி ஸ்டுவர்டை அரசியாக்கத் திட்டமிட்டிருந்த 14 பேர் இலண்டனில் தூக்கிலிடப்பட்டனர்.
- பிளம்மியர் கணிதவியலாளர் சிமொன் இசுட்டெவின் வெவ்வேறு திணிவுடைய இரு பொருட்கள் ஒரே வேகத்தில் வீழ்கின்றன என்பதை செய்து காண்பித்தார்.
- புளோரிடாவின் செயின்ட் ஆகத்தீன் நகர், டொமினிக்கன் குடியரசின் சான்டோ டொமிங்கோ நகரங்கள் ஆங்கிலேயக் கடற்படைத்தலைவர் பிரான்சிஸ் டிரேக்கினால் தீக்கிரையாக்கப்பட்டன.
- முதலாவது ஆங்கிலேயக் கடற்படைக் கப்பல் வான்கார்டு இங்கிலாந்தில் வெள்ளோட்டம் விடப்பட்டது.
- ஆங்கிலேயர் தோமசு கவென்டிசு உலகைச் சுற்றுப் பயணத்தை ஆரம்பித்தார்.
- என்றீக்கே என்றீக்கசு அடியார் வரலாறு என்ற நூலை வெளியிட்டார்.
Remove ads
பிறப்புகள்
- ஏப்ரல் 20 – லீமா நகர ரோஸ், எசுப்பானியப் புனிதர் (இ. 1617)
இறப்புகள்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads