தாலமி பேரரசு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தாலமைக் பேரரசு (Ptolemaic Kingdom) (/ˌtɒləˈmeɪ.ɪk/; பண்டைக் கிரேக்கம்: Πτολεμαϊκὴ βασιλεία, Ptolemaïkḕ Basileía)[4] (ஆட்சிக் காலம்:கி மு 305 – கி மு 30) அலெக்சாண்டரின் இறப்புக்கு பின்னர், ஹெலனிய காலத்தில் அவரது படைத்தலைவர்கள் கிரேக்கப் பேரரசை, ஐந்தாக பிரித்துக் கொண்டு ஆண்டனர். கி மு 305இல் கிரேக்கப் படைத்தலைவரும், எகிப்தின் ஆளுநருமான முதலாம் தாலமி சோத்தர் எகிப்தில் தாலமைக் பேரரசை நிறுவினார். பண்டைய எகிப்து உள்ளடக்கிய மத்தியதரைக் கடலின் கிழக்குப் பகுதி நாடுகளை தாலமைக் பேரரசு ஆண்டது. தாலமைக் பேரரசின் தலைநகரம் அலெக்சாந்திரியா நகரம் ஆகும். இப்பேரரசின் இறுதி மன்னர் சிசேரியனை கிமு 30-இல் உரோமைப் பேரரசின் படைத்தலைவர் அகஸ்ட்டஸ் கொன்றதால், எகிப்தில் தாலமிப் பேரரசின் ஆட்சி முடிவுற்றது. எகிப்து, உரோமைப் பேரரசின் மாகாணம் ஆனாது.





இப்பேரரசு ஏழாம் கிளியோபாட்ரா காலத்தில், எகிப்தை ஆண்ட கிளியோபாட்ராவி மகன் சிசேரியன் ஆட்சிக் காலத்தில், உரோமானிய படைத்தலைவர் அகஸ்ட்டஸ் படையெடுப்பால் கி மு 30-இல் முடிவுற்றது. அப்போது எகிப்தை ஆட்சி பீடமாகக் கொண்ட ஹெலனிய கால தாலமைக் பேரரசின் காலத்தில் எகிப்து மற்றும் கிரேக்கத்தின் வரலாறுகள் நன்கு காகிதங்களில் எழுதப்பட்ட எழுத்துகள் மூலம் நன்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளதை எகிப்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.[5]
Remove ads
தாலமி பேரரசின் பரப்பு
துவக்க கால தாலமைக் பேரரசில் தற்கால எகிப்து, லிபியா, துருக்கி, இசுரேல், சைப்பிரஸ், பாலஸ்தீனம், லெபனான், சிரியா மற்றும் ஜோர்டான் நாடுகள் அடங்கியிருந்தது. பேரரசின் இறுதிக் காலத்தில் கிமு 30ல் தற்கால எகிப்து, துனிசியா மற்றும் லிபியா நாடுகள் இருந்தன.
வரலாறு
பாபிலோனில் கி மு 323இல் அலெக்சாண்டர் மறைந்த போது[6] அவரது படைத்தலைவர்களுக்குள் கிரேக்கப் பேரரசை யார் ஆள்வது என்ற பிணக்கு (தியாடோச்சி-Diadochi) ஏற்பட்டது. துவக்கத்தில் அலெக்சாண்டரின் சிறு வயது குழந்தையான நான்காம் அலெக்சாண்டரின் பிரதிநிதியாக கிரேக்கப் பேரரசை பெர்டிக்காஸ் (Perdiccas) என்பவர் வழிநடத்தினார்.
கிரேக்கப் பேரரசின் எகிப்தின் ஆளுநராக முதலாம் தாலமி சோத்தர் கி மு 323இல் நியமிக்கப்பட்டார். ஹெலனிய காலத்தில், கிரேக்கப் பேரரசை அதன் படைத்தலைவர்களும் ஆளுநர்களும் பிரித்து கொண்டதால் கிரேக்கப் பேரரசு சிதறியது. முதலாம் தாலமி சோத்தர் கிரேக்கப் பேரரசின் எகிப்து பகுதிகளுக்கு தனி உரிமையுடன் மன்னராக முடிசூட்டிக் கொண்டார். அவரது தாலமைக் வம்சம் எகிப்தை ஏறத்தாழ 300 ஆண்டுகள் ஆண்டது.
பண்டைய எகிப்திய பண்பாட்டு, நாகரீகம் மற்றும் பழக்க வழக்கங்களைப் பின்பற்றிய தாலமைக் வம்சத்தின் மன்னர்கள் தங்களை பார்வோன் எனும் அடைமொழியுடனும், இளவரசர்கள் தாலமி என்ற அடைமொழியுடனும்; இளவரசிகள் கிளியோபாட்ரா, அர்சினொ மற்றும் பெரிநைஸ் போன்ற அடைமொழிகளுடனும் அழைக்கப்பட்டனர்.
Remove ads
ரோமானியர்களின் ஆட்சி
கிளியோபாட்ராவின் இறப்பிற்குப் பின் கி மு 30இல் எகிப்தை வெற்றி கொண்ட உரோமைப் பேரரசு, எகிப்தை உரோமைப் பேரரசின் மாகாணமாக இணைத்துக் கொண்டனர்.
தாலமி பேரரசர்கள்

- தாலமி சோத்தர் -ஆட்சிக் காலம் கிமு 303 – 282
- இரண்டாம் தாலமி - கிமு 285 – 246
- மூன்றாம் தாலமி - கிமு 246 – 221
- நான்காம் தாலமி - கிமு 221 – 203 - (சகோதரி & மனைவி முதலாம் கிளியோபாட்ரா)
- ஐந்தாம் தாலமி - கிமு 203 – 181
- ஆறாம் தாலமி - கிமு 181–164 மற்றும் 163 – 145 (சகோதரி & மனைவி இரண்டாம் கிளியோபாட்ரா)
- எட்டாம் தாலமி - கிமு 170 – 163 மற்றும் 145 – 116)
- ஒன்பதாம் தாலமி - கிமு 116 –107 மற்றும் கிமு 88 – 81
- பத்தாம் தாலமி - கிமு 107 – 88 (சகோதரி & மனைவி நான்காம் கிளியோபாட்ரா)
- பதினொன்றாம் தாலமி - கிமு 80
- பனிரெண்டாம் தாலமி - கிமு 80–58 மற்றும் கிமு 55–51 (சகோதரி மற்றும் மனைவி ஐந்தாம் கிளியோபாட்ரா)
- பதிமூன்றாம் தாலமி - கிமு 51 - 47 (சகோதரி மற்றும் மனைவி ஏழாம் கிளியோபாட்ரா)
- பதிநான்காம் தாலமி - கிமு 47 – 44 (சகோதரி மற்றும் மனைவி ஏழாம் கிளியோபாட்ரா)
- சிசேரியன் - கிமு 44 – 30 (ஏழாம் கிளியோபாட்ரா-ஜூலியஸ் சீசரின் மகன்)
தாலமி பேரரசின் இராணிகள்
- முதலாம் கிளியோபாட்ரா
- இரண்டாம் கிளியோபாட்ரா - காப்பாட்சியாளராக கிமு 145 – 116
- மூன்றாம் கிளியோபாட்ரா - காப்பாட்சியாளராக கிமு 81 – 80
- நான்காம் கிளியோபாட்ரா
- ஐந்தாம் கிளியோபாட்ரா - காப்பாட்சியாளராக கிமு 58 – 57 மற்றும் 58 – 55
- ஆறாம் கிளியோபாட்ரா - காப்பாட்சியாளராக கிமு 58
- நான்காம் அர்சினோ - காப்பாட்சியாளராக
- ஏழாம் கிளியோபாட்ரா - காப்பாட்சியாளராக கிமு 51 – 30
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
மேல் வாசிப்பிறகு
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
