ஜொகூர் பாரு மாவட்டம்
மலேசியாவின் ஜொகூர் மாநிலத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
(ஜொகூர் பாரு எனும் பெயரில் ஜொகூர் பாரு மாவட்டம்; ஜொகூர் பாரு நகரம் என இரு இடங்கள் உள்ளன.)

ஜொகூர் பாரு மாவட்டம், (மலாய்: Daerah Johor Bahru; ஆங்கிலம்: Johor Bahru District; சீனம்: 新山县; சாவி: جوهر بهرو) என்பது மலேசியா, ஜொகூர் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். இந்த மாவட்டம் ஜொகூர் மாநிலத்தில் ஆகத் தென்முனையில் உள்ளது.
ஜொகூர் பாரு மாவட்டத்தின் தலைநகரம் ஜொகூர் பாரு நகரம்; நிர்வாகத் தலைநகரம் இசுகந்தர் புத்திரி. மாவட்ட எல்லைகளாக மேற்கில் பொந்தியான் மாவட்டம்; கிழக்கில் கோத்தா திங்கி மாவட்டம்; வடக்கே கூலாய் மாவட்டம்; தெற்கே ஜொகூர் நீரிணை உள்ளன.
இதன் நகர்ப்புற மையங்களாக ஜொகூர் பாரு; இசுகந்தர் புத்திரி மற்றும் பாசீர் கூடாங் நகரங்கள் அமைந்து உள்ளன. இதன் மாநகர் மன்றம் ஜொகூர் பாரு நகரத்தில் உள்ளது.
Remove ads
நிர்வாகம்
ஜொகூர் பாரு மாவட்டம் நன்கு வளர்ச்சி பெற்று; ஒரு பெருநகர மயமான மாவட்டமாகும். இந்த மாவட்டத்தின் துரிதமான வளர்சியினால், மூன்று துணை மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு; மூன்று நிர்வாகங்களாகத் தனித்தனியாக நிர்வாகம் செய்யப் படுகிறது.
ஜொகூர் பாரு மாநகராட்சி
ஜொகூர் பாரு மாநகராட்சி (MBJB), ஜொகூர் பாரு மாநகர் மையத்தை நிர்வகிக்கிறது. தவிர இந்த மன்றம் லார்க்கின், தெப்ராவ், உலு திராம், பண்டார் டத்தோ ஓன், கெம்பாஸ், தம்போய், ஜொகூர் ஜெயா, பெர்மாஸ் ஜெயா ஆகிய நகர்ப் பகுதிகளையும் நிர்வகிக்கிறது.
இசுகந்தர் புத்திரி மாநகராட்சி
இசுகந்தர் புத்திரி மாநகராட்சி (MBIP), இசுகந்தர் புத்திரி நகரப் பகுதியை நிர்வகிக்கிறது. இதில் ஸ்கூடாய், கெலாங் பாத்தா, பெர்லிங், கங்கார் பூலாய், தஞ்சோங் குப்பாங் மற்றும் தஞ்சோங் பெலப்பாஸ் ஆகிய நகர்ப் பகுதிகள் அடங்கும்.
பாசிர் கூடாங் மாநகராட்சி
பாசிர் கூடாங் மாநகராட்சி, ஜொகூர் பாரு மாவட்டத்தின் கிழக்குப் பகுதிகளான பாசிர் கூடாங், மாசாய் நகரம், பண்டார் ஸ்ரீ ஆலாம், தாமான் கோத்தா மாசாய், காங் காங் மற்றும் சுங்கை திராம் போன்ற மக்கள்தொகை கொண்ட பகுதிகளை நிர்வகிக்கிறது.
Remove ads
நிர்வாகப் பகுதிகள்
ஜொகூர் பாரு மாவட்டம் 7 முக்கிம்களாகப் பிரிக்கப்பட்டு உள்ளது.[1][2][3])
மாநகரங்களும் நகரங்களும்
ஜொகூர் பாரு மாவட்டத்தில் இரு நகரங்கள் உள்ளன.
Remove ads
நகரங்கள்

- சுகூடாய் Skudai
- மாசாய் நகரம் Masai
- பாண்டான்- தெப்ராவ் Pandan
- பிளந்தோங் Plentong
- கேலாங் பாத்தா Gelang Patah
- தம்போய் Tampoi
- உலு திராம் Ulu Tiram
- கெம்பாஸ் Kempas
- கங்கார் பூலாய் Kangkar Pulai
- உலு சோ Ulu Choh
தேர்தல் முடிவுகள்
மலேசியப் பொதுத் தேர்தல், 2018
மலேசிய மக்களவையில் ஜொகூர் பாரு மாவட்டத்தின் தொகுதிகள்
Remove ads
ஜொகூர் மாநிலச் சட்டமன்றம்
மலேசியப் பொதுத் தேர்தல், 2018
ஜொகூர் மாநிலச் சட்டமன்றத்தில் ஜொகூர் பாரு மாவட்டப் பிரதிநிதிகள்; 2018-ஆம் ஆண்டு; மலேசியாவின் தேர்தல் ஆணையம் (Suruhanjaya Pilihan Raya Malaysia - Election Commission of Malaysia) வெளியிட்ட பொதுத் தேர்தல் முடிவுகள்:[4]
Remove ads
சான்றுகள்
மேலும் காண்க
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads