காஷ்மீர் கோட்டம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
காஷ்மீர் கோட்டம் (Kashmir division), இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் ஒன்றியப்பகுதியின் இரண்டு நிர்வாகக் கோட்டங்களில் ஒன்றாகும். இக்கோட்டத்தின் தலைமையிடம் சிறிநகர் ஆகும். இக்கோட்டம் காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ளது. இக்கோட்டத்தின் தெற்கில் ஜம்மு கோட்டம், மேற்கிலும், வடக்கிலும் ஆசாத் காஷ்மீர் & வடக்கு நிலங்கள் உள்ளிட்ட பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளும், கிழக்கில் லடாக் ஒன்றியப் பகுதியும் எல்லைகளாக உள்ளது. காஷ்மீர் கோட்டத்தின் பிற முக்கிய நகரங்கள் அனந்தநாக், பாரமுல்லா, சோப்பூர் மற்றும் குல்காம் ஆகும்.
காஷ்மீர் கோட்டம் புவியியல் ரீதியாக தெற்கு காஷ்மீர், வடக்கு காஷ்மீர் மற்றும் மத்திய காஷ்மீர் என மூன்றாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
Remove ads
மாவட்டங்கள்
காஷ்மீர் பள்ளத்தாக்கின் நிர்வாக அலகுகள் 1968ஆம் அண்டிலும் மற்றும் 2006ஆம் ஆண்டிலும் மறுசீரமைக்கப்பட்டது.[10][11] கீழ்கண்ட மாவட்டங்கள் தற்போது காஷ்மீர் கோட்டத்தில் உள்ளது.
Remove ads
மக்கள் தொகை பரம்பல்
சமயம்
2011ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, காஷ்மீர் கோட்டத்தில் இசுலாமியர்கள் 97.16%, இந்துக்கள் 2.45%, சீக்கியர்கள் 0.18%, கிறித்துவர்கள் 0.17% மற்றும் பிறர் 0.7% ஆக உள்ளனர்.[23][24]
மொழிகள்
காஷ்மீர் கோட்டத்தில் காசுமீரி மொழி 85.28%, குஜ்ஜர் மொழியை 6.27%,. பகாரி மொழி 4.18%, இந்தி மொழி1.26% மற்றும் பிற மொழிகள் 3.01% பேசுகின்றனர். உருது மொழியும் பரவலாகப் பேசப்படுகிறது.
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads