ஆதம்பாக்கம்

சென்னையின் புறநகர்ப் பகுதி From Wikipedia, the free encyclopedia

ஆதம்பாக்கம்map
Remove ads

ஆதம்பாக்கம் (Adambakkam) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், சென்னையின் புறநகர்ப் பகுதிகளுள் ஒன்றாகும். இது சென்னையின் தென் பகுதியில் அமைந்துள்ள, முதன்மையான குடியிருப்புப் பகுதியாகும். ஆதம்பாக்கம் சென்னை மாவட்டமான, வேளச்சேரி வட்டம் மற்றும் ஆலந்தூர் வட்டத்தின் கீழ் வருகிறது. ஆதம்பாக்கத்தின் வடமேற்கில் ஆலந்தூர், மேற்கில் நங்கநல்லூர், தெற்கில் மடிப்பாக்கம், கிழக்கில் வேளச்சேரி மற்றும் வடக்கில் கிண்டி போன்ற பகுதிகளால் சூழப்பட்டுள்ளது. முன்னதாக, ஆதம்பாக்கத்தின் ஒரு பகுதி சென்னை மாநகராட்சியின் நேரடி நிர்வாகத்தின் கீழ் இருந்தது. அக்டோபர் 2011 முதல், முழுப் பகுதியும் சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது.

விரைவான உண்மைகள் ஆதம்பாக்கம், நாடு ...
Remove ads

புவியியல்

இவ்வூரின் அமைவிடம் 12.99°N 80.20°E / 12.99; 80.20 ஆகும்.[3] இது கடல் மட்டத்தில் இருந்து சராசரியாக 7 மீட்டர் (23 அடி) உயரத்தில் உள்ளது. ஜீவன் நகரில் அமைந்துள்ள ஆதம்பாக்கம் ஏரி மற்றும் கக்கன் நகரில் அமைந்துள்ள வேளச்சேரி ஏரி ஆகியவை இப்பகுதியில் உள்ள இரண்டு ஏரிகள் ஆகும்.

அமைவிடம்

சென்னை மத்திய தொடருந்து நிலையத்திலிருந்து 17 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னை எழும்பூர் தொடருந்து நிலையத்திலிருந்து 14 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னை பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து 13 கிலோமீட்டர் தொலைவிலும், அடையாறு அமைந்துள்ளது.

சுற்றுப் பகுதிகள்

ஆதம்பாக்கத்தைச் சுற்றி அமைந்துள்ள மற்ற பகுதிகள், கிண்டி, நங்கநல்லூர், வாணுவம்பேட்டை, பழவந்தாங்கல் மற்றும் ஆலந்தூர் ஆகும். ஆதம்பாக்கம், பரங்கி மலை தொடருந்து நிலையத்தை ஒட்டி அமைந்துள்ளது. வேளச்சேரி பகுதிக்கு அருகில் உள்ள பகுதி புனித தோமையர் மலை ரயில் நிலையத்திற்கு அருகாமையில் இருக்கிறது. இதன் சுற்று வாட்டர பகுதிகளாக புனித தோமையர் மலை, கிண்டி, வேளச்சேரி, புழுதிவாக்கம், உள்ளகரம், நங்கைநல்லூர் மற்றும் பழவந்தாங்கல் பகுதிகள் அமைந்துள்ளன. தொடருந்து மார்க்கமாகவும், பேருந்து மார்க்கமாகவும் பயணிக்க ஏதுவான பகுதி. நந்தீஸ்வரர் உட்பட புகழ் பெற்ற கோயில்கள், வங்கிகள், வணிக நிறுவனங்கள், சிறு தொழில் நிறுவனங்கள் மற்றும் பள்ளிகள் இப்பகுதியில் உள்ளன.

நெடுஞ்சாலைகள்

தெற்கு நோக்கி செல்லும் தேசிய நெடுஞ்சாலை ஆதம்பக்கத்தை ஒட்டியே அமைந்துள்ளது.

பள்ளிக்கூடங்கள்

ஆதம்பாக்கம் பகுதியில் கீழ்கண்ட பள்ளிக்கூடங்கள் உள்ளன:

  • தூய மார்க்ஸ் நடுப்பள்ளி
  • ஜி. கே. ஷெட்டி இந்து வித்யாலயா மெட்ரிக் பள்ளி
  • வியாச வித்யாலயா மெட்ரிக் மற்றும் உயர்நிலைப் பள்ளி
  • டி. ஏ. வி. பள்ளி
  • தூய. பிரித்தொவின் அகாடமி
  • இந்திரா காந்தி மெட்ரிக் பள்ளி
  • லிட்டில் பிளவர் பள்ளி
  • யூனிட்டி பொதுப் பள்ளி
  • புதிய பிரின்ஸ் மெட்ரிக் பள்ளி
  • ரோசரி மெட்ரிக் பள்ளி

மருத்துவமனைகள்

ஆதம்பாக்கம் பகுதியில் கீழ்கண்ட மருத்துவமனைகள் உள்ளன

  • ஜெயலக்ஷ்மி அரசு மருத்துவமனை
  • எஸ். பி. மருத்துவமனை
  • ஜி. ஆர். மருத்துவமனை
  • பொன்மாளிகை மருத்துவமனை

கடைவீதி

Thumb
கருணீகர் தெரு கடைவீதி

ஆதம்பாக்கம் பகுதியில் உள்ள கருணீகர் தெரு உள்ளபடி அப்பகுதியின் பெரிய கடைவீதியாக கருதப்படுகிறது.

வழிபாட்டுத் தலங்கள்

கோயில்கள்

Thumb
ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயில், பிருந்தாவன் நகர்.
  • நந்தீஸ்வரர் கோவில்
  • ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயில், பிருந்தாவன் நகர்
  • நாகமுத்து மாரியம்மன் கோவில்
  • புவனேஸ்வரி அம்மன் கோவில்
  • பழாண்டி அம்மன் கோவில்
  • ஐயப்பன் கோவில்
  • பாப்பாத்தி கருமாரியம்மன் ஆலயம் டாக்டர் அம்பேத்கர் நகர் (குயில் குப்பம்)

தேவாலயங்கள்

Thumb
புனித மார்க் கத்தோலிக்க தேவாலயம் ஆடம்பாக்கத்தில் உள்ள ஒரு முக்கியமான கத்தோலிக்க தேவாலயம் ஆகும்.
  • புனித மார்க் தேவாலயம்

பள்ளிவாசல்கள்

  • மஸ்ஜித் தபாரக்
  • மஸ்ஜித் முபாரக்
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads