அர. சம்பகலட்சுமி

இந்திய வரலாற்றாளர், சமூக அறிவியலாளர் (1932–2024) From Wikipedia, the free encyclopedia

அர. சம்பகலட்சுமி
Remove ads

அரங்காச்சாரி சம்பகலட்சுமி (Rangachari Champakalakshmi[a], 1932-29 சனவரி 2024) என்பவர் இந்திய வரலாற்றாசிரியர் மற்றும் சமூக அறிவியலாளர் ஆவார். இவர் துவக்க கால மற்றும் நவீன காலத்திற்கு முந்தைய தென்னிந்திய வரலாறு ஆய்வுப் பணிகளில் கவனம் செலுத்தினார். இவர் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக (ஜே. என். யூ) வரலாற்று ஆய்வு மையத்தில் பேராசிரியராகப் பணியாற்றினார். இதுதவிர, சம்பகலட்சுமி இந்திய வரலாற்றுப் பேராயத்தின் தலைவராக இருந்தார்.

விரைவான உண்மைகள் அர. சம்பகலட்சுமிR. Champakalakshmi, பிறப்பு ...
Remove ads

துவக்ககால வாழ்க்கை

சாம்பகலட்சுமி 1932 இல் பட்டம்மாள், ஆர். அரங்காச்சாரி இணையருக்கு மகளாக இன்றைய தமிழ்நாட்டின் திருவரங்கத்தில் பிறந்தார்.[1][2][3] இவரது தந்தை ஒரு வழக்கறிஞராவார்.[4][5] சம்பகலட்சுமி சென்னை பல்கலைக்கழகத்தில் வரலாற்றில் முனைவர் பட்டம் பெற்றார். அங்கு வரலாற்றாசிரியர் தே. வெ. மகாலிங்கத்தை, நெறியாளராகக் கொண்டு இவர் வைணவ சமயம் குறித்து முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டார். பிற்காலத்தில் இவர் இது தொடர்பாக தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டார்.[6]

Remove ads

தொழில்

சென்னை பல்கலைக்கழகத்தில் பயின்ற சம்பகலட்சுமி அங்கேயே கற்பிக்கும் பணியைத் துவங்கினார். இவரிடம் ஏ. சுப்பராயுலு, ப. சண்முகம், நடன காசிநாதன் ஆகியோர் பயிற்சி பெற்றனர்.[7] சென்னை பல்கலைக்கழகத்தில் 1959 முதல் 1972 வரை கற்பித்தார். அதன் பிறகு இவர் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் வரலாற்று ஆய்வு மையத்தில் பண்டைய வரலாற்றின் இணை பேராசிரியராக பணிக்குச் சேர்ந்தார். 1997 இல் ஓய்வு பெறும் வரை, அடுத்த 25 ஆண்டுகளுக்கு இவர் தொடர்ந்து அங்கே கற்பித்தார்.[6] பண்டைய தென்னிந்தியாவில் சமயம், குறிப்பாக சமணம் மற்றும் வைணவம் ஆகியவற்றைப் குறித்து தனது ஆய்வைத் தொடங்கினார். பின்னர் இடைக்காலத்திற்கு முந்தைய தென்னிந்தியாவில் வணிகம், பொருளாதாரம், நகர்மயத்தின் தோற்றம் ஆகியவற்றை உள்ளடக்கியதாக தனது ஆராய்ச்சிகளை விரிவுபடுத்தினார். இவரது சில ஆய்வுகள் வைஷ்ணவ ஐகானோகிராபி (1981) என்ற நூலாக வெளியானது.[8] இந்த ஆய்வுப் பணிகளின் ஒரு பகுதியாக, இவர் சங்க இலக்கியம், ஆழ்வார்களின் பக்தி இயக்கம், ஆகம மரபுகள் போன்றவற்றில் உள்ள சான்றுகளை ஒருங்கிணைத்து, வைணவ சமய நம்பிக்கையின் தனித்துவமான இடைக்கால உருவகத்தை வெளிக்கொணர விரிவான களப்பணிகளுடன் அதை ஒன்றிணைத்தார்.

ஆரம்பகால மற்றும் இடைக்கால தென்னிந்தியாவின் சமூக, பண்பாடு, பொருளாதார வரலாற்றை ஆராயும் இவரது பிற்கால படைப்புகளான வணிகம், கருத்தியல், நகரமம் (1996), சமயம், பாரம்பரியம், கருத்தியல் (2011) வெளியாயின.[6][9] இதில் பின்காலனித்துவத்திற்கு முந்தைய தென்னிந்தியாவில் சமூக மூலதனத்திற்கு சமய மரபுகளின் பங்களிப்பு பற்றி விவாதிக்கும் கட்டுரைகளின் தொகுப்பாக அமைந்தது.[9][10] காவிரி வடிநிலப் பகுதியில் உள்ள கும்பகோணம், தஞ்சாவூர் மற்றும் பலாற்றுப் பகுதியில் உள்ள காஞ்சிபுரம் உள்ளிட்ட நகர்ப்புற மையங்கள் பல்லவர்கள் மற்றும் சோழர்கள் ஆட்சியின் கீழ் வளர்ச்சிய அடைந்ததைப் பற்றி எழுதினார்.[11]

ஜே. என். யுவில் பேராசிரியராகப் பணியாற்றியதோடு மட்டுமல்லாமல், சம்பகலட்சுமி இந்திய வரலாற்று பேராயத்தின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.[1][12] கேசவன் வேலுதாட், இராஜன் குருக்கள், மனு வி. தேவதேவன், கே. என். கணேஷ் [எம். எல்.] உட்பட பல பிரபலமான மாணவர்களுக்கு இவர் ஜேஎன்யுவில் கற்பித்தார்.[6] ஜவஹர்லால் நேருவின் டிஸ்கவரி ஆப் இந்தியாவை அடிப்படையாகக் கொண்டு 1980களில் ஒளிபரப்பான இந்தியத் தொலைக்காட்சித் தொடரான ​​பாரத் ஏக் கோஜ் தொடரின் எழுத்தாக்கத்தின் ஆலோசகராக இருந்தார். செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் நிதிநல்கையில் கல்வெட்டு அகரமுதலி ஒன்று உருவாக்கப்பட்டது. அந்தப் பணிக்கு சம்பகலட்சுமி தலைமை தாங்கினார்.[7] சம்பகலட்சுமியின் பல படைப்புகள் சென்னையில் உள்ள ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் வைக்கப்பட்டுள்ளன.[13]

Remove ads

தனிப்பட்ட வாழ்க்கை

சம்பகலட்சுமியின் சகோதரி ஆர். ஜெயலட்சுமி ஒரு கருநாடக இசைக்கலைஞர் மற்றும் ராதா ஜெயலட்சுமி இரட்டையர்களில் ஒருவரான ராதா இவரது உறவினர். இவரது மற்றொரு சகோதரியான ஆர். வனஜா புதுதில்லி இந்திய தேசிய அருங்காட்சியகத்தில் நாணயவியல் நிபுணராக இருந்தார்.[14] சம்பகலட்சுமி 2024 சனவரி 28 அன்று இறந்தார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள்

புத்தகங்களும் தனிவரைவுநூல்களும்

பிற படைப்புகள்

Remove ads

குறிப்புகள்

  1. Though many of the bibliographic sources indicate Champakalakshmi's first name as Radha, her first name is most likely Rangachari (alternately spelled as Rangachary), a தந்தைவழிப் பெயர் reference to her father's name.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads